ஸ்டாலின் வாழ்த்திய பின்.. அந்த பதிவினை ராணுவம் நீக்கியதன் பின்னணி என்ன? கனிமொழி கேள்வி
சென்னை: இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்ற தமிழகத்தின் கன்னியாகுமரியைச் சேர்ந்த பெண்ணுக்கு தமிழக முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்நிலையில ஸ்டாலின் வாழ்த்திய பின் இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் தனது ட்விட் பதிவினை நீக்கியது ஏன் என்று திமுக எம்பி கனிமொழி கேள்வி எழுப்பி உள்ளார்
தமிழ்நாட்டின் கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா இந்திய ராணுவத்தின் மதிப்பிற்குரிய ராணுவ செவிலியர் சேவையில் மேஜர் ஜெனரல் என்ற மதிப்புமிக்க பதவிக்கு உயர்ந்துள்ளார். அவருக்கு பாராட்டு தெரிவிக்கும் விதமாக துருவா கமாண்ட் பதிவிட்டிருந்தது. இதனை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தது.
தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை @NorthernComd_IA ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன?
— Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) August 2, 2023
Why should @NorthernComd_IA delete the tweet of The Chief Minister of Tamil Nadu congratulating the… https://t.co/yoz2KD3jdW
அதில் கோவிட் தொற்றின் போது நிலைமையைக் கையாள்வது உட்பட அவரது 38 ஆண்டுகால நர்சிங் வாழ்க்கையில் தளராத ஆர்வத்துடன் தேசத்திற்கு சேவை செய்தவர் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா என்று வாழ்த்தி இருந்தது.
இதேபோல் கன்னியமாகுரி மாவட்டத்தில் இருந்தும், ஏன் தமிழ்நாட்டில் இருந்து ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக உயர்ந்த முதல் பெண் என்றும் பாராட்டி இருந்தது.
இந்நிலையில் இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவியேற்றுள்ள கன்னியாகுமரியை சேர்ந்த இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோரா-வுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்தார். அவர் தனது பதிவில், பெண்களால் முன்னேறக் கூடும் - நம்
வண்தமிழ் நாடும் என்னடும்! மேஜர் ஜெனரல் இக்னேஷியஸ் டெலோஸ் ஃப்ளோராவின் சிறப்பான சாதனைக்கு வாழ்த்துகள்! தமிழ்நாட்டின் கன்னியாகுமரியைச் சேர்ந்த முதல் பெண்மணி மேஜர் ஜெனரல் பதவியை எட்டியது நம்பமுடியாத சாதனை மைல்கல். அவரது அற்புதமான சேவை மற்றும் அர்பணிப்பான செயல்பாடுகளுக்கு வணக்கங்கள் " என்று கூறியிருந்தார்.

இந்நிலையில் இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் அந்த பதிவினை நீக்கிவிட்டது.இது பற்றி ட்விட்டரில் திமுக எம்பி கனிமொழி வெளியிட்ட பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்டோ ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி உள்ளார்.












Click it and Unblock the Notifications