திமுகவை விடுங்க.. சீறி எழுந்த எடப்பாடி.. அதிர்ந்து அமர்ந்த பாஜக.. சீனிலேயே இல்லையே.. கவனிச்சீங்களா?
சென்னை: தமிழ்நாடு அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென எழுச்சி பெற தொடங்கி உள்ளார். எடப்பாடியின் எழுச்சி.. திமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக மாறி உள்ளது. திமுகவை விட பாஜகவிற்கு இது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
கடந்த லோக்சபா தேர்தலுக்கு முன்பு வரை தமிழ்நாட்டில் பாஜகதான் தன்னை பிரதான எதிர்க்கட்சி என்று கூறி வந்தது. அதிமுகவிடம்தான் அந்த தகுதி நம்பர் அடிப்படையில் இருந்தாலும் நாங்கள்தான் எதிர்க்கட்சி என்று பாஜக மேடைக்கு மேடை கூறி வந்தது. நாங்கள்தான் நம்பர் 2 , அதிமுக சீனிலேயே இல்லை என்றும் கூறி வந்தது.

அதோடு இல்லாமல் பாஜகவின் பேச்சை பலப்படுத்தும் வகையில், அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி வந்த காலத்தில் இருந்து வரிசையாக அக்கட்சி தோல்விகளை தழுவி வருகிறது. வரிசையாக 10 தேர்தல்களில் அதிமுக தோல்வி அடைந்து உள்ளது.
அதன்படி 2017 ஆம் ஆண்டு ஆர்.கே.நகர் இடைத்தேர்தல், 2019 ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல், அதே ஆண்டு 22 சட்டசபை தொகுதிகளின் இடைத்தேர்தல், 2020 ஊரக உள்ளாட்சி தேர்தல், 2021 சட்டசபை தேர்தல், 2021 ஆம் ஆண்டு நடந்த 9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தல், 2022 ஆம் ஆண்டு நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல், 2023 ஆம் ஆண்டு ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல், 2020ல் நடந்த கன்னியாகுமரி லோக்சபா இடைத்தேர்தல் என மொத்தம் 9 தோல்விகளை எடப்பாடி தலைமையிலான அதிமுக சந்தித்தது. இதோடு 10வது தேர்தலில் தோல்வி அடைந்து உள்ளது.
இந்த தொடர் தோல்விகள் காரணமாக எடப்பாடி மீது அதிமுக தலைவர்கள் பலரும் அப்செட்டில் இருந்தனர். முக்கியமாக எடப்பாடி ஆக்டிவாக இல்லை. அவர் பெரிதாக வலுவான முடிவுகளை எடுக்கவில்லை என்று விமர்சனங்கள் வைக்கப்பட்டன. அந்த விமர்சனங்களுக்கு தற்போது எடப்பாடி பழனிசாமி முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
எடப்பாடியிடம்எழுச்சி: அதிமுக எங்கே உடையுமோ என்று கருதப்பட்ட நிலையில்தான் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியிடம் மிகப்பெரிய அளவில் அரசியல் ரீதியான மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன. திடீரென எடப்பாடி எழுச்சி பெற்றுள்ளார். முன்பு எடப்பாடி அடிக்கடி ஓய்வு எடுத்தது, பெரிதாக வெளியே தலைகாட்டாமல் இருந்தது போன்ற நடவடிக்கைகள் இப்போது இல்லை.
கடுமையான விமர்சனங்களை வைப்பது, நேரடியாக களத்திற்கு செல்வது அதிமுகவிடம் அதிகம் மிஸ் ஆனது. அது தற்போது எடப்பாடியிடம் தெரிய தொடங்கி உள்ளது. எடப்பாடி பழனிசாமி மேலும் ஆக்டிவ் ஆகி உள்ளார். அவரின் செயல்பாடுகளில் பெரிய அளவில் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.
முக்கியமாக மக்களை நேரில் சந்திப்பது... மக்களிடம் இருந்து அரசியலை செய்வது என்று எடப்பாடி பழனிசாமியிடம் நல்ல மாற்றங்கள் தெரிய தொடங்கி உள்ளன. திமுக முன்பு எதிர்க்கட்சியில் இருந்த போது போராட்டம், ஆர்ப்பாட்டம் என்று எப்போதும் ஸ்டாலின் லைம்லைட்டில் இருப்பார். அது அதிமுகவிடம் மிஸ் ஆனது. தற்போது அது மீண்டும் வந்துள்ளது.
பாஜகவிற்கு சிக்கல்: தமிழ்நாடு அரசியலில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி திடீரென எழுச்சி பெற தொடங்கி உள்ளார். எடப்பாடியின் எழுச்சி.. திமுகவிற்கு பெரிய அதிர்ச்சியாக மாறி உள்ளது. திமுகவை விட பாஜகவிற்கு இது பெரிய பிரச்சனையாக மாறி உள்ளது.
ஏனென்றால் பாஜகதான் தன்னை எதிர்க்கட்சி என்று கூறி வந்தது. ஆனால் இப்போது பாஜக சீனிலேயே இல்லாமல் காணாமல் போய்விட்டது. அண்ணாமலை பேட்டிகளை கொடுப்பது இல்லை. பாஜகவில் உட்கட்சி மோதலும் உச்சத்தில் உள்ளது.
ஆனால் அதிமுக உட்கட்சி மோதலை எல்லாம் ஒதுக்கிவிட்டு அடித்து ஆட தொடங்கி உள்ளது. எடப்பாடி பேட்டி, போராட்டம், அறிக்கை என்று கவனம் பெற்றுள்ளார். மீண்டும் தமிழக அரசியல் களம் இதன் மூலம் திமுக vs அதிமுக என்று மாறி உள்ளது.
-
ஒரு உயிர் போயிருச்சு..விஜய் வைத்திருக்கும் கைக்கூலி! அதிகாரம் எப்பவுமே இருக்காது! உதயகுமார் வார்னிங் -
தீக்குளித்த தஞ்சை மகேந்திரனின் குடும்பத்தினரிடம் மன்னிப்பு கேட்டார் எடப்பாடி! ரூ 55 லட்சம் நிவாரணம் -
“எனது கடைசி ஆசை..” வீடியோவில் பேசிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட அதிமுக தொண்டர்! கட்சியினர் அதிர்ச்சி! -
எடப்பாடி பழனிசாமியை விஜய் சந்திக்காதது ஏன் தெரியுமா? இதென்ன ட்விஸ்ட் ? மொத்த அதிமுகவை அள்ளுதே தவெக -
விஜய்க்கு அரசு பாதுகாப்பு மேல நம்பிக்கை இல்லையா? தனி பாதுகாவலரோடு வருவது ஏன்? லாக் செய்த அதிமுக -
இதுவும் பெரிய திமிங்கலம் தான்.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு வைத்த விஜய்! சி.விஜயபாஸ்கரின் திடீர் மூவ்! -
இபிஎஸ் வர்றதுக்குள்ள இப்படியா.. எஸ்.பி.வேலுமணி முகத்துக்கு நேராக துரோகின்னு கத்திய அதிமுக நபர் இவரா? -
பெரிய புள்ளி.. அதிமுகவுக்கு அடுத்த ஆப்பு! வலையை விரித்த செங்க்ஸ்.. தவெகவுக்கு தாவ தயாரான சிவிஎஸ்! -
எல்லாத்தையும் நான் பாத்துக்குறேன்..நீங்க ஒத்துழைப்பு மட்டும் கொடுங்க! ர.ர.க்களுக்கு எடப்பாடி மெசேஜ்! -
அதிமுக பெயரையே தவிர்க்கும் விஜய்?.. தவெக வியூகத்தால் அதிருப்தியில் தொண்டர்கள்! -
தொண்டர்களுக்கு மதிப்பு கொடுங்க.. அதிமுக தலைவர்கள் திருத்தி கொள்ளணும்.. செல்லூர் ராஜூ ஒரே போடு! -
அதிமுகவிற்கு ஆதரவாக வந்த திமுக.. முதல்வர் விஜய்க்கு எதிராக வியூகம்.. கவனிச்சீங்களா












Click it and Unblock the Notifications