இது என்ன புது சிக்கல்.. ஆன்லைனில் ஆதார் விவரத்தை அப்டேட் பண்றீங்களா.. கவனம்.. இதை படிங்க
சென்னை: ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றும் மக்கள் பலர் ஒரே மாதிரியான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர்.
ஆதார் கார்ட் தற்போது நாட்டில் முக்கியமான அடையாள அட்டையாக மாறிவிட்டது. பல சேவைகளுக்கு இந்தியாவில் ஆதார் கார்ட் முக்கியம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. பல துறைகளில் ஆதார் கார்டுகளை இணைக்க வேண்டியதும் அவசியம் ஆகிவிட்டது.

மத்திய அரசு சேவைகள், மாநில அரசு சேவைகளை பெற ஆதார் கார்ட் முக்கியமாகி உள்ளது. முக்கியமாக மின்சார எண்ணுடன் ஆதாரை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்து உள்ளது. இதற்கான கால அவகாசம் முடிந்துவிட்டது. தமிழ்நாட்டில் 100 யூனிட் இலவச மின்சாரம் பயன்படுத்தும் மின் நுகர்வோர்கள் 2.67 கோடி பேர் இருக்கின்றனர். இதில் 67 ஆயிரம் பேரை தவிர மற்ற எல்லோரும் ஆதாரை இணைத்துவிட்டனர்.
அதேபோல் நாடு முழுக்க பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. தற்போது இதற்கான அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டு உள்ளது
இந்த நிலையில்தான் ஒருவேளை ஆதார் அட்டையில் மாற்றங்களை செய்ய மத்திய அரசு இலவச ஆன்லைன் வசதியை ஏற்படுத்திக்கொடுத்துள்ளது. 10 ஆண்டுகளாக ஆதார் கார்டை அப்டேட் செய்யாதவர்கள், விலாசம் மாறியவர்கள், ஆதார் கார்டில் தவறான விவரங்கள் உள்ளவர்கள் ஆன்லைன் மூலம் அப்டேட் செய்ய முடியும். உதாரணமாக உங்களின் பெயர் தவறாக இருந்தால் அல்லது வேறு விவரங்கள் தவறாக இருந்தால் ஆன்லைன் மூலம் அதை எளிதாக மாற்ற முடியும். இதற்கான வசதிகளை ஆதார் அமைப்பு ஏற்படுத்தி கொடுத்து உள்ளது.
UIDAI ஏற்படுத்தி கொடுத்துள்ள வசதிகள் மூலம் எளிதாக இந்த விவரங்களை மாற்ற முடியும். ஜூன் 14ம் தேதி வரை இந்த மாற்றங்களை செய்ய கட்டணம் இல்லை. ஆன்லைன் மூலம் எளிதாக செய்ய முடியும். நேரில் ஆதார் மையத்தில் செய்வதற்கு மட்டும் 50 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும்.
இந்த நிலையில்தான் ஆன்லைன் மூலம் ஆதார் விவரங்களை இலவசமாக மாற்றும் மக்கள் பலர் ஒரே மாதிரியான பிரச்சனையை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த சேவை இப்போது இலவசம் என்பதால் பலரும் ஆன்லைன் மூலம் விவரங்களை மாற்றுகின்றனர்.
ஆனால் விவரங்களை மாற்றியதும்.. பலரும் அவர்களின் பிறந்த வருடம் தானாக மாறுவதாக புகார் வைக்கப்பட்டு உள்ளது. அதாவது பிறந்த தேதி அல்லது வருடம் தானாக மாறும் சிக்கல் இருப்பதாக கூறப்படுகிறது. இது எதுவும் bug ஆ அல்லது வேறு ஏதாவது தவறா என்று தெரியவில்லை. ஆனால் சமீபத்தில் ஆன்லைன் மூலம் இலவசமாக விவரங்களை மாற்றிய பலர் இந்த சிக்கலை எதிர்கொண்டு உள்ளனர்.
அவர்கள் உதாரணமாக தங்களின் விலாசத்தை மாற்றுகிறார்கள் என்று வைத்துக்கொள்வோம். அதில் அப்டேட் ஆகி வரும் விவரத்தில் தானாக பிறந்த நாள் தவறாக வந்துவிடுகிறது. பிறந்த நாள் போன்ற விவரங்களை மாற்ற நேரில் செல்ல வேண்டும் என்பதால் அவர்கள் ஆதார் மையத்திற்கு மீண்டும் செல்ல வேண்டியதாக உள்ளது. அங்கே அவர்கள் 50 ரூபாய் பணம் கொடுத்து மீண்டும் அப்டேட் செய்ய வேண்டியதாக உள்ளது.
எனவே இனி ஆன்லைனில் உங்கள் ஆதார் கார்டை அப்டேட் செய்தால், பிறந்த தேதி, வருடம் சரியாக இருக்கிறதா என்பதையும் கவனமாக பார்த்துக்கொள்ளுங்கள்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications