மானமே போயிடும்.. பிரச்சனைகள் ஏராளம்! ஆன்லைன் செயலியில் மட்டும் கடன் வாங்காதீங்க மக்களே! உஷார்
சென்னை: இன்றைய சூழலில் ஆன்லைன் செயலியில் கடன் வாங்குவது என்பது மிகவும் எளிமையான ஒன்றாக இருக்கிறது. இதனால் நிறைய பேர் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கி பயன்படுத்துகின்றனர். இருப்பினும் ஆன்லைன் செயலியில் கடன் வாங்கினால் ஏற்படும் பிரச்சனைகள் குறித்து பலருக்கும் தெரியவில்லை. இதனால் அவர்கள் கடன் வாங்கிவிட்டு பெரும் துன்பத்துக்கு உள்ளாகி வரும் நிலையில் அதில் இருந்து தப்புவது எப்படி என்பது பற்றிய விபரம் வருமாறு:
பணம்.. இது இல்லாமல் நம்மால் உயிர் வாழவே முடியாது. பணம் இன்றி நம்மால் எந்த பொருளையும் வாங்க முடியாது. மேலும் சமூகத்தில் மரியாதையை பெற்று கொடுக்கும் மதிப்புமிக்க காகிதமாக பணம் மாறியுள்ளது. இதனால் தான் படித்து முடித்த ஆண்களும், பெண்களும் தங்களுக்கு பிடிக்கிறதோ இல்லையோ ஏதேனும் ஒரு பணியில் சேர்ந்து பணம் சம்பாதிக்கின்றனர்.

சிலர் காலம், நேரம் பாராமல் கூட பணம் சம்பாதிக்க உழைத்து வருகின்றனர். அதோடு ஒவ்வொருவரும் தங்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட முறைகளில் பணம் வரும் வழியை கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர். இப்படி ஓடிஓடி, நேரம் உழைத்தாலும் பலருக்கும் ஏதேனும் ஒரு சந்தர்ப்பத்தில் பொருளாதார சிக்கல் ஏற்பட்டு விடுகிறது.
இத்தகைய சூழலில் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் பணஉதவி செய்கின்றனர். இருப்பினும் தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்திக்கும்போது அவர்களும் பணஉதவி செய்யாமல் கைவிரிக்கிறார்கள். இத்தகைய சூழலில் சிலர் தங்களது வீடு, நகை, நிலத்தை அடகு வைத்து கடன் பெறுகின்றனர். இது ஒருபுறம் இருக்க தற்போது ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கும் டிரெண்ட் என்பது உருவாகி உள்ளது.
இதற்காகவே தற்போது பல நிறுவனங்கள் ஆன்லைன் செயலியில் கடன் வழங்கி வருகின்றனர். வங்கி வாசலில் காத்திருந்து கடன் பெறுவதை விட ஆன்லைன் செயலில் கடன் வாங்குவது மிகவும் எளிதானதாக மாறியுள்ளது. அதாவது ஆதார் கார்டு, பார்ன் கார்டு, செல்போன் எண் உள்ளிட்ட விபரங்களை வழங்கி ஆன்லைன் செயலியில் உடனடியாக பெரும் தொகை கடனாக கிடைக்கிறது. ஆனால் அதன் பின்னணியில் வரும் ஆபத்து என்பது நம் உயிரையே பறிக்கும் அளவுக்கு மிகவும் மோசமானது.
ஆன்லைன் செயலி மூலம் கடன் வாங்கினால் உரிய முறையில் நாம் செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் ஆன்லைன் செயலி நிறுவனங்கள் தங்களின் வேலையை காட்ட துவங்கி விடுகின்றன. அதாவது வங்கியில் கடன் வாங்கி செலுத்தாமல் போனால் நாம் அடகு வைத்த வீடு, நிலம் உள்ளிட்டவற்றை தான் இழக்க நேரிடும். இதனை இழந்தாலும் கூட நம்மால் அடுத்த சில ஆண்டுகளில் சம்பாதித்து மீண்டும் அந்த சொத்துகளை வாங்கி கொள்ளலாம். ஆனால் ஆன்லைன் செயலில் கடன் வாங்கிவிட்டு அதனை செலுத்தாமல் இருந்தால் நமது மானமே போய்விடும்.
அதாவது கூகுள் ப்ளே ஸ்டோர் அல்லது ஆப்பிள் ஸ்டோரிலிருந்து நாம் ஆன்லைன் செயலியை டவுன்லோட் செய்யும்போது நமது செல்போனில் உள்ள ‛போன் புக்' உடன் தொடர்பு ஏற்படுத்த அனுமதி கேட்கும். கடன் பெறும் நோக்கில் நாம் இதற்கு அனுமதி கொடுத்துவிடுவோம். இவ்வாறு செய்வதன் மூலம் நமது செல்போனில் உள்ள அனைவரின் தொடர்பு எண்களையும் அந்த செயலி பெற்றுவிடும். அதன்பிறகு நாம் கடன் செலுத்தாமல் இருந்தால் தொடர்ந்து அவர்கள் நமக்கு போன் செய்து பணம் கேட்பார்கள். நாம் நமது பிரச்சனைகளை கூறினாலும் அவர்கள் அதற்கு செவிசாய்ப்பது இல்லை. நாளுக்கு நாள் கடன் செயலில் இருந்து வரும் போன்கால் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்லும்.
இதனால் நமக்கு பெரிய அளவில் மனஉளைச்சல் உள்ளாகும். இருப்பினும் கையில் பணம் இல்லாமல் கடன் செலுத்தாத பட்சத்தில் அவர்கள் நமது செல்போனில் இருக்கும் மற்றவர்களின் தொடர்பு எண்களுக்கு நமது பார்ன்கார்டு, ஆதார்கார்டு உள்ளிட்டவற்றை பகிர்ந்து கடன் வாங்கியது பற்றி வாட்ஸ்அப்களில் அனுப்புவார்கள். அதோடு சில நிறுவனங்கள் இன்னும் எல்லை மீறி ஆபாசமான வார்த்தைகளையும், ஆபாசமாக நமது படங்களை சித்தரித்து பயன்படுத்துவதாக கூறப்படுகிறது. இதனால் நமது மானமே போய்விடும்.
இந்த பிரச்சனைகளை தற்போது பல பேர் சந்தித்து வருகின்றனர். இதனை வெளியே சொல்ல முடியாத நிலையில் மனஅழுத்தத்துக்கு உள்ளாகி சிலர் தற்கொலை செய்துள்ளதோடு, பலர் தற்கொலை முயற்சியும் மேற்கொண்டுள்ளதையும் நாம் அன்றாட செய்திகளில் படித்திருப்போம். இதனால் முடிந்தவரை கடன் வாங்காமல் வாழ நாம் பழக வேண்டும்.
மாறாக ஏதேனும் மருத்துவம் சாரந்த அவசர தேவைக்கு கடன் வாங்க வேண்டிய சூழல் இருந்தால் தெரிந்தவர்கள் அல்லது வங்கியில் கடன் வாங்கலாம். அதோடு அந்த கடனையும் குறித்த காலத்துக்குள் முறையாக செலுத்திவிட வேண்டும். இதை தவிர்த்து ஆன்லைன் செயலில் எளிதாக கடன் கிடைக்கிறது என நினைத்து கடன் பெற்றால் நாம் மேற்கூறிய பிரச்சனைகளை சந்திக்க நேரிடும் என்பதை மறக்காமல் கவனத்தில் கொண்டு உஷாரா இருங்க மக்களே.
-
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
ஆரம்பமே அலங்கோலம்.. பெரம்பூர் விஜய் பிரச்சாரத்தில் தவெகவினரால் அடுத்தடுத்து அசம்பாவிதம் -
Gold Price Today: தங்கம் விலை அதிரடியாக உயர்ந்தது.. காலையில் சரிந்து மாலையில் எகிறியது! நகை பிரியர்கள் கலக்கம்! -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை! -
தவெக விஜய்க்கு சான்ஸே இல்லை.. 3வது இடம்தான்.. ஆனால் அதிலும் பெரிய சறுக்கல்.. சுடசுட வெளியான சர்வே -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
மாதம்பட்டி ரங்கராஜன் டிஎன்ஏ டெஸ்ட் ரிசல்ட் வந்தாச்சு..! ஜாய் கிரிஸில்டா குழந்தை விஷயத்தில் வெளியான தகவல்! -
நான் ஒருமுறை குடிச்சேன்.. ஐஏஎஸ் ஆக வேண்டிய பொண்ணு! வாழ்க்கை மாறிய காரணம்! நடிகை கஸ்தூரி ஓபன் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
இததான் ஒட்டிகிட்டு இருந்தீங்களா? அமெரிக்காவை லெஃப்ட் ஹேண்ட் டீல் செய்யும் ஈரான்! கோடிக்கணக்கில் லாஸ் -
விஜய்க்கு பெரம்பூரில் பிரபல நடிகை வைத்த செக்.. பிரச்சாரம் தொடங்கும் முன்பே இப்படியா பஞ்சாயத்து? -
நேத்து வந்த ஸ்ரீநாத்துக்கு சீட்.. தூத்துக்குடி அஜிதா ஆக்னல் செய்த சம்பவம்! சொதப்பிய விஜய்!












Click it and Unblock the Notifications