திமுக, அதிமுக இரண்டையும் வீழ்த்தி.. விஜய் வெல்ல முடியுமா? நம்பர்ஸ் சொல்வது என்ன? இதை மறந்துட்டாங்களே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகரும் அரசியல்வாதியுமான விஜய், தனது தமிழக வெற்றி கழகம் (TVK) கட்சி சார்பில், செப்டம்பர் முதல் டிசம்பர் வரை தமிழகத்தின் முக்கிய மாவட்டங்களில் மாநிலம் தழுவிய சாலைப் பயணப் பரப்புரையைத் தொடங்கி உள்ளார். ஆனால் இந்த பயணம் அரசியல் ரீதியாக விஜய்க்கு எந்த அளவிற்கு உதவும் என்ற கேள்வியை எழுப்பி உள்ளது.

ஏற்கனவே இந்த பயணம் கடந்த சனிக்கிழமை தொடங்கி விட்டது. இப்பயணம் செப்டம்பர் 13 அன்று திருச்சியில் தொடங்கிய நிலையில் டிசம்பர் 20 அன்று மதுரையில் முடிவடைய உள்ளது. மாநிலத்தின் பெரும்பாலான முக்கியப் பகுதிகளை உள்ளடக்கிய இத்திட்டம், அவரது ரசிகர்களிடமும் புதிய வாக்காளர்களிடமும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், இந்த சாலை பயணம் விஜய்க்கு மக்களுடன் ஆழமான தனிப்பட்ட தொடர்பை ஏற்படுத்த உதவுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

tamilaga vetri kazhagam Edappadi Palaniswami

அதே சமயம் இந்த பிரச்சாரம் மூலம் திமுக, அதிமுக இரண்டையும் விஜய் வீழ்த்துவார் என்று தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள் வாதம் வைக்கின்றனர். இந்த வாதம் எந்த அளவிற்கு உண்மையானது என்ற கேள்வி எழுந்துள்ளது.

இது தொடர்பாக Tamil Gramsi என்ற ட்விட்டர் பக்கம் போஸ்ட் செய்துள்ளது. அதில், Absolute numbers ல பேசுங்க மக்களே. 39345587 இது 2021 இல் தமிழகத்தில் மொத்தம் பதிவான வாக்குகள். இதுல திமுக வாங்கியது - 2,09,82,088 அதிமுக - 1,83,63,499 அவங்க ரெண்டு பேரும் சேர்த்து வாங்கியது - 85% ஓட்டு இப்போ TVK இதுல இருந்து கிட்ட தட்ட 33% ஓட்டை பிரிக்கனும் அப்போ தான் ஆட்சியை பிடிக்க முடியும் இது கூட இந்த ரெண்டு கட்சிகளிடம் இல்லாத 15% மொத்தமா TVK வசம் இருக்கு அப்படின்னு assumption ல வெச்சிக்கிட்டா சொல்றேன்.

இதெல்லாம் 1 வருட கட்சிக்கு வாய்ப்பே இல்ல. TVK will create a huge impact but truth is they cannot come to power. உடனே 1967 , 74 எல்லாம் பேச கூடாது. 67 தானே தெரியும் அதுக்கு முன்னாடி 65 ல இந்திய ஒன்றியத்தை திமுகவும் அதன் தளபதிகளும் எதிர்த்து நின்னது தெரியாது ல. அதெல்லாம் சம்பவம். அப்படி எந்த factor உம் TVK கிட்ட இல்ல. அதிமுக தொடங்கிய MGR அதுக்கு முன்னாடி 20 வருஷம் திமுக முகம். அண்ணாவின் தொண்டன். அவரை சுத்தி பெரும் கூட்டம் இருந்துச்சு வெளிய போகும் போது regional heavy weights பலர் பின்னாடி போனாங்க. அப்படி TVK ல யாருமே இல்ல , விஜய் மட்டும் தான்.

ஆக மக்கள் வந்தாங்க அடுத்த CM எல்லாம் சொல்ல நல்லா இருக்கும், நிஜத்தில் 10% வரைக்கும் ஓட்டு வாங்கலாம். அது திமுக எதிர்ப்பு ஓட்டுகளா இருக்கும் பட்சத்தில் that's advantage DMK. இப்போ 26 லே ஆட்சி புடிக்காட்டி அடுத்த 5 வருஷம் விஜய் முழு நேர அரசியல் செய்யனும் அது தான் விஜயின் லிட்மஸ் டெஸ்ட். அதை செய்வாரா என்பது கேள்விக்குறி தான். அந்த நம்பிக்கையை விஜய் இன்னும் அவர் ரசிகர் அல்லாத மக்களுக்கு கொடுக்கல, என்று கூறி உள்ளார்.

விஜய்க்கு இருக்கும் சவால்

இப்பரப்புரையின் மிகப்பெரிய சவால்களில் ஒன்று, அந்த பயணம் திட்டமிடப்பட்டு உள்ள விதம்தான். தமிழ்நாடு ஒரு பரந்த மாநிலம்; மாறுபட்ட வட்டார அடையாளங்கள் மற்றும் உள்ளூர் பிரச்சனைகளைக் கொண்டுள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திற்கும் ஒரு நாள் அல்லது மிகக் குறுகிய கால அவகாசமே ஒதுக்கப்பட்டுள்ளது. ஒரு நாளில் 3 மாவட்டங்களை விஜய் விசிட் அடிக்கிறார். ஒரு மாவட்டத்திற்க்கு 20 நிமிடம் பேசினால் கூட போதிய விஷயங்களை பேச முடியாது.

உதாரணமாக, கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு ஆகிய நான்கு மேற்கு மாவட்டங்கள் அக்டோபர் தொடக்கத்தில் ஒரே குழுவாகப் பார்க்கப்படுகின்றன. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி ஆகிய தென் மாவட்டங்கள் ஒரே பயணத்தில் இணைக்கப்பட்டுள்ளன. இது ஒவ்வொரு மாவட்டத்திலும் விஜய்க்கு மிகக் குறைந்த நேரத்தையே வழங்கும். இதனால், மக்களின் கவலைகளை நேரடியாகக் கேட்டு விரிவாகப் புரிந்துகொள்ளும் திறன் குறையும்.

விஜய் செய்யும் தவறு

உதாரணமாக ஆட்சிக்கு வருவதற்கு முன் ஸ்டாலின் கிராமங்கள் கிராமங்களாக சென்று கிராம சபை கூட்டங்களை நடத்தினார். இதனால் அவர் பல விஷயங்களை கேட்க முடிந்தது. நேரடியாக பிரச்சனைகளை தீர்க்க வழி கொடுத்தது. மக்களிடம் முன்னிறுத்துவம் வழி வகுத்தது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் வெவ்வேறு முன்னுரிமைகளைக் கொண்டுள்ளன: டெல்டாவில் விவசாயிகள், திருப்பூரில் ஜவுளித் தொழிலாளர்கள், தெற்கில் மீனவர்கள், சென்னையில் தகவல் தொழில்நுட்ப இளைஞர்கள் என பல்வேறு தரப்பினர் உள்ளனர். தொடர்ச்சியான சந்திப்புகளால், விஜய் தனது செய்தியை உள்ளூர் பிரச்சனைகளுக்கு ஏற்ப மாற்றாமல் பொதுவான உரைகளையே நிகழ்த்த வேண்டிய கட்டாயம் ஏற்படலாம். இது சாலைப் பயணங்கள் உருவாக்க வேண்டிய உணர்வுபூர்வமான தொடர்பைப் பலவீனப்படுத்தலாம். இதுதான் விஜய்க்கு பெரிய சவாலாக மாறி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+