ஒற்றை காலில்.. எகிறி உதைக்கும்.. விஜயகாந்தை அப்படி மட்டும் பார்த்திருக்க கூடாது! இப்படியா நடக்கணும்!

Subscribe to Oneindia Tamil

சென்னை; தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில்.. ரசிகர்கள் அவரை கடைசியாக கண்ட காட்சிதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

பொதுவாக நடிகர் விஜயகாந்த் மற்ற கோலிவுட் நடிகர்கள் போல இல்லாமல்.. பெரும்பாலும் டூப் இன்றி நடிப்பதையே விரும்பும் நபர். பெரிய பெரிய சண்டை காட்சிகளில் ரிஸ்க் எடுக்க வேண்டும் என்றாலும் கூட அவர் பெரும்பாலும் டூப் போட மாட்டார்.

நானே சண்டை போடுகிறேன் என்று இறங்கி வேலை செய்வார். பல அடிகள் உயரத்தில் இருக்கும் கடிகாரத்தில் நின்று இவர் போட்ட சண்டை எல்லாம் தேசிய அளவில் கவனம் பெற்றது. அந்த அளவிற்கு ஆரோக்கியமாக இருந்தவர் விஜயகாந்த்.

What is the real reason behind DMDK Founder Vijayakanth demise?

கடந்த சில மாதங்களாக அவரின் உடல்நிலை மோசமானதன் காரணமாக அவரால் ஆக்டிவாக இருக்க முடியவில்லை. 2011ல் எதிர்கட்சித் தலைவர் ஆன சில மாதங்களிலேயே விஜயகாந்த் ஆக்டிவாக இல்லாமல் போனார். கொஞ்சம் கொஞ்சமாக அவரால் பெரிதாக நடக்கவோ, பேசவோ முடியவில்லை.

அவரின் உடல் ஆக்டிவ் குறைந்து போனது முதலில் குரலில்தான் தெரிந்தது. அதன்பின் நடக்க கூட முடியாமல் அவர் சிரமப்படும் நிலை ஏற்பட்டது. இதற்காக அவர் வெளிநாடுகளுக்கு கூட சென்று சிகிச்சை பெறும் நிலை ஏற்பட்டது. இதனால் அவரின் உடலநிலை மிக மோசமானது.

கடைசி தோற்றம்: தேமுதிக நிறுவன தலைவர் விஜயகாந்த் மரணம் அடைந்துள்ள நிலையில்.. ரசிகர்கள் அவரை கடைசியாக கண்ட காட்சிதான் பலருக்கும் அதிர்ச்சியை கொடுத்துள்ளது. அவர் கடைசியாக தேமுதிக பொதுக்குழு கூட்டத்தில் கலந்து கொண்டார்.

பேச முடியாமல் கண்ணாடி அணிந்தபடி.. தலையை கூட அசைக்க முடியாமல் அவர் இருந்த கோலம் ரசிகர்களை அதிர வைத்தது. எப்படி இருந்த மனுஷனை.. இப்படி பார்க்க வேண்டுமா என்பது போல ரசிகர்கள் கொதித்து போனார்கள். அவரால் கையை கூட தூக்க முடியாத நிலையில் மனைவி பிரேமலதாதான் கையை தூக்கி அவருக்கு உதவிகளை செய்தார்.

( கொரோனா காரணமில்லை.. ஆனால்.. அதிகாலையில் விஜயகாந்த் உடல் நிலைக்கு என்ன ஆனது? பின்னணி)

ஸ்டண்ட் இல்லாமல்.. ஒற்றை காலில்.. எகிறி உதைக்கும். விஜயகாந்தை அந்த தோற்றத்தில் பார்த்தது ரசிகர்களுக்கே ஷாக்கிங்காக இருந்தது.

மரணம் எப்படி?: மியாட் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்தார். அவருக்கு இன்று அதிகாலை தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

அதிகாலை அவரின் உடல்நிலை மிக மோசமடைந்தது. ஐசியூவில் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட நிலையில் சிகிச்சையோ பலனின்றி அவர் மரணம் அடைந்தார்.

What is the real reason behind DMDK Founder Vijayakanth demise?

வழக்கமான பாதிப்பு இல்லை: அவருக்கு அவ்வப்போது இப்படி உடல்நிலை மோசமானது வழக்கம். இதற்காக அவர் வெளிநாட்டில் சிகிச்சை பெறுவதும் வழக்கம். ஆனால் இந்த முறை அவரின் உடல்நிலை மிகவும் நலிவுற்றதாக கூறப்பட்டது.

இதன் காரணமாகவே தேமுதிக நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த் கடந்த சில வாரங்களுக்கு முன்பே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்தார். அங்கே அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அப்போதே அவரின் உடல்நிலை மோசமானதாக செய்திகள் வந்தன. அதன்பின் டிஸ்சார்ஜ் ஆன நிலையில், நேற்று கொரோனா ஏற்பட்டு உள்ளது. கொரோனா + நாட்பட்ட நுரையீரல் பாதிப்பு + நுரையீரல் அழற்சி மூன்றும் சேர்ந்துதான் அவரின் உடல்நிலையை மோசமாக்கி உள்ளது.

இதனால் அவருக்கு அளிக்கப்பட்ட தீவிர சிகிச்சை பலன் அளிக்காமல் இன்று காலை மரணம் அடைந்தார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+