அடுத்த மேட்ச்! கிரவுண்டுக்குள்ள கால் வைக்கிறதுக்கு முன்னாடி இதை பண்ணுங்க! சிஎஸ்கேவிற்கு போன வார்னிங்
சென்னை: நேற்று பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வென்று இருந்தாலும் கூட சிஎஸ்கே அணி முக்கியமான ஒரு விஷயத்தில் மோசமாக சொதப்பியது.
பெங்களூருக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே அணி திரில் வெற்றி பெற்றுள்ளது.
சிஎஸ்கே பெங்களூர் அணிகளுக்கு இடையிலான ஐபிஎல் போட்டி சின்னசாமி மைதானத்தில் விறுவிறுப்பாக நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் இறங்கிய சிஎஸ்கே அணி 226/6 ரன்கள் எடுத்தது
தொடக்கத்தில் இருந்து அதிரடி காட்டிய சிஎஸ்கே அணியில் ருத்துராஜ் மட்டும் 3 ரன்களுக்கு அவுட்டாக, இன்னொரு பக்கம் டாப் ஆர்டர் வீரர்கள் அதிரடியாக ஆடினார்கள். ஒரு பக்கம் 45 பந்தில் கான்வே 83 ரன்கள் எடுத்தார்.

இவர் 6 சிக்ஸ், 6 பவுண்டரி அடித்தார். இன்னொரு பக்கம் ரஹானே வெறும் 20 பந்தில் 37 ரன்கள் எடுத்தார். இதில் 2 சிக்ஸ், 3 பவுண்டரி அடக்கம்.
அதேபோல் மிடில் ஓவர்களில் அதிரடி காட்டிய சிவம் துபேவும் 27 பந்தில் 52 ரன்கள் எடுத்தார். இதில் 5 பவுண்டரி 2 சிக்ஸ் அடக்கம்.
இதையடுத்து களமிறங்கிய ராயுடு 6 பந்தில் 14 ரன்கள் எடுத்தார். 9 பந்தில் 19 ரன்கள் எடுத்தார். அவர் 2 சிக்ஸ் அடிக்க சிஎஸ்கே அணி 226-6 ரன்கள் எடுத்தது.
பெங்களூர் பேட்டிங்: இதையடுத்து இறங்கிய பெங்களூர் அணியில் கோலி 4 பந்தில் வெறும் 6 ரன்கள் எடுத்து ஆகாஷ் சிங் பந்தில் அவுட் ஆனார்.
ஆனால் அதன்பின் ஆர்சிபி டாப் ஆர்டர் வீரர்கள் சிஎஸ்கே பவுலர்களை துவைத்து எடுக்க தொடங்கினார்கள். ஆர்சிபி கேப்டன் டு பிளசிஸ் 33 பந்தில் 62 ரன்கள் எடுத்தார். இவர் 5 பவுண்டரி, 4 சிக்ஸர்களை அடித்தார்.
இன்னொரு பக்கம் மேக்ஸ்வெல் 36 பந்தில் 76 அடித்தார். இவர் 8 சிக்ஸ், 3 பவுண்டரி அடித்தார்.
இவர்கள் இருவரும் களத்தில் இருந்தவரை ஆட்டம் பெங்களூர் வசம்தான் இருந்தது. 12.1 ஓவரில் தீக்சனா ஓவரில் தோனியிடம் கேட்ச் கொடுத்து ஆனார். இந்த ஓவரில் விழுந்த விக்கெட்தான் மொத்தமாக மேட்சை மாற்றியது.

இதையடுத்து வரிசையாக விக்கெட் விழ, கடைசி 2 பந்தில் 11 ரன்கள் அடிக்க வேண்டிய நிலையில் ஆர்சிபி அணி 2 ரன்கள் மட்டுமே அடித்து 218-8 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தது. 8 ரன்கள் வித்தியாசத்தில் சிஎஸ்கே வென்றது.
சிஎஸ்கே மோசம்: நேற்று போட்டியில் சிஎஸ்கே வென்று இருந்தாலும்.. முக்கியமான சமயத்தில் அடுத்தடுத்து வீரர்களை கேட்சுகளை விட்டனர். முக்கியமாக டு பிளசிஸ் இரண்டு முறை கேட்ச் கொடுத்து அதை இரண்டு முறையும் மகேஷ் தீக்சனா மிஸ் செய்தார்.
நேற்று மட்டும் சிஎஸ்கே வீரர்கள் 4 முறை கேட்சை மிஸ் செய்தனர். முக்கியமான நேரங்களில் கேட்சை விடுவது சிஎஸ்கே அணிக்கு எதிராக திரும்பியது. நேற்று வந்த கேட்சுகளை சரியாக பிடித்து இருந்தாலே சிஎஸ்கே அணி முன்கூட்டியே வென்று இருக்கும்.

ஆனால் டு பிளசிஸ் உள்ளிட்ட வீரர்களின் கேட்சை மிஸ் செய்ததால் சிஎஸ்கே அணி கடைசி வரை ஆட்டத்தை இழுத்து சென்றது. தோனி உட்பட நேற்று பலரும் கேட்சை மிஸ் செய்தனர்.
எப்போதும் கோபம் அடையாத தோனியே நேற்று மைதானத்தில் மொயின் அலியை பார்த்து கோபம் அடையும் அளவிற்கு நிலைமை மோசமானது.
அடுத்த போட்டியில் சிஎஸ்கே அணி மைதானத்திற்கு வரும் முன் முறையாக கேட்ச் பயிற்சி செய்துவிட்டு வர வேண்டும் என்று இப்போதே ரசிகர்கள் அறிவுறுத்த தொடங்கி உள்ளனர்.
முக்கியமாக மகேஷ் தீக்சனா முறையாக பயிற்சி எடுத்துவிட்டு பீல்டிங் செய்ய வேண்டும். நேற்று சிஎஸ்கே பீல்டிங் சொதப்பலாக இருந்தது என்று நெட்டிசன்கள் சிஎஸ்கே அணிக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.
-
"எங்க சின்ன தல சுரேஷ் ரெய்னா மாதிரியே இருக்கு" வெற்றிக்கு பின் சிஎஸ்கே ரசிகர்களின் வெறித்தன மீம்ஸ்! -
தோனியை பார்த்துதான் எல்லாமே.. இந்த வெற்றியை அவருக்கு அர்ப்பணிக்கிறேன்.. முகுல் சவுத்ரி நெகிழ்ச்சி! -
சூப்பர்மேன் போல் பறந்து பிடித்த சர்பராஸ் கான்.. ஸ்டன்னான சேப்பாக்கம்.. டெல்லி கோச் கொடுத்த ரியாக்சன் -
பணிகள் கிட்டத்தட்ட ஓவர்.. இனி 4 வழி இல்லை.. சென்னையின் முக்கிய பகுதியில் மிகப்பெரிய 6 வழி சாலை -
தங்கத்தை மிஞ்சப்போகும்.. பலரின் வீட்டிலேயே இருக்கும் ஒரு குட்டி உலோகம்.. அடிக்குது ஜாக்பாட்! -
தென்னிந்திய தர்காக்கள் மற்றும் பள்ளி வாசல்கள் சங்கம் அதிமுகவிற்கு ஆதரவு! -
கடலூரில் நாளை விஜய் பிரச்சாரத்தால் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுப்பு.. நடந்தது என்ன? -
அமெரிக்காவை அலறவிட்ட பிரான்ஸ்! 129 டன் தங்கத்தை மீட்க "கோல்டன்" ஸ்கெட்ச்.. அப்போ இந்தியா பிளான் என்ன -
சிறகடிக்க ஆசை: விஜயாவின் மாற்றம்! முத்து, மீனாவை பெருமையாக பேசுறாங்களே! குடும்பத்தில் கொண்டாட்டம் -
ரஷ்யா மாஸ்டர் பிளான்: இந்தியாவுக்கு ஜாக்பாட்.. சீனா உதவி.. ஒன்று கூடிய BRICS நாடுகளால் டிரம்ப் ஷாக்! -
மொத்தமாக மாறிய டிரம்ப்.. ஈரான் விஷயத்தில் தொனியை மாற்றிய அமெரிக்க அதிபர்.. அடேங்கப்பா! -
2 வெர்ஷன்.. ஜனநாயகன் படம் இணையத்தில் லீக்கானது எப்படி? அதிகம் பலன் அடைவது யார்? அந்த மர்ம கை












Click it and Unblock the Notifications