தை 1 தான் தமிழ் புத்தாண்டு.. தமிழ் அறிஞர்கள் சொன்னது ஏன் தெரியுமா? முழு விவரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ் மாதங்களில், தை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டாக தமிழ் அறிஞர்கள் கொண்டாட அறிவுறுத்தியிருந்தனர். அதற்கேற்ப கடந்த 2008ல், அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி, இனி தமிழ் புத்தாண்டு தை 1ம் தேதியில் கொண்டாடப்படும் என்று அறிவித்தார். இதற்கு தமிழ் அறிஞர்கள் மட்டுமல்ல அறிவியல் காரணங்களும் உள்ளன.

நமக்கு தெரிந்தவரை, தமிழ் மாதங்கள் என்பது சித்திரை தொடங்கி பங்குனி வரைதான். இதில் சித்திரை முதலில் வருகிறது என்பதாலே, அது தமிழ் புத்தாண்டு என்று ஆகிவிடாது.

pongal 2026 Tamil New Year tamil nadu

அறிஞர்கள் சொல்வது என்ன?

கடந்த 1921ம் ஆண்டு சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தனித்தமிழ் இயக்கத்தின் தந்தை மறைமலை அடிகள் தலைமையில், தமிழறிஞர்கள் மாநாடு நடைபெற்றது. இதில் தமிழ்த்தென்றல் திரு.வி.க, தமிழ்ச்செம்மல் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர் எஸ். சோமசுந்தர பாரதியார், கி.ஆ.பெ.விஸ்வநாதம், உமாமகேஸ்வரனார் என 500க்கும் அதிகமான தமிழறிஞர்கள் பங்கேற்றிருந்தனர்.

இந்த 500 அறிஞர்கள் ஒன்றிணைந்து விவாதித்து மூன்று முக்கிய முடிவுகளை எடுத்தனர். அதன்படி, திருவள்ளுவர் பிறந்த ஆண்டு கிமு 31 எனக் கொண்டு, அதனுடன் ஆங்கில ஆண்டு கூட்டி, திருவள்ளுவர் ஆண்டு என்று அழைக்க வேண்டும். இரண்டாவது, தை மாதத்தின் முதல் நாளை தமிழர்களுக்கான புத்தாண்டு என்று கொண்டாடுவது. மூன்றாவது, சித்திரை - பங்குனி வரையிலான தமிழ் மாத பெயர்கள் அப்படியே தொடரலாம்.. ஆனால், புத்தாண்டு தையில் தொடங்க வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது.

சங்க இலக்கியங்களிலும் தை மாதத்தின் சிறப்பை பறைசாற்றும் பல பாடல்கள் இருக்கின்றன. இவை தை மாதமெ ஆண்டின் தொடக்கமாக இருக்கலாம் என்பதற்கான சான்றுகளாக கருதப்படுகின்றன.

சங்க பாடல்களில் சான்று

'தைஇத் திங்கள் தண்கயம் படியும்' - நற்றிணை

'தைஇத் திங்கள் தண்ணிய தரினும்' - குறுந்தொகை

'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ' - கலித்தொகை

'தைத் திங்கள் தண்கயம் படியும்'

புறநானூறு மற்றும் ஐங்குறுநூறு ஆகிய நூல்களிலும் தை மாத நீராடல் மற்றும் அதன் முக்கியத்துவம் விவரிக்கப்பட்டுள்ளது. நற்றிணை பாடலை பொறுத்தவரை, தை மாதத்தின் அதிகாலையில் குளிர்ந்த நீர் நிலைகளில் மகளிர் நீராடி, நோன்பு நோற்பதை இந்த பாடல் விளக்குகிறது. இது தை நீராடல் என்று அழைக்கப்படுகிறது. ஒரு புதிய சுழற்சியின் தொடக்கத்தில், உடல் மற்றும் மனத்தூய்மைக்காக மேற்கொள்ளப்படும் இந்த வழிபாடு, இந்த மாதத்தின் தொடக்க சிறப்பை குறிப்பிடுகிறது.

'தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ'

கலித்தொகை பாடலில், தை மாதத்தில் நீராடி உன்னுடைய தவத்தை தொடங்குவாயோ? என்று கேள்வி எழுப்பும் இந்த பாடல்.. நற்செயல்களை தொடங்குவதற்கு தை மாதமே மிகச் சிறந்த காலம் என்பதை கோடிட்டு காட்டுகிறது. எந்த ஒரு புதிய காரியத்தையும், ஆண்டின் தொடக்கத்தில் தொடங்குவதை மரபு என்பதால், இது தை மாதத்தின் சிறப்பை விளக்கி, அந்த மாதமே ஆண்டின் தொடக்கம் அதாவது புத்தாண்டு என்று தெளிவுபடுத்துகிறது.

ஐங்குறுநூறு பாடல்

ஐங்குறுநூறு பாடலை பொருத்தவரையில், மருதத் திணையில் வரும் பாடல்கள்.. அறுவடை முடிந்து நிலம் செழிப்பாக இருக்கும் தை மாதத்தில், மக்கள் மகிழ்ச்சியுடன் நீராடி தானியங்களை அள்ளி வழங்கி, புது வாழ்வை தொடங்குவதை குறிக்கிறது.

பரிபாடலில், மார்கழி நோன்பின் தொடர்ச்சியாக.. தை மாத நீராடல் விவரிக்கப்படுகிறது. உலகம் செழிக்கவும், மழை பொழியவும் தை மாதத்தில் மேற்கொள்ளப்படும் இந்த நோன்பு, கால சுழற்சியின் மங்களத் தொடக்கம் என்று தமிழ் அறிஞர்கள் பாடுகிறார்கள்.

இளவேனில் காலம்

சங்க இலக்கியங்களில், இளவேனில் காலத்தில் தொடக்கமாக கூறுகின்றன. குளிர்காலம் முடிந்து வசந்தம் பிறக்கும் தை மாதமே, இந்த மாற்றத்தின் அடையாளம். அக்காலங்களில் வேளாண்மையே பிரதான தொழில் என்பதால், தை மாதத்தில் அறுவடை நடக்கும். அறுவடை முடிந்த பின்னர்தான் கையில் செல்வம் சேரும். இதை வைத்துதான் புதிய கணக்குகளை தொடங்கவும், திருமணங்களை செய்யவும், நாட்கள் குறிக்கப்படும். எனவே, தை மாதம் என்பது ஆட்டின் தொடக்கமாக கருதப்படுகிறது.

இதன் அடிப்படையில்தான் அப்போதைய முதலமைச்சர் மு.கருணாநிதி தை 1ம் தேதியை தமிழ் புத்தாண்டு என்று அறிவித்தார். ஆனால், பின்னர் அதிமுக ஆட்சிக்காலத்தில் சித்திரை 1ம் தேதியே தமிழ் புத்தாண்டு என்று மாற்றப்பட்டது.

அறிவியல் காரணங்கள்

முழு ஆண்டை இரண்டாக பிரித்துக் கொள்ளலாம். அதாவது, சூரியன் வடக்கு நோக்கி செல்வதை உத்தராயணக் காலம் என்றும், தெற்கு நோக்கி செல்வதை தட்சிணாயன காலம் என்றும் பிரிக்கப்படுகிறது. தை 1ம் தேதி சூரியன் வடக்கு நோக்கி செல்கிறது. உத்தராயணக் காலம் தொடங்கினால், அது விளைச்சலை செழிக்க வைக்கும். எனவேதான் தை 1ம் தேதி தமிழ் புத்தாண்டாக கொண்டாடப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+