"உடனே மாத்திக்கோங்க".. முதல்வர் மீட்டிங்கை பார்த்து.. பற்றவைத்த தமிழிசை.. அப்போ உண்மையில் அதுதானா?
சென்னை: திடீரென தமிழ்நாடு அரசு பற்றியும், அரசியல் பற்றியும் தெலுங்கானா ஆளுநர் தமிழிசை கமெண்ட் அடித்து இருப்பது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் அங்கு கடுமையான எதிர்ப்புகளை சந்தித்து வருகிறார். தமிழிசைக்கும் முதல்வர் கே சந்திரசேகர ராவிற்கும் எம்எல்சி நியமன உறுப்பினர்கள் நியமனம் தொடங்கி பட்ஜெட் வரை பல விஷயங்களில் கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் கேசிஆர் தன்னை நடத்தும் விதம் பற்றி நேரடியாக டெல்லிக்கே சென்று பிரதமர் மோடியிடம் தமிழிசை புகார் வைத்தார்.

என்ன நடந்தது?
தெலுங்கானாவில் இப்படி பிரச்சனை நிலவி வரும் நிலையில்தான் திடீரென தமிழ்நாடு அரசு பற்றி கமெண்ட் அடிக்க தொடங்கி உள்ளார் தமிழிசை. கோவை பேரூரில் உள்ள தமிழ்கல்லூரியில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பேசிய தமிழிசை , தமிழை வளர்த்தது ஆன்மீகம், நான் மடங்களுக்கு செல்வதை பற்றி சிலர் மாற்றி மாற்றி எழுதுகிறார்கள். காவி ஆன்மீகத்தை குறிக்கிறது. அதனால் தான் சொல்கிறேன் காவி தமிழகத்தில் பெரியது. வலியது.தேசிய கொடியில் இருக்கும் காவியையும், சாமியார்கள் அணியும் காவியையும் நான் குறிப்பிடுகிறேன்.

தமிழிசை பேச்சு
கறுப்பை மட்டுமே பேசுபவர்கள், காவியின் கருத்தை அறிய முன்வந்திருப்பது வரவேற்கத்தக்கது, என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார். சமீபத்தில்தான் தருமபுரம் ஆதீனத்தை முதல்வர் ஸ்டாலின் சந்தித்தார். தலைமை செயலகம் வந்த தருமபுரம் ஆதீனம் முதல்வர் ஸ்டாலினுடன் சில நிமிடங்கள் பேசினார். தருமபுரம் ஆதீனம், காஞ்சிபுரம் ஆதீனம், திருவாவடுதுறை ஆதீனம், திருவண்ணாமலை ஆதீனம், குன்றக்குடி அடிகளார், சூரியநாராயண ஆதீனம் உள்ளிட்ட 11 ஆதீனங்கள் முதல்வர் ஸ்டாலினை சந்தித்து பேசினர்.

அதிகாரம் உள்ளது
இதைத்தான் நேரடியாக சொல்லாமல் மறைமுகமாக சுட்டிக்காட்டி தமிழிசை பேசி உள்ளார். தமிழ்நாடு பிரச்சனை பற்றி நான் பேசவில்லை.. ஆனால் டீ சாப்பிட கூப்பிட்டால் வரமாட்டேன் என்று சொன்னால் எப்படி தீர்வு கிடைக்கும். பிரச்சனைகளை பேசினால்தான் தீர்வு கிடைக்கும். துணை வேந்தர்கள் நியமனத்தில் நடுநிலை இருக்க வேண்டும். தமிழ்நாடு அரசுக்கு இதில் உரிமை இருந்தாலும் ஆளுநரும் கருத்து சொல்லும் அதிகாரம் இருக்க வேண்டும்.

உடனே மாற்றுங்கள்
அதோடு கவர்னர்கள் ஆளுமை படைத்தவர்களாக இருக்கலாம், இருந்தாலும் அவர்களும் சாதாரண மக்கள்தான். சாதாரண மக்களுக்கு கொடுக்கும் மரியாதையை ஆளுநர்களுக்கும் கொடுக்க வேண்டும். ஆனால் ஆளுநர்களுக்கு மரியாதைகள் கொடுக்கப்படுவது இல்லை. கருத்து வேறுபாடு இருக்கிறது என்று அவமரியாதையாக நடத்த கூடாது. இதை உடனே மாற்றிக்கொள்ள வேண்டும், என்று தமிழிசை குறிப்பிட்டுள்ளார்.

கன்பார்ம்
தெலுங்கானா ஆளுநராக இருக்கும் தமிழிசை கடந்த சில மாதங்களாக தமிழ்நாடு அரசு பற்றி கருத்து சொல்லாமல் இருந்தார். தேவையின்றி சர்ச்சை ஏற்படுத்த கூடாது என்று அவர் தமிழ்நாடு அரசியல் பற்றி கமெண்ட் அடிக்காமல் இருந்தார். இப்போது திடீரென தமிழ்நாடு அரசியல் பற்றி அவர் பேசி இருப்பதால்.. மீண்டும் ஆக்டிவ் அரசியலுக்கு அவர் வருகிறாரோ என்ற கேள்வியை எழுப்பி உள்ளது. சமீபத்தில் தமிழிசை ஆக்டிவ் அரசியலுக்கு வரப்போவதாக தகவல்கள் வந்த நிலையில்தான் தமிழிசையின் இந்த ஸ்டேட்மென்ட் விவாதங்களை ஏற்படுத்தி உள்ளது.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்!












Click it and Unblock the Notifications