Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

விஜய்க்கும் முரசொலி செல்வத்திற்கும் இப்படியொரு நட்பா? சங்கீதா அஞ்சலி செலுத்தியதன் பின்னணி என்ன?

Subscribe to Oneindia Tamil

சென்னை: மறைந்த முரசொலி செல்வத்திற்கும் விஜய் குடும்பத்திற்கும் எந்த மாதிரியான நட்பு உள்ளது என்பது குறித்து அவர் மறைவுக்கு உடனே விஜய் மனைவி சங்கீதா அஞ்சலி செலுத்தியது ஏன் என்பது குறித்து உருக்கமான தகவல்கள் கிடைத்துள்ளன.

முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மருமகளும், முதல்வர் ஸ்டாலினின் சகோதரி செல்வியின் கணவர் முரசொலி செல்வம் மாரடைப்பு ஏற்பட்டு காலமானார். செல்வம் , முரசொலியின் ஆசிரியராக இருந்து வந்தார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கு மேலாக சிலந்தி என்ற புனைப் பெயரில் கட்டுரை எழுதி வந்தார்.

murasoli selvam vijay dmk

இவர் பெங்களூரில் இருந்தபடியே முரசொலியை நடத்தி வந்தார். இறக்கும் தருவாயில் கூட கட்டுரை எழுத குறிப்புகளை எடுத்த செல்வம் சற்று கண்ணயர நாற்காலியில் சாய்ந்தார். அப்போது திடீரென அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மயங்கினார்.

உடனே அவரை பெங்ளூரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் ஏற்கெனவே உயிரிழந்துவிட்டார் என மருத்துவர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அவருடைய உடல் சென்னை கோபாலபுரத்திற்கு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு வரப்பட்டது. தங்கையின் கணவர் இறந்த செய்தி கேட்டு முதல்வர் ஸ்டாலின் துடித்து போய்விட்டார்.

அமெரிக்காவில் இருக்கும் மு.க.அழகிரியும் உடைந்து போய்விட்டார். இந்த நிலையில் செல்வத்தின் உடல் சென்னை கோபாலபுரத்தை அடைந்ததும் முதல்வர் ஸ்டாலின் முதல் மாலையை அணிவித்து மாமா மாமா என கதறி அழுதார். இதையடுத்து அருகில் இருந்த உதயநிதிக்கும் அழுகை வந்துவிட்டது. ஒருவழியாக அவர்களை தேற்றி உடனிருந்தவர்கள் அங்கிருந்து அழைத்து வந்தனர்.

செல்வியின் முகத்தை பார்க்கும் போதெல்லாம் ஸ்டாலின் அழுது கொண்டே இருந்தார். அமெரிக்காவில் இருந்து வீடியோ கால் மூலம் செல்வத்தின் முகத்தை பார்த்து விம்மி வெடித்தார் மு.க.அழகிரி! செல்வத்தின் உடலுக்கு ஏராளமானோர் அஞ்சலி செலுத்தினர். முதல் ஆளாக வந்தவர் ஓபிஎஸ். இரவு 9 மணி வரை அந்த இடத்திலேயே இருந்தார்.

அது போல் ரஜினிகாந்த் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்திருந்தனர். இந்த நிலையில் தவெக கட்சித் தலைவரும் நடிகருமான விஜய்யின் மனைவி சங்கீதா ஓடி வந்து அஞ்சலி செலுத்தினார். விஜயகாந்த் மறைந்த போது கூட விஜய் மட்டுமே சென்று அஞ்சலி செலுத்தினார். அப்படியிருக்கும் போது செல்வத்திற்கு, சங்கீதா செலுத்தியது ஏன் என்ற கேள்வி எழுந்தது.

விஜய்யின் திரைத் துறை தொடர்பான நிகழ்ச்சிகளில் கூட அவர் பங்கேற்பதில்லை. இதையடுத்து செல்வத்தின் குடும்பத்தினரை கட்டியணைத்து சங்கீதா ஆறுதல் தெரிவித்தார். மேலும் முதல்வர் ஸ்டாலினுக்கும், எம்பி கனிமொழிக்கும் சங்கீதா ஆறுதல் தெரிவித்திருந்தார்.

அடுத்த நாள் விஜய்யின் தந்தையும் இயக்குநருமான எஸ்ஏ சந்திரசேகர் நேரில் வந்து முரசொலி செல்வத்தின் உடலுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பசிய அவர், "40 ஆண்டு கால நண்பரை இழந்துவிட்டேன். ஒரு பாரம்பரியமான அரசியல் குடும்பத்தில் இருந்தும் கூட தன்னை ஒரு அரசியல்வாதியாக முரசொலி செல்வம் என்றும் காட்டிக் கொண்டதே இல்லை.

பழகுவதற்கு மிகவும் இனிமையானவர். எளிமையான மனிதர். ஒரு பத்திரிகையாளன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு உதாரணமாக திகழ்ந்தார். கருணாநிதியுடன் அறிமுகம் செய்து அவருடன் நெருங்கி பழகும் வாய்ப்பை எனக்கு ஏற்படுத்திக் கொடுத்தது செல்வம்தான். அது போல் கருணாநிதியுடன் ஒரு படத்திலாவது பணியாற்றி வேண்டும் என நினைத்த போது அவரிடம் கதை சொல்ல வைத்தது செல்வம்தான்.

நீதிக்கு தண்டனை என்ற படத்தில் கருணாநிதியுடன் இணைந்தேன். அதன் பிறகு கருணாநிதியுடன் தொடர்ந்து 3 படம் செய்தேன். அத்தனை படங்களிலும் உடனிருந்தவர் முரசொலி செல்வம்தான். அப்படிப்பட்ட ஒரு நல்ல நண்பரை இழந்துவிட்டேன் என எஸ்ஏசி உருக்கமாக பேசினார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+