எதிர்ப்பு வந்தாலும் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் ஏன்? அமைச்சர் அருண் ராஜ் சொல்றதை பாருங்க
சென்னை: அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரவசங்கள் குறைந்து கொண்டு இருக்கிறது. 2017 - 2018-ல் 66 சதவீதமாக இருந்தது, தற்போது 51 விழுக்காடாக குறைந்து உள்ளது. இதை கருத்தில் கொண்டுதான் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கும் என அமைச்சர் அருண்ராஜ் கூறியுள்ளார்.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் சென்னையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏன் இந்த திட்டம்?
மகப்பேறு தாய் இறப்பு விகிதம் இந்திய அளவில் தமிழ்நாடு குறைவாக உள்ளது. இருந்தாலும் அதை இன்னும் குறைக்கும் முயற்சிகளை இந்த அரசு மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு அங்கமாகத்தான் தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிறையெ பேர் இந்த திட்டத்தை அறிவித்த போது என்ன சொன்னார்கள் என்றால், இந்த திட்டத்திற்கு செலவு செய்யும் தொகையை மருத்துவமனைக்கு செலவிடலாம் என்று சொன்னர்கள்.
99 சதவீதம் அரசு மருத்துவமனையில் பிறந்தாலும்.. அரசு மருத்துவமனையில் நடக்கும் பிரவசங்கள் குறைந்து கொண்டுதான் இருக்கிறது. 2017 - 2018-ல் 66 சதவீதமாக இருந்தது தற்போது 51 விழுக்காடாக குறைந்து உள்ளது. இதனால், என்ன ஆகிறது என்றால் ஒரு தம்பதியினருக்கு ஒரு வேலை மற்றும் நடுத்தர குடும்பத்தினருக்கு தனியார் மருத்துவமனையில் பிரவசம் பார்ப்பதால் அவர்களுக்கான செலவு அதிகமாகி அத்தியாவசிய செலவுகள் எல்லாம் அடிபடுகிறது.
பிறப்பு விகிதம் குறைகிறது
இதை கருத்தில் கொண்டுதான் தங்க மோதிரம் திட்டம் கொண்டு வந்துள்ளோம். நிச்சயமாக இந்த திட்டம் ஏழை மற்றும் நடுத்தர குடும்பங்களுக்கு பெரிய பயனுள்ளதாக இருக்கும்" என்றார். மேலும் பிறப்பு விகிதம் சரிந்து வருவதாகவும் அமைச்சர் அருண் ராஜ் கூறினார். இது தொடர்பாக அருண் ராஜ் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் மொத்த பிறப்பு விகிதம் 1.4 கீழே குறைந்துவிட்டதாக ஆய்வில் கூறுகிறார்கள். சமீபத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பில்தான் இது விவரமாக தெரியும். இதனால், என்ன ஆகிறது என்றால், தமிழ்நாட்டு சமூகம் கொஞ்சம் கொஞ்சமாக முதுமை அடைந்துகொண்டே வருகிறது என்ற எண்ணம்தான் வருகிறது. 60 வயதுக்கு மேலே 16 சதவீதம் பேர் உள்ளனர். தம்பதியினரை அதிக குழந்தைகளை பெற்றுக்கொள்ள எப்படி ஊக்குவிக்க வேண்டும் என்ற சிந்தனை வரும் காலங்களில் வரலாம். ஆந்திராவில் 3-வது குழந்தை பெற்றால் அரசு சார்பில் ஊக்கத்தொகை கொடுக்கும் திட்டம் உள்ளது. வரும் காலத்தில் அந்த மாதிரி கூட இருக்கலாம்" என்றார்.
செப்டம்பர் 15 ஆம் தேதி முதல்
தவெக தனது தேர்தல் வாக்குறுதிகளில் ஒன்றாக தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை அறிவித்தது. தற்போது தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், வரும் செப்டம்பர் 15 ஆம் தேதி முதல் தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம் செயல்படுத்தப்படும் என்று முதல்வர் விஜய் அறிவித்தார். இந்த திட்டத்தின் படி அரசு மருத்துவமனைகளில் பிறக்கும் குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது. தாய்மாமன் தங்க மோதிரம் திட்டத்தை செயல்படுத்த தவெக அரசில் வங்கம் வகிக்கும் விசிக தரப்பில் இருந்தே எதிர்ப்பு கிளம்பியது.
திருமாவளவன் கருத்து
அந்த கட்சியின் தலைவர் திருமாவளவன் கூறும் போது, "தங்க மோதிரம் வழங்குவதற்காக செலவு செய்யும் ரூ. 755 கோடி ரூபாயைக் கொண்டு அரசு மருத்துவமனைகள் ஒவ்வொன்றிலும் தனியார் மருத்துவமனைகளைப்போல அனைத்து உயரிய வசதிகளையும் கொண்ட 'பிரசவ வார்டுகளை உருவாக்குவதோடு, தேவையான மருத்துவப் பணியாளர்களையும் நியமிப்பது அனைத்துத் தரப்பினருக்கும் பயன் அளிப்பதாக அமையும்.
இத்திட்டத்தின் மூலம் பிறந்த குழந்தைக்கு போடப்படும் தங்க மோதிரம் ஒரு சில மாதங்களிலேயே அக்குழந்தைகளின் கைகளுக்குப் பொருந்தாமலும் போய்விடும். எனவே, தாய் மாமன் தங்க மோதிரம் திட்டத்தை மிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்ய வேண்டும்" என்று கூறியிருந்தார்.


Click it and Unblock the Notifications
