எப்போது கரையை கடக்கும்னு புயல்ன்னா நேரம் சொல்லலாம்.. Depressionனுக்கு சொல்ல முடியாது.. பாலசந்திரன்
சென்னை: காற்றழுத்த தாழ்வு மண்டலம் எப்போது கரையை கடக்கும் என்பதன் நேரத்தை குறிப்பிட்டு சொல்ல முடியாது என்றும் புயல் என்றால் சொல்லலாம் என்றும் வானிலை மையத்தின் தென் மண்டல தலைவர் எஸ் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.
Recommended Video
வங்கக் கடலின் தென்கிழக்கு பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று முன் தினம் உருவானது. இது நேற்றைய தினம் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இது தற்போது சென்னைக்கு கிழக்கு தென் கிழக்கு பகுதியில் 170 கிமீ. தூரத்தில் உள்ளது.
இது மேற்கு, வடமேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது. இது காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே கடலூர் அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டது.

திசை மாறுபாடு
இந்த நிலையில் காற்றின் திசை மாறுபாடு காரணமாக இது சென்னை அருகே கரையை கடக்கும் என சொல்லப்பட்டுள்ளது. அதாவது வடசென்னை அருகே மாலை கரையை கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. இது கரையை கடக்கும் போது மணிக்கு 45 கி.மீ. வேகத்தில் காற்று வேகமாக வீசும் என்பதால் பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியே வர வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம்
இன்றைய தினம் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இன்றைய வானிலை அப்டேட்டுகளை வழங்குவதற்காக வானிலை மைய தென் மண்டல தலைவர் எஸ் பாலசந்திரன் செய்தியாளர்களை சந்தித்தார்.

பாதிப்பு
அப்போது அவர் கூறுகையில் இது புயலாக மாற வாய்ப்பில்லை. புயல் என்றால் ஒரு குறிப்பிட்ட பகுதிக்கு மட்டுமே பாதிப்பை தரும். இது காற்றழுத்த தாழ்வு மண்டலம் என்பதால் பெரிய பகுதி. இது நகரும் திசையெல்லாம் பாதிப்புகளை ஏற்படுத்தும். மேலும் இது எந்த நேரத்தில் கரையை கடக்கும் என்பதையும் சொல்ல இயலாது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம்
புயல் என்றால் சொல்லிவிடலாம். காற்றழுத்த தாழ்வு மண்டலம் அகன்ற பகுதி அதனால் இது எந்த நேரத்தில் கரையை கடக்கும் என்பதை சொல்ல முடியாது. இது கரையை கடப்பது காலை, மாலை, இரவு என்று மட்டுமே சொல்ல முடியும். மேலும் வடகிழக்கு பருவமழை காலத்தில் இந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் கொடுப்பது இயல்பான மழையே. இதில் அதிகம் என்றெல்லாம் இல்லை என்றார்.
-
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
பெங்களூர், ஹைதராபாத்-யிடம் தோற்றுப்போகும் சென்னை.. தலையெழுத்தை மாற்றுவாரா விஜய்! -
1700 ஏக்கர் சிப்காட் பூங்கா ஒரு சர்வதேச விமான நிலையத்திற்கு இணையான வளர்ச்சியை கொடுக்குமா?- ஒரு அலசல் -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம்












Click it and Unblock the Notifications