மே மாதம் வந்துவிட்டது.. ஹவுஸ் லோன், ஆட்டோமொபைல் லோன் இருக்கிறதா? உடனே இதை பண்ணுங்க.. சிக்கல்
சென்னை: ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை மாற்றி உள்ள நிலையில் அந்த மாற்றங்கள் இன்று முதல் அமலுக்கு வருகின்றன. இந்த வட்டி விகித மாற்றங்கள் ஏப்ரலில் செய்யப்பட்டாலும் மே மாதம் வசூலிக்கப்படும் இஎம்ஐயில் அமலுக்கு வரும்.
ஆனால் பல நிறுவனங்கள் இதுவரை இந்த மாற்றங்களுக்கான சார்ட்டை வெளியிட்டாலும் கடனாளிகளுக்கு அதை நோட்டிப்பை செய்யவில்லை. அதாவது கடனாளிகள் இந்த மாற்றம் காரணமாக இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்துக்கொள்ள முடியும். ஆனால் வங்கிகள் இதில் இன்னும் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்கவில்லை.
கடனாளிகள் விருப்பம் இன்றி இதில் வங்கிகள் முடிவு எடுக்க கூடாது என்ற விதி உள்ளது. இந்த நிலையில் HDFC உள்ளிட்ட சில வங்கிகள் கடனாளிகளிடம் விருப்பத்தை கேட்டு இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைத்து உள்ளது. ஆனால் சில வங்கிகள் குறைக்கவில்லை. உங்கள் வங்கி இஎம்ஐ அல்லது கடன் செலுத்தும் காலம் இரண்டில் ஒன்றை குறைக்காத பட்சத்தில் நீங்கள் உங்கள் கிளையில் ஒரு கடிதம் எழுதி இரண்டில் ஒன்றை.. உங்களுக்கு விருப்பமான ஒன்றை குறைக்கும்படி கூற வேண்டும்.

ரிசர்வ் வங்கி மாற்றம்
ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் (பிபி) குறைப்பதாக அறிவித்து உள்ளது. அதாவது 6 சதவீதமாக குறைத்து உள்ளது. இந்த அறிவிப்பைத் தொடர்ந்துபல முன்னணி பொதுத்துறை வங்கிகள், அவற்றின் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட பெஞ்ச்மார்க் கடன் விகிதங்களை (RBLR) அதற்கேற்ப மாற்றி அமைத்துள்ளன.
இந்த மாற்றம் மூலம் வீட்டுக் கடன்கள், தனிநபர் கடன்கள் மற்றும் ரெப்போ உடன் இணைக்கப்பட்ட கடன்கள் குறைக்கப்பட்டு உள்ளன. பல்வேறு வங்கிகளில் குறைக்கப்பட்ட வீட்டு கடன் மாற்றங்களை இங்கே பார்க்கலாம்.
SBI முந்தைய வட்டி விகிதம் 9.15%, புதிய வட்டி விகிதம் 8.80%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,609, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹976
HDFC வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.25%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945
ஐசிஐசிஐ வங்கி முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.85%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,712, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹958
பாங்க் ஆஃப் பரோடா முந்தைய வட்டி விகிதம் 9.10% , புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983
Axis Bank முந்தைய வட்டி விகிதம் 9.30% , புதிய வட்டி விகிதம் 8.95%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,919, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹933
பஞ்சாப் நேஷனல் வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.20%, புதிய வட்டி விகிதம் 8.90%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,816, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹945
Kotak Mahindra வங்கியின் முந்தைய வட்டி விகிதம் 9.35%, புதிய வட்டி விகிதம் 9.00%, ₹50 லட்சத்துக்கான EMI (20 ஆண்டுகள்) ₹46,022, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹910
யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா முந்தைய வட்டி விகிதம் 9.10%, புதிய வட்டி விகிதம் 8.75%, ₹50 லட்சத்திற்கான EMI (20 ஆண்டுகள்) ₹45,506, ரெப்போ ரேட் மாற்றத்திற்கு பின் EMI குறைப்பு ₹983
ரெப்போ குறைப்பு
இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) தற்போதைய நிதி ஆண்டிலேயே ரெப்போ விகிதத்தை 100 அடிப்படை புள்ளிகள் (பிபிஎஸ்) குறைக்கும் என்று பொருளாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். ரிசர்வ் வங்கி, கவர்னர் சஞ்சய் மல்ஹோத்ராவின் சமீபத்தில் ரெப்போ விகிதத்தை இரண்டு முறை தலா 25 பிபிஎஸ் குறைத்து அறிவிப்பு வெளியிட்டார். இந்த ரெப்போ விகிதம் தற்போது 6 சதவீதமாக உள்ளது.
அடுத்த கட்டமாக 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 100 பிபிஎஸ் புள்ளிகளை குறைக்க ஆர்பிஐ திட்டமிட்டு உள்ளது. ஜூன், ஆகஸ்ட், அக்டோபர் மற்றும் டிசம்பர் மாதங்களில் நடைபெறும் ஒவ்வொரு கூட்டத்திலும் 25 பிபிஎஸ் குறைக்கப்படும் என்று ஆர்பிஐ பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்து உள்ளனர்.
ரெப்போ ஏன் முக்கியம்?
ரிசர்வ் வங்கியால், வணிக வங்கிகளுக்கு நிதிக்கான வட்டி அளவு நிர்ணயம் செய்யப்படும். இந்த வட்டி விகித நிர்ணயம்தான் ரெப்போ விகிதம் என்று அழைக்கப்படுகிறது. இதை வைத்துதான் வங்கிகள் தாங்கள் அளிக்கும் கடன்களுக்கு வட்டியை நிர்ணயம் செய்யும். இந்த விகிதம் உயர்ந்தால் வட்டி உயரும். அதேபோல் கட்ட வேண்டிய தொகை உயரும். ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் வட்டி உயர்வதால் இஎம்ஐ கட்ட வேண்டிய காலமும் உயரும். உதாரணமாக நீங்கள் மாதம் 30 ஆயிரம் ரூபாய் கட்டுகிறீர்கள். 20 வருடங்களுக்கு இஎம்ஐ கட்டுகிறீர்கள் என்று வைத்துக்கொள்வோம்.
ரெப்போ ரேட் உயரும் பட்சத்தில் நீங்கள் கட்ட வேண்டிய வட்டி கூடுதல் ஆகும். இதனால் இஎம்ஐ உயரும். ஒருவேளை இஎம்ஐ உயராத பட்சத்தில் வங்கிகள் இஎம்ஐ செலுத்தும் காலத்தை உயர்த்தும். உதாரணமாக இஎம்ஐ 35 ஆயிரமாக உயரும் அல்லது இஎம்ஐ செலுத்தும் காலம் 25 ஆண்டுகள் கூட ஆகும். இது வெறும் உதாரணம்தான். ரெப்போ ரேட் உயரும், இறங்கும் விகிதத்தை வைத்து இது மாறும். இப்படிப்பட்ட நிலையில்தான் வீட்டுக்கடன் வாங்கியவர்களுக்கு முக்கியமான நற்செய்தி ஒன்றை ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா தெரிவித்துள்ளது.
அதேபோல் வீட்டுக்கடன் காலத்தை உயர்த்த வேண்டும் என்று உங்களை வங்கிகள் வற்புறுத்த முடியாது. அதேபோல் EMI ஐ வங்கிகள் மாற்றுவதை பற்றியும் வங்கிகள் பிரஷர் கொடுக்க முடியாது. நீங்கள் சொல்லும் முடிவையே இனி வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்களும் முடிவு எடுக்காமல் காலம் தாழ்த்த முடியாது. உங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள காலத்திற்குள் நீங்கள் முடிவு எடுக்க வேண்டும். அதாவது ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்வது அல்லது இஎம்ஐ காலத்தை உயர்த்துவது பற்றி நீங்கள் எடுக்கும் முடிவை வங்கிகள் ஏற்றுக்கொள்ள வேண்டும். நீங்கள் ரெப்போ ரேட் உயரும் போதெல்லாம் இஎம்ஐ உயர்த்த விரும்பினால் உயர்திக்கொள்ளலாம். இஎம்ஐ காலத்தை உயர்த்த விரும்பினால் அதை உயர்த்திக்கொள்ளலாம்.
ரெப்போ விகிதம் இந்த வருட தொடக்கத்தில் 6.50% ஆக இருந்தது. அதன்பின் பிப்ரவரியில் இதன் விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் குறைக்கப்பட்டது. இதனால் அப்போது வட்டி விகிதம் 6.25% ஆக உள்ளது. இது வீட்டு கடன் வாங்கியவர்களுக்கு பெரிய பலன் அளிக்கும் என்பது எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மீண்டும் இரண்டு முறை ரெப்போ குறைக்கப்பட்டு தற்போது ரெப்போ விகிதம் 6% ஆக உள்ளது.












Click it and Unblock the Notifications