அடுத்து நம்ம விழாதான்.. "மறுமலர்ச்சி" லுக்கில் ஸ்டாலின்.. ஃபர்ஸ்ட் லுக் சொல்லும் சேதி என்ன?
Recommended Video

சென்னை: மத்திய பிரதேச மாநில முதல்வர் கமல்நாத் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்ட திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தோளில் கருப்பு நிற துண்டுடன் வித்தியாசமான கெட்டப்பில் கலந்து கொண்டார்.
ஜெயலலிதா மறைவுக்கு பிறகு எப்போது அதிமுக அரசு கவிழும் என காத்துக் கொண்டிருக்கின்றனர் தமிழக எதிர்க்கட்சிகள். ஆனால் அதுவும் போகவில்லை. இவர்களும் அமைதியாக பார்த்துக் கொண்டுதான் உள்ளனர்.
திமுக கூட்டணி கட்சி தலைவர்களும் ஸ்டாலினை முதல்வராக்கியே தீருவோம் என உறுதியுடன் இருக்கின்றனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ இதில் உறுதியாக உள்ளார்.

சாத்தியக் கூறுகள்
ஜெயலலிதா மறைந்த பிறகு நேச்சுல் சாய்ஸாக திமுக பக்கம் அனைவரின் பார்வையும் பதிந்துள்ளது. இதை வலுப்படுத்தும் வகையில் தேசிய அளவில் பிரமாண்டக் கூட்டணி, தமிழகத்தில் வலுவான கூட்டணி என திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார் மு.க.ஸ்டாலின்.

சேதி என்ன
இந்த நிலையில் இன்று ராஜஸ்தான் அரசு பதவியேற்கும் விழாவில் ராகுல் உள்ளிட்ட காங்கிரஸாருடன் ஸ்டாலினும் கலந்து கொண்டார். அப்போது அவர் வந்த கெட்ட அப்பை பார்த்து அனைவரும் வியப்படைந்தனர். தோளில் துண்டு போடுவது தமிழக தலைவர்கள் பலருக்கும் வழக்கம். கருணாநிதி மஞ்சள் துண்டு போட்டு வந்தார். அந்த வகையில் இன்று ஸ்டாலினும் திடீரென துண்டுடன் வந்து அசத்தினார்.

பறக்கமுடியவில்லை
ஸ்டாலின் போட்டிருந்தது கருப்புத் துண்டு. இது பல செய்திகளை உணர்த்துவதாக தெரிகிறது. கருப்புதான் அடுத்து யார் நாடாளப் போவது என்பதை உறுதி செய்யப் போகிறது, உதவப் போகிறது என்று உணர்த்துவதாக எடுத்துக் கொள்ளலாம். வலுவான எதிர்க்கட்சிகளின் கூட்டணியால் பாஜகவின் காவிக்கு முடிவு வரப் போகிறது என்பதை ஸ்டாலின் உணர்த்துகிறாரா என்று தெரியவில்லை. காவிரி விவகாரத்தின் போது சென்னை வந்த பிரதமர் நரேந்திர மோடியை கருப்பு பலூன்கள் கொண்டே மிரளச் செய்தவர்கள் திமுகவினர் என்பது நினைவிருக்கலாம்.

இல்லை கருப்பு மயம்
தமிழகத்திலும் காவிமயத்தை பரப்ப முயலும் பாஜகவுக்கு அவர்கள் வீழ்த்தப்பட்ட வடக்கிலேயே போய் இனி "கருப்புக்கு கட் அவுட், காவிக்கு கெட் அவுட்" என சொல்கிறாரா. இல்லை புதிய அவதாரத்தில் இனி என்னைப் பார்ப்பீர்கள் என்று தேசிய அரசியல்வாதிகளுக்கு உணர்த்துகிறாரா என்று பலவித சிந்தனைகளை கிளறி விட்டுள்ளார் ஸ்டாலின்.

தொடருமா துண்டு
இதுவரை ஸ்டாலின் இப்படி துண்டு போட்டுக் கொண்டு வந்ததே இல்லை. குளிர் காற்று நிலவும் மாநிலங்களுக்கு சென்றால் கூட அரைக்கை ஸ்வெட்டர் அல்லது சால்வை மட்டுமே போர்த்தியிருப்பார். எனவே இது வினோதமாக இருக்கிறது. இந்த கருப்பு துண்டு இந்த விழாவில் மட்டும்தானா அல்லது இனி வரும் காலங்களிலும் தொடர்வாரா என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
துண்டும் நல்லாத்தான் இருக்கு.
-
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
தந்தை இறப்பில் நடந்தது மீண்டும் வேண்டாம்.. தாயார் மறைவில் அஜித் குடும்பம் எடுத்த முடிவு! வருத்தத்தில் ரசிகர்கள் -
தமிழக பள்ளி – கல்லூரி மாணவர்களுக்கு அரசு பஸ்சில் இலவச பயணம்.. அறிவித்தார் போக்குவரத்து அமைச்சர் -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
முதல்வர் விஜய்யை சந்திக்காத மேயர் பிரியா! சுணக்கத்தில் சென்னை மாநகராட்சி.. மோதலா? து.மேயர் விளக்கம்












Click it and Unblock the Notifications