Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

தமிழ்நாடு vs கர்நாடகா - ஆந்திரா - கேரளா- தெலுங்கானா.. தனித்துவமாக நிற்கும் தமிழ்நாட்டின் பொருளாதாரம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா போன்ற மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டின் பொருளாதாரம் தனித்து நிற்கிறது. தென்னிந்தியாவில் தமிழ்நாட்டை தவிர பிற மாநிலங்களில் பெங்களுர், ஹைதராபாத், விசாகப்பட்டினம், அமராவதி, கொச்சி ஆகியநகரங்களை மட்டுமே நம்பி உள்ளன.. ஆனால் தமிழ்நாடு மட்டும் சென்னையை மட்டுமே நம்பியே பொருளாதாரம் கிடையாது..இல்லை.. பரவலான வளர்ச்சி தமிழ்நாட்டில் சாத்தியமானது எப்படி, மற்ற மாநிலங்களில் தலைநகரை தவிர மற்ற பகுதிகளில் வளர்ச்சி ஏன் பெரிதாக பரவவில்லை என்பதை பார்ப்போம்.

இந்தியாவை பொறுத்தவரை மற்ற தென்னிந்திய மாநிலங்களுடன் ஒப்பிடுகையில், தமிழ்நாட்டின் பொருளாதாரம் உண்மையிலேயே தனித்து நிற்கிறது. தமிழ்நாட்டை பொறுத்தவரை து வெறும் சென்னையை மட்டும் சார்ந்திராமல், பரவலான வளர்ச்சியை அடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் இந்த பரவலான வளர்ச்சி சாத்தியமானதற்கும், மற்ற மாநிலங்களில் தலைநகரம் சார்ந்த வளர்ச்சி இருப்பதற்கும் உள்ள முக்கியக் காரணங்களை ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

Why Tamil Nadu s Economy is Different from Karnataka Kerala Andhra Pradesh telangana
Photo Credit:

தமிழ்நாட்டில் பொருளாதார வளர்ச்சி பரவலாக இருப்பதற்கு வரலாற்றுக் காரணங்களும், அரசு கொள்கைகளும்தான் முக்கியம்:


புவியியல் காரணம்

தமிழ்நாட்டில் சென்னையை தவிர தூத்துக்குடி மற்றும் எண்ணூர் (காமராஜர் துறைமுகம்) போன்ற துறைமுகங்கள் இருக்றிது. இது தவிர, கோயம்புத்தூர்-திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் போன்ற உள்நாட்டு உற்பத்தி மையங்கள் இருக்கின்றன. இந்த நகரங்கள் ஜவுளி ஏற்றுமதிக்கு கொச்சி மற்றும் தூத்துக்குடியைப் பயன்படுத்துகின்றன. இது மொத்த கனரக வாகனங்களும் கண்டய்னர்களுடன் சென்னைக்கு தொலைதூரம் வரவேண்டிய நிலையை குறைத்துள்ளது.. இது முக்கியமான ஒரு புவியியல் காரணம்.

பழமையான தொழில்துறை மையங்கள்

தமிழ்நாட்டில் இயற்கையாகவே உள்ளன. தமிழ்நாட்டில் சென்னை தவிர, கோயம்புத்தூர் (மோட்டார் பம்ப், ஜவுளி, இன்ஜினியரிங்), திருப்பூர் (ஆயத்த ஆடைகள்), சேலம் (ஜவுளி, இரும்பு), சிவகாசி (தீப்பெட்டி, அச்சகம்), மற்றும் திருநெல்வேலி (காற்றாலை), தூத்துக்குடி(துறைமுகம்), நாமக்கல் (முட்டை, கறிகோழி, லாரிகள்), கரூர் (ஜவுளி, வாகன பாடிக்கட்டும் தொழில்) போன்ற பல்வேறு நகரங்கள் நீண்டகாலமாகவே பல்வேறு தொழில்களில் முன்னிலையில் உள்ளன. தமிழ்நாட்டின் பல்வேறு நகரங்களுக்கு பிரத்யேகமாக தொழில்கள் உள்ளன.

அரசின் தொழில்துறை கொள்கைகள்

தமிழக அரசு TIIC, SIPCOT, SIDCO போன்ற நிறுவனங்கள் மூலம் 1970-களில் இருந்தே மாநிலத்தின் பல பகுதிகளிலும் தொழிற்பேட்டைகளை நிறுவுவதற்கு கவனம் செலுத்தியது. இந்தக் கொள்கை, தொழில்களைச் சென்னைக்கு அப்பால் கொண்டு செல்ல பெரிய அளவில் உதவியது.

சீரான கல்வி வளர்ச்சி

அதேபோல் இன்னொரு காரணம்.. சென்னையைத் தாண்டி மதுரை, திருச்சி, கோவை போன்ற இடங்களில் உள்ள கல்வி நிறுவனங்கள் காரணமாக பொறியியல் பட்டதாரிகள், டிகிரி பட்டதாரிகள், தொழில் பயின்றவர்கள் எளிதாக கிடைத்தார்கள்.. இதனால் தொழிற்சாலைகள் தங்களுக்கு தேவையான திறமையானவர்களை எளிதாக பெற முடிந்தது..

மற்ற மாநிலங்களில் தலைநகரில் மட்டுமே வளர்ச்சிக்குக் காரணம்

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா மற்றும் கேரளா போன்ற மாநிலங்களில் வளர்ச்சி தலைநகரங்களை பெங்களூர், ஹைதராபாத், கொச்சி, விசாகப்பட்டினம் (இதில் கொச்சி, விசாகப்பட்டினம் தலைநகரம் இல்லை என்றாலும் அங்கு மட்டுமே வளர்ச்சி அதிகமாக உள்ளது) மட்டுமே அதிகம் சார்ந்திருக்க காரணம் இல்லாமல் இல்லை..


கர்நாடகா பொருளாதாரம்

கர்நாடகாவை பொறுத்தவரை பெங்களூர் மாநகரை பொறுத்தவரை அதன் வளர்ச்சி முழுக்க முழுக்க ஐ.டி மற்றும் ஏரோஸ்பேஸ் துறையைச் சார்ந்துள்ளது. இதற்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் மனித வளம் பெங்களூரில் மட்டுமே குவிந்திருக்கிறது. இந்த துறையை தாண்டி மற்ற துறைகள் உள்ளது என்றாலும் மைசூர், மங்களூரில் கூட ஓரளவே பரவி உள்ளது. மாநிலம் முழுக்க வளர்ச்சி பரவலாக இல்லை. உற்பத்தி சார்ந்த தொழில்கள் அதிகம் இல்லை.. அதிக மனித வளம் தேவைப்படாத ஐடி துறையில் மட்டுமே முதலீடுகள் அதிகம் குவிந்தது காரணமாக பார்க்கப்படுகிறது.

தெலுங்கானா பொருளாதாரம்

தெலுங்கானா மாநில தலைவர் ஹைதராபாத் ஒரு காலத்தில் ஒருங்கிணைந்த ஆந்திராவின் தலைநகர் ஆகும். இங்கு ஃபார்மா மற்றும் ஐ.டி முதலீடுகள் அதிகம் இருந்தது. சர்வதேச விமான நிலையம் மற்றும் இந்தியாவின் மையப்பகுதியில் உள்ள பெரிய நகரம் என்ற காரணத்தால் காரணமாக ஹைதராபாத்தில் ஐடி துறை தான் பெங்களூர் போல் வளர்ந்தது. மற்ற மாவட்டங்கள் விவசாயம் சார்ந்தே இன்றும் உள்ளன.

கேரளா பொருளாதாரம்

கேரளாவை பொறுத்தவரை கொச்சி, திருவனந்தபுரம் மாநிலத்தின் வளர்ச்சி இருக்கிறது. இம்மாநிலத்தின் பொருளாதாரமே பெரும்பாலும் சுற்றுலா, வெளிநாட்டுக் கரன்சி (Remittances) மற்றும் துறைமுகம் சார்ந்த தொழில்களை கொண்டுள்ளன. உற்பத்தித் துறை வளர்ச்சி மிக குறைவாகவே கேரளாவில் உள்ளது. கேரளாவில் கொச்சி மட்டுமே வர்த்தக மையமாக விளங்குகிறது.

ஆந்திரா பொருளாதாரம்

ஆந்திராவின் நிலைமை சவாலானதாக உள்ளது. ஒருங்கிணைந்த ஆந்திரா இருந்தவரை ஹைதராபாத் அவர்களுக்கு வளர்ச்சிக்கு முக்கியமான இடத்தில் இருந்தது. ஆனால் ஆந்திரா பிளவுப்பட்ட பிறகு விசாகப்பட்டினம், அமராவதியில் தான் உள்கட்டமைப்பு வலிமையாக உள்ளது. அமராவதியை பொறுத்தவரை விஜயவாடா தான் நகரம் அதன் துணை நகரமாவே அமராவதி வளருகிது. எனவே விஜயவாடா விசாகப்பட்டினம் தான் பெரிய வளர்ச்சி இல்லை.. சென்னையை ஒட்டியுள்ள சித்தூர் மாவட்டத்தில் மட்டும் தற்போது ஓரளவு வளர்ந்து வருகிறது.

தமிழ்நாடு டாப்

எனவே ஒட்டுமொத்தமாக பார்த்தால் தமிழ்நாடு ஐடி துறையில், கர்நாடகா, தெலுங்கானாவைவிட சற்று பின் தங்கி இருந்தாலும் உற்பத்தி துறையில் வலுவாக உள்ளது. அதேபோல் பராம்பரியமான தொழில்களிலும் வலுவாக இருக்கிறது. ஆட்டோமொபைல், வாகன தயாரிப்பு, எலக்ட்ரானிக்ஸ் உதிரி பாகங்கள், எலக்ட்ரிக் உதிரி பாகங்கள், என்ஜினிரியரிங் உதிரி பாகங்கள், ஜவுளி, மருந்து, பட்டாசு என பல்வேறு வகையான தொழில்கள் பரவலாக உள்ளன.

ஆனால் மற்ற மாநிலங்கள் சமீபத்திய காலத்தில் வேகமாக வளர்ந்த IT, Bio-Tech மற்றும் சேவைத் துறைகளை மட்டுமே பெரிதாக உள்ளன. அதுவும் தலைநகரங்களைச் சுற்றியே குவித்ததால், வளர்ச்சி சமச்சீரற்றதாக மற்ற மாநிலங்களில் உள்ளது. இந்தச் சமச்சீரான பொருளாதார அடித்தளமே தமிழ்நாடு மற்ற தென் மாநிலங்களில் தனித்து நிற்க காரணமாக இருக்கிறது. மொத்த இந்தியாவில் பார்த்தாலும், மகாராஷ்டிராவிற்கு அடுத்தபடியாக பரவலான வளர்ச்சி உள்ள மாநிலம் தமிழ்நாடு தான்.. மற்ற மாநிலங்களில் இந்த இருமாநிலங்களில் உள்ளது போல் பரவலான வளர்ச்சி இல்லை என்கிறார்கள் பொருளாதார நிபுணர்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+