விஜயின் வாக்கு வங்கி எவ்வளவு? அந்த கட்சியுடன் கூட்டணி வைத்தால் தவெகதான் டாப்! அடித்து சொன்ன வல்லுநர்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் கடுமையாக உழைத்தால், 15-20% வாக்குகளைப் பெற முடியும். மேலும், டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்தால், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாக அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

நடிகர் விஜய், தமிழக வெற்றிக் கழகத்தின் அரசியல் மற்றும் வாக்கு வங்கி குறித்து அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

tamilaga vetri kazhagam Edappadi Palaniswami

அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன் செய்துள்ள போஸ்டில், நடிகர் விஜய், தனது 'தமிழக வெற்றி கழகம்' கட்சியின் மூலம் அரசியலில் தீவிரம் காட்டி வருகிறார். நடுநிலை வாக்காளர்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் இளைஞர்கள் மத்தியில் அவருக்கு நல்ல செல்வாக்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். திருச்சி கூட்டத்தில் திரண்ட மக்கள் தானாகவே வந்தவர்கள் என்றும், கட்சி அமைப்பு சார்ந்தவர்கள் அல்ல என்றும் கூறப்படுகிறது.

விஜய் கடுமையாக உழைத்தால், 15-20% வாக்குகளைப் பெற முடியும். மேலும், டிடிவி தினகரனுடன் கூட்டணி அமைத்தால், தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களைக் கைப்பற்ற வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். இது திமுக மற்றும் அதிமுக கூட்டணிக்கு சவாலாக அமையும் என்று அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன் கருத்து தெரிவித்துள்ளார்.

tamilaga vetri kazhagam Edappadi Palaniswami

தவெக விஜய் - அரசியல் விமர்சகர் வம்சி சந்திரன்

வம்சி சந்திரன் வெளியிட்ட போஸ்டில், திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 80-83% வாக்குகளையும், சுயேச்சைகள் மற்றும் நோட்டா 3-4% வாக்குகளையும் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாம் தமிழர் கட்சி மற்றும் தமிழக வெற்றி கழகம் இணைந்து 14-16% வாக்குகளைப் பெறலாம். விஜய் தனது சமூக வியூகத்தைச் சரியாகப் பயன்படுத்தினால், அவருக்கு 10% வாக்குகளும், நாம் தமிழர் கட்சிக்கு 6% வாக்குகளும் கிடைக்கும்.

தமிழக வெற்றி கழகம் - அமமுக கூட்டணி அமைத்தால், அதிமுக கூட்டணியின் வாக்குகளை 35%க்கும் கீழும், திமுக கூட்டணியின் வாக்குகளை 43%க்கும் கீழும் கட்டுப்படுத்த முடியும். இத்தகைய சூழலில், தமிழக வெற்றி கழகம் 15%க்கும் அதிகமான வாக்குகளைப் பெறும் என்று வம்சி சந்திரன் கணித்துள்ளார். இது விஜயின் தேர்தல் பிரசாரம் மற்றும் சமூக வியூகம் ஆகியவற்றைப் பொறுத்தே அமையும் என்று அவர் கூறி உள்ளார்.

tamilaga vetri kazhagam Edappadi Palaniswami

எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி

தமிழகத்தில் எதிர்க்கட்சிகளின் வாக்கு வங்கி 49-50% ஆக உள்ளது. 2021 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக, பாமக, பாஜக கூட்டணி 39.7%, அமமுக, தேமுதிக, எஸ்டிபிஐ கூட்டணி 2.85%, நாம் தமிழர் கட்சி 6.58% வாக்குகளைப் பெற்றன. 2024 மக்களவைத் தேர்தலில் அதிமுக, தேமுதிக, எஸ்டிபிஐ, புதிய தமிழகம் கூட்டணி 23%, தேசிய ஜனநாயகக் கூட்டணி 18.3%, நாம் தமிழர் கட்சி 8.2% வாக்குகளைப் பெற்றன.

ஸ்டாலினைத் தோற்கடிக்க வேண்டுமென்றால், இந்த எதிர்க்கட்சிகளின் வாக்குகளில் குறைந்தபட்சம் 45% வாக்குகளை ஒரே கூட்டணி திரட்ட வேண்டும். திமுக மற்றும் அதன் கூட்டணிக் கட்சிகள் 43%க்கும் குறைவான வாக்குகளைப் பெற வாய்ப்பில்லை. 2011ஆம் ஆண்டு திமுகவுக்கு எதிரான அலை வீசியபோதும், திமுக கூட்டணி 39.4% வாக்குகளைப் பெற்றது. இது திமுக, காங்கிரஸ் மற்றும் விசிக கூட்டணியின் பலத்தை உணர்த்துகிறது, என்று வம்சி சந்திரன் கூறி உள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+