Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஒருத்தரையும் விடாத ஸ்டாலின்.. அடுத்தடுத்து பாய்ந்த ஆக்சன்.. மிரண்டு போன பாஜக.. என்னங்க நடக்குது?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் பலரும் கைதாகி வருவது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கோகுல்ராஜ் கொலை வழக்கில் தண்டனை வழங்கப்பட்ட யுவராஜூக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை உறுதி செய்யப்பட்டது. இது குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பதிவு செய்த பாஜகவை சேர்ந்த கட்டெறும்பு என்னும் இசக்கி கைது செய்யப்பட்டுள்ளார். உள்ளே ஒரு யுவராஜ் இருக்கலாம்.. ஆனால் வெளியே ஆயிரம் யுவராஜ் இருக்கிறோம் என்று சர்ச்சைக்குரிய வகையில் இவர் போஸ்ட் செய்து இருந்தார்.

ட்விட்டரில் கட்டெறும்பு என்னும் பெயரில் இயங்கி வரும் இசக்கி ட்விட்டரில் தொடர்ந்து சர்ச்சைக்குரிய கருத்துக்களை போஸ்ட் செய்து வருகிறார். இவர் பாஜக நிர்வாகி என்று கூறப்படுகிறது. இந்த நிலையில்தான் சமீபத்தில் போலீசார் மூலம் இசக்கி கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Why so many BJP leaders are getting arrested one after the other in Tamil Nadu?

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தை சேர்ந்த அவரை கைது செய்து போலீசார் ரிமாண்ட் செய்தனர். இதையடுத்து உடல்நிலையை காரணம் காட்டி கோர்ட் விசாரணையில் இசக்கி மன்னிப்பு கேட்டு கடிதம் எழுதியதாக கூறப்படுகிறது. அவரின் மன்னிப்பு கடிதத்தை அடுத்து கண்டிஷன் பெயிலில் அவர் விடுதலை செய்யப்பட்டார்.

இன்னொரு கைது: இதையடுத்து தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை வெளியிட்ட ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் கைது செய்யப்பட்டார். விழுப்புரம் மற்றும் செங்கல்பட்டில் கள்ளச்சாராயம் குடித்து 17 பேர் பலியான சம்பவம் பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே விழுப்புரத்தில் 12 பேர் உயிரிழந்த நிலையில், ராஜவேல்(38) என்பவர் விழுப்புரத்தில் பலியாகி உள்ளார்.

ஏற்கனவே செங்கல்பட்டில் கள்ளச்சாராயத்தால் 5 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. இதில் பலியான நபர்களின் குடும்பங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் தலா ரூ.10 லட்சம் நிவாரணம் அறிவித்து உள்ளார்.தமிழ்நாட்டில் ஒரு காலத்தில் கள்ளச்சாராயம் உச்சத்தில் இருந்தது. 90 களில் உச்சத்தில் இருந்த பிஸ்னஸ் ஆகும் இது. அதன்பின் அரசு தீவிரமாக செயல்பட்டு இதை முடக்கியது.

இப்படிப்பட்ட நிலையில்தான் தமிழ்நாட்டில் திமுகவினர் அரசுப்பள்ளியில் சாராயம் காய்ச்சியதாக பொய்யான செய்தி ஒன்றை ஆர்.எஸ்.எஸ். பிரமுகர் சரவண பிரசாத் என்பவர் வெளியிட்டார். ஊடகங்களில் வெளியாகாத செய்தியை ஊடகங்களில் வெளியானது போல காட்டி இணையத்தில் செய்தி வெளியிட்டார்.

அவர் வெளிநாட்டில் இருந்து கொண்டு இப்படி செய்திகளை வெளியிட்டதால் அவர் மீது நடவடிக்கை எடுக்க முடியவில்லை. இதற்கு முன்பே வதந்திகளை பரப்பும் வகையில், கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் அவர் செய்திகளை வெளியிட்டு வந்ததாக கூறப்படுகிறது.

உதாரணமாக நீட் தேர்வு எழுத வேறு மாநிலங்களில் சென்டர்கள் அமைக்கப்பட்டதற்கு.. மாணவிகளே இந்த தேர்வு மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள். பாய் பிரண்டுகளுடன் சுற்ற இந்த மையங்களை தேர்வு செய்து இருப்பார்கள் என்று சர்ச்சை போஸ்டை போட்டு இருந்தார். அதோடு பிரியாணியில் மலட்டுத்தன்மையை ஏற்படுத்தும் மருந்தை இஸ்லாமியர்கள் கலப்பதாகவும் போஸ்ட் செய்து இருந்தார்.

அடுத்தடுத்த கைது: இதையடுத்து ஒடிசா ரயில் விபத்து குறித்து மத வெறுப்புணர்வை தூண்டும் வகையில் வதந்தி பரப்பிய கன்னியாகுமரியைச் சேர்ந்த பாஜக ஆதரவாளர் செந்தில் குமார் கைது செய்யப்பட்டு உள்ளார். இவர் மீது 4 பிரிவுகளில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இவர் ஒடிசா ரயில் விபத்திற்கு காரணம் இஸ்லாமியர் என்று பொய்யாக செய்த பதவி சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில் கைது செய்யப்பட்டு உள்ளார். தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியமான விஷயங்களில் வதந்தி பரப்பிய பாஜக, ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மீது தமிழ்நாடு அரசு அடுத்தடுத்து ஆக்சன் எடுத்து வருகிறது. பாஜக தரப்பினர் இடையே இந்த தொடர் ஆக்சன்கள் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சூர்யா கைது: இதையடுத்து பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யா கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட பாஜக மாநிலச் செயலாளர் எஸ்.ஜி.சூர்யாவுக்கு 15 நாட்கள் நீதிமன்றக் காவல் விதிக்கப்பட்டு உள்ளது.

Why so many BJP leaders are getting arrested one after the other in Tamil Nadu?

மதுரை மாவட்ட விரைவு நீதிமன்றம் பிறப்பித்த இந்த உத்தரவு பாஜகவை அதிர வைத்து உள்ளது. இதற்கு எதிராக பாஜகவினர் 10-12 பேர் அன்று இரவே மதுரையில் போராட்டங்களை மேற்கொண்டனர்.

இதைத்தொடர்ந்து எஸ்.ஜி.சூர்யா மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். தமிழ்நாடு பாஜவின் மாநில செயலாளராக இருப்பவர் எஸ்.ஜி.சூர்யா. இவர் சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவ். மதுரை எம்.பி சு.வெங்கடேசன் குறித்து ட்விட்டரில் எஸ்.ஜி.சூர்யா பதிவிட்டிருந்தார். அதில், கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த கவுன்சிலரால் தூய்மை பணியாளரின் உயிர் பறிபோனது என்றும் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் கள்ள மௌனம் காக்கிறார்.

எங்கே உங்கள் உணர்ச்சி மிகுந்த வார்த்தைகள்! ஆளும் பாஜக அரசுக்கு எதிராக என்றால் உடனே முந்திக்கொண்டு வருவீர்கள். இப்போது எங்கே சென்று விட்டீர்கள்? பதுங்கி விட்டீர்களா அல்லது பம்மி விட்டீர்களா? பிரிவினை வாதம் பேசி சிவப்பு கொடியை போர்த்தி கொண்டு அரசியல் செய்யும் உங்கள் போலி அரசியல் அந்த மலக்குழியை விட மோசமாக துர்நாற்றம் வீசுகிறது. மனிதனாக வாழ வழி தேடுங்கள் தோழரே" என சு.வெங்கடேசனை கடுமையாக தாக்கி போஸ்ட் செய்து இருந்தார் எஸ்.ஜி.சூர்யா.

இதையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் பற்றி அவதூறாக கருத்து தெரிவித்த எஸ்.ஜி.சூர்யா மீது சிபிஐஎம் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின் அடிப்படையில்தான் சூர்யா கைது செய்யப்பட்டார்.

3 பேர் கைது: இதையடுத்து கடந்த சனிக்கிழமை மதுரையில் 3 பாஜக நிர்வாகிகளை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். மதுரை பாஜக கிழக்கு மண்டல செயலாளரான மேல பனங்காடியை சேர்ந்த ஆனந்த் ராஜ் (வயது 37), பாஜக 28 வது வார்டு பட்டியல் அணி மண்டல தலைவரான செல்லூரை சேர்ந்த மலைச்சாமி (23), பாஜக பட்டியல் அணி மாநில செயற்குழு உறுப்பினரான கோசா குளத்தை சேர்ந்த வைரமுத்து (38) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இன்றும் கைது: இன்று முதல்வர் ஸ்டாலின் மற்றும் திமுக குறித்து அவதூறாக ட்விட்டரில் பதிவிட்ட பாஜக ஆதரவாளரான உமா கார்கி கைது செய்யப்பட்டுள்ளார். அண்ணாமலையிடம் இருந்து சிறந்த சமூக வலைதள நிர்வாகி விருது வாங்கிய மறுநாளே இவர் கைது செய்யப்பட்டு இருக்கிறார்.

கைதுகள் ஏன் ?:அமைச்சர் செந்தில் பாலாஜியை கைது செய்துள்ள நிலையில் அடுத்தடுத்து பாஜக நிர்வாகிகள் கைதாகி வருகிறார்கள். இந்த கைதை தொடர்ந்து வரிசையாக பாஜக நிர்வாகிகள் கைது செய்யப்படுவதால் பாஜகவினர் அச்சத்தில் இருக்கிறார்களாம்.

முதல்வர் அடுத்து முக்கிய சிலரை கைது செய்ய உள்ளதாக தகவல்கள் வருகின்றன. அதிலும் பாஜகவின் டாப் தலைவர்கள் சிலர் கைது செய்யப்படலாம் என்றும் கூறப்படுகிறது. இதன் காரணமாகவே பாஜக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+