கொதிக்குதே! தமிழ்நாட்டில் தொடரும் "கோடை 2.0".. வாட்டி வதைக்கும் வெயிலுக்கு காரணம் என்ன? ஷாக் பின்னணி
சென்னை: தமிழ்நாட்டில் வெயில் காலம் தொடர்ந்து நீடித்து வருகிறது. ஆகஸ்ட் மாதங்களில் எல்லாம் இந்நேரம் மழை பெய்து கொண்டு இருக்க வேண்டும். ஆனால் வெயில் அடித்துக்கொண்டு இருக்கிறது.
கோடைகாலம் முடிந்த பின்பும் கடந்த ஒரு வாரமாக தமிழ்நாட்டில் 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை உள்ளது. இது 41ஐ அடையும் வாய்ப்புகள் உள்ளன. இதன் அர்த்தம் வரும் நாட்களில் வெப்பம் கொளுத்த போகிறது. இன்று தமிழ்நாட்டில் 41 டிகிரி செல்ஸியஸ் வரை உயரும் வாய்ப்புகள் உள்ளன. முக்கியமாக சென்னை போன்ற கடலோர மாவட்டங்களிலும் வேலூர் போன்ற உள்ளூர் மாவட்டங்களிலும் வெயில் உச்சத்தில் இருக்கும்.

சென்னை மற்றும் தமிழ்நாட்டின் பிறபகுதிகளில் வெயில் அடிக்க வங்கக்கடலில் ஏற்பட்ட மாற்றமே காரணம் என்று கூறப்படுகிறது. அங்கே ஏற்பட்ட காலநிலை மாற்றத்தால் மழைக்கு ஏற்ற சூழ்நிலை இல்லை. முக்கியமாக கடல் மேல் நிலவும் வெப்பநிலை ஆகியவை மழை உருவாவதற்கு எதிரான சூழ்நிலையை கொண்டு உள்ளன.
சென்னை ரெயின்ஸ்: இதனால் தமிழ்நாட்டில் தொடர்ந்து வெயில் நீடிப்பதாக வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறி உள்ளனர். இது தொடர்பாக சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு வெளியிட்டுள்ள அறிவிப்பில், உள்தமிழ்நாட்டில் அதிக வெப்பநிலை நீடிக்கும். சில இடங்களில் அதிகபட்சம் 38 - 39 டிகிரி செல்ஸியஸ் வரை வெப்பநிலை நீடிக்கும்.
தென் தமிழ்நாட்டில் வெப்பநிலை 40 டிகிரி செல்ஸியஸை தொட வாய்ப்பு உள்ளது. சென்னையில் 37 / 38°C வரை வெப்பநிலை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளன. மாலை நேரங்களில் மேற்கு சென்னையில் லேசான மழை பெய்ய வாய்ப்புகள் உள்ளன என்று சென்னை ரெயின்ஸ் வானிலை அமைப்பு தெரிவித்துள்ளது.
வானிலை மையம்: இது தொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், 09.08.2023 வரை தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 10.08.2023 மற்றும் 11.08.2023. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
அதிகபட்ச வெப்பநிலை: 07.08.2023 மற்றும் 08.08.2023: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஒருசில இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி முதல் 39 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்; ஒருசில
இடங்களில் இயல்பிலிருந்து 2 - 4 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடும். அதிக வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் இருக்கும் பொழுது வெப்ப அழுத்தம் (Heat Stress }
காரணமாக அசௌகரியம் ஏற்படலாம். சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான
வானிலை முன்னறிவிப்பு:
அடுத்த 24 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய லேசான / மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும். அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 37 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியஸை ஒட்டியே இருக்கக்கூடும்.
கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவு (சென்டிமீட்டரில்):
கொள்ளிடம் (மயிலாடுதுறை) 6, வேப்பூர் (கடலூர்), திருமயம் (புதுக்கோட்டை), தனிமங்கலம் (மதுரை). குறிஞ்சிப்பாடி (கடலூர்). வடகுத்து (கடலூர்), புலிப்பட்டி (மதுரை) தலா 5. ஈச்சன்விடுதி (தஞ்சாவூர்), பரங்கிப்பேட்டை (கடலூர்) தலா 4. கொத்தவாச்சேரி (கடலூர்), மே.மாத்தூர் (கடலூர்), மணம்பூண்டி (விழுப்புரம்), காட்மெலையூர் (கடலூர்), ஆதார் எஸ்டேட் (நீலகிரி), விருதாச்சலம் (கடலூர்), குப்பநத்தம் (கடலூர்), வனமாதேவி (கடலூர்), விருத்தாசலம் KVK AWS (கடலூர்), சிதம்பரம் (கடலூர்). புவனகிரி (கடலூர்) தலா 3. ஏற்காடு (சேலம்), உளுந்தூர்பேட்டை (கள்ளக்குறிச்சி), மதுரை விமான நிலையம், மகையூர் (விழுப்புரம்), அண்ணாமலை நகர் (கடலூர்), சிதம்பரம் AWS (கடலூர்), சேத்தியாதோப்பு (கடலூர்), பண்சுட்டி (கடலூர்). அழகரை எஸ்டேட் (நீலகிரி), வெங்கூர் (கள்ளக்குறிச்சி), காட்மென்னார்கோயில் (கடலூர்) தலா 2, மேலூர் (மதுரை), கோத்தகிரி (நீலகிரி), ரிஷிவந்தியம் (கள்ளக்குறிச்சி), மணிமுத்தாறு அணை பொதுப்பணித்துறை (கள்ளக்குறிச்சி). லால்பேட்டை (கடலூர்), சீர்காழி (மயிலாடுதுறை), குடிதாங்கி (கடலூர்), கெட்டி (நீலகிரி), வால்பாறை PTO (கோயம்புத்தூர்), கலங்குறிச்சி (கள்ளக்குறிச்சி) தலா 1 நிலவியது என்று கூறி உள்ளது.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications