இதை பார்த்தா குடலே நடுங்குதே! ஒரு ஏரியை அப்படியே காணோமே! தீயாய் பரவிய வேளச்சேரியின் பழைய மேப்.. ஷாக்
சென்னை: சென்னையில் உள்ள பல பகுதிகளில் வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. முக்கியமாக சென்னையில் தாழ்வான பகுதி என்று கருதப்படும் வேளச்சேரி பகுதியில் மிக கனமழை பெய்துள்ளது. அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது.
சென்னையில் சேரி என்று முடியும் பகுதிகள், பாக்கம் என்று முடியும் பகுதிகள் எல்லாமே ஏரிகள், குளங்கள், நதிகள் கொண்ட நீர் நிலை பகுதிகள் ஆகும். உதாரணமாக காரப்பாக்கம், ஊரப்பாக்கம் எல்லாமே ஒரு காலத்தில் நிறைய ஏரிகள் கொண்ட இடங்கள் ஆகும்.

அதேபோல் வேளச்சேரி போன்ற இடங்களில் மிக அதிக அளவில் நிலப்பகுதிகளை மட்டுமின்றி ஏரிகளை கொண்ட இடம் ஆகும். 100 வருடங்களுக்கு முன்பு வரை கூட இங்கே ஏகப்பட்ட ஏரிகள் இருந்துள்ளன. இவை எல்லாம் இப்போது ஆக்கிரமிக்கப்பட்டுவிட்டன.
யார் தவறு: காலப்போக்கில் இந்த நிலங்கள் எல்லாம் ஆக்கிரமிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்ட காரணம் இவர்கள்தான் என்று எந்த அரசையும் குற்றம் சொல்லிவிட. முடியாது. ஏனென்றால் காலப்போக்கில் எல்லா ஆட்சிகளிலும் இது போன்ற ஆக்கிரமிப்பு சம்பவங்கள் நடந்து உள்ளன.
பொதுவாக நதிகளுக்கும், யானைகளுக்கும் ஒரு குணம் உண்டு. யானைகளின் பாதைகளை மறைக்க முடியாது. யானைகள் செல்லும் பாதையில் ஆக்கிரமிப்பு செய்து வீடுகளை கட்டினால் யானைகள் வழி மாறி செல்லாது. யானைகள் தாங்கள் எப்போதும் செல்லும் பாதைகளை மாற்றாது, மறக்காது.
அப்படித்தான் நதிகளும். அவை எப்போதும் செல்லும் பாதைகளுக்கு கண்டிப்பாக சென்று விடும். அப்படித்தான் இப்போது வெள்ளம் ஏற்பட்ட சென்னையின் பல பகுதிகள் ஏற்கனவே ஒரு காலத்தில் நதியாக இருந்த பகுதிகள் ஆகும். இப்போது ஆக்கிமிரப்பு காரணமாக வீடுகளாக, குடியிருப்புகளாக மாறி உள்ளன .
குடியிருப்புகள்: உதாரணமாக சென்னையில் தாழ்வான பகுதி என்று கருதப்படும் வேளச்சேரி பகுதியில் மிக கனமழை பெய்துள்ளது. அங்கே கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. இங்கே வெள்ளம் ஏற்பட முக்கியமான காரணங்களில் ஒன்று அங்கே செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகள் ஆகும்.
இந்த நிலையில்தான் ஒரு காலத்தில் வேளச்சேரி எப்படி இருந்தது என்ற பழைய மேப் ஒன்று டிரெண்டாகி வருகிறது. அதன்படி வேளச்சேரி ஏரி இருந்த இடம்.. தற்போது அந்த இடத்தில் செய்யப்பட்டு உள்ள ஆக்கிரமிப்புகளை காட்டும் விதமாக ஒப்பீட்டு புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
Photo talks for itself. Pic from @sanjayweather_c pic.twitter.com/7Zpmb03rO1
— krithika sivaswamy (@krithikasivasw) December 5, 2023
இந்த அளவிற்கு ஆக்கிரமிப்புகளை செய்தால் சென்னை எப்படி புயல், வெள்ளத்தில் இருந்து தப்பிக்கும் என்ற கேள்வியை எழுப்பும் விதமாக , இந்த புகைப்படம் டிரெண்டாகி வருகிறது.
வெள்ளம்: சென்னையில் மிக்ஜாம் புயல் காரணமாக கடுமையான வெள்ளம் ஏற்பட்டு உள்ளது. மிக்ஜாம் புயல் நேற்று முதல்நாள் சென்னையை தாக்கியது. சென்னைக்கு அருகே 100 கிமீ தூரத்தில் புயல் நிலை கொண்டு இருந்தது. அங்கே இருந்தே புயல் மிக மிக மெதுவாக நகர்ந்தது.
இதன் காரணமாக சென்னையில் வரலாற்றில் இல்லாத அளவிற்கு மிக கனமழை பெய்தது. 2015 ஐ விட மோசமான கனமழை சென்னையில் பெய்தது. கடந்த 47 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கனமழை சென்னையில் கொட்டி தீர்த்தது. சென்னையில் பெய்த மழையால் பல இடங்களில் வெள்ளம் ஏற்பட்டது.












Click it and Unblock the Notifications