ஸ்டாலின் ஏன் இவ்வளவு லேட்? தயங்கிய தளபதி.. டக்னு நேரு சொன்ன அந்த 1 வார்த்தை.. அதுதான் இப்ப ட்விஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தாராபுரம், மதுராந்தகம் என 2 தொகுதிகளிலும் இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்திருக்கிறது. விஜய் முதல் கட்ட பிரச்சாரத்தை முடித்துவிட்டார்.. எடப்பாடி பழனிசாமியும் களத்தில் இறங்கி வாக்கு சேகரித்து வருகிறார். ஆனால், திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் ஏன் இவ்வளவு லேட்? இதுதான் இப்போது அரசியல் வட்டாரத்தில் பேசப்படும் முக்கியமான கேள்வி. காரணம் என்ன என்பது குறித்து அறிவாலய வட்டாரங்களில் விசாரித்தபோது, சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்திருக்கின்றன.

தாராபுரம், மதுராந்தகம் 2 தொகுதிகளிலும் விஜய் ஏற்கனவே களத்தில் இறங்கி பிரச்சாரம் செய்துவிட்டார். அதேபோல் எடப்பாடி பழனிசாமியும் அதிமுக வேட்பாளர்களுக்காக நேரடியாக வாக்கு சேகரித்து வருகிறார். திமுக தரப்பிலும் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட முக்கிய நிர்வாகிகள் ஏற்கனவே களத்தில் இருக்கிறார்கள்.

Stalin Delayed Campaign DMK By-Election

ஸ்டாலின் ஏன் லேட் பிரச்சாரம்

ஆனால் திமுக தலைவர் ஸ்டாலின் மட்டும் இதுவரை சென்னையிலேயே இருந்து வந்தார். இப்போது நேற்று கோவை சென்றுள்ள அவர், இன்று தாராபுரத்தில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.

இதில் ஏன் இவ்வளவு தாமதம் என்ற கேள்விதான் திமுக வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. அப்போது கிடைத்த தகவலின்படி, இடைத்தேர்தலில் திமுக சார்பாக நேரடியாக ஸ்டாலின் பிரச்சாரம் செய்து, ஒருவேளை எதிர்பார்த்த முடிவு வராமல் போனால், இதுவரை தனக்கென உருவாகியிருக்கும் அரசியல் இமேஜில் பாதிப்பு ஏற்படுமா என்ற யோசனை அவரிடம் இருந்ததாக கூறப்படுகிறது.

அதனால்தான், ஆரம்பத்திலேயே பிரச்சாரத்துக்கு செல்லாமல் இருப்பது பற்றி ஸ்டாலின் யோசித்ததாக அறிவாலய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆனால் இந்த விஷயம் கே.என்.நேருவின் கவனத்துக்கு சென்றிருக்கிறது.

மூத்த தலைவர் நேரு சொன்ன வார்த்தை

அப்போது ஸ்டாலினிடம் பேசிய கே.என்.நேரு, "தளபதி, நீங்கள் அவசியம் பிரச்சாரத்துக்கு வரணும். வெற்றி திமுக பக்கம்தான் இருக்கிறது. அதில் எந்த சந்தேகமும் வேண்டாம். தைரியமாக பிரச்சாரத்துக்கு வாருங்கள். மற்றதை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம்" என்று நம்பிக்கை கொடுத்ததாக அந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

நேரு இவ்வளவு அழுத்தமாக வெற்றி குறித்து நம்பிக்கை கொடுத்ததையடுத்து, ஸ்டாலினும் களத்தில் இறங்க முடிவு செய்ததாக கூறப்படுகிறது. அதன்படியே இன்று தாராபுரத்திலும், நாளை மதுராந்தகத்திலும் பிரச்சாரம் செய்ய இருக்கிறார்.

அங்கேதான் ஒரு விஷயம்

அதிலும் ஒரு முக்கிய விஷயம் இருக்கிறது. தாராபுரத்தில் ஸ்டாலின் பிரச்சாரம் செய்யும் நாளிலேயே விஜய்யும் அங்கு களமிறங்குகிறார். விஜய்யின் பிரச்சாரத்துக்கு நேரடியாக களத்தில் பதில் கொடுக்க வேண்டும் என்ற முடிவும் திமுக மேலிடத்தில் எடுக்கப்பட்டதாக ஏற்கனவே தகவல்கள் வெளியாகியுள்ளன.

இப்போது கேள்வி என்னவென்றால், ஸ்டாலின் தாமதமாக களத்துக்கு வந்தது ஏன் என்பதல்ல.. அவர் களத்துக்கு வந்த பிறகு தேர்தல் களம் எந்த அளவுக்கு மாறப்போகிறது என்பதுதான்... நேரு கொடுத்த அந்த நம்பிக்கை வெறும் கட்சி நிர்வாகியின் தைரிய வார்த்தைகளா.. அல்லது களத்தில் திமுகவுக்கு உண்மையிலேயே சாதகமான நிலவரம் இருக்கிறதா? அக்டோபர் 6-ம் தேதி வாக்குப்பதிவு முடிந்த பிறகுதான் இதற்கான விடை தெரியும்...!!

- நமது சிறப்பு நிருபர் எழில்

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+