அடுத்தடுத்து 6 சம்பவங்கள்.. எடப்பாடி ஏதாவது பண்ணியே ஆகணும்.. தடதடக்கும் அதிமுக தலைகள்.. என்னாச்சு?
சென்னை: அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் வரிசையாக 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ள நிலையில், கட்சியில் ஏக்நாத் ஷிண்டேக்கள் உருவாகாமல் இருக்க.. எடப்பாடி இந்த தேர்தலில் தன்னை நிரூபிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
அதிமுக ஜெயலலிதா மறைவிற்கு பின் எந்த தேர்தலிலும் வெற்றிபெறவே இல்லை. வரிசையாக 6 தேர்தல்களில் தோல்வி அடைந்துள்ளது. முக்கியமாக எடப்பாடி பழனிசாமியை முதல்வர் வேட்பாளராக முன்னிறுத்தியும் கூட அதிமுக சட்டசபை தேர்தலில் படுதோல்வி அடைந்தது.

2021 சட்டசபை தேர்தல்
2019 லோக்சபா தேர்தல்
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்
கிராமப்புற உள்ளாட்சி தேர்தல்
9 மாவட்டங்களில் உள்ளாட்சி இடைத்தேர்தல்
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் என்று மொத்தமாக 6 தேர்தல்களில் வரிசையாக அதிமுக தோல்வி அடைந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில்தான் தற்போது லோக்சபா தேர்தலிலும் அதிமுக தோல்வி அடையும் என்று கருத்து கணிப்புகள் கூறுகின்றன.
இதில் கவனிக்க வேண்டிய விஷயம்.. இதுதான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் அதிமுக தனியாக எதிர்கொள்ளும் தேர்தல் ஆகும். அதோடு பாஜகவுடன் இதில் கூட்டணியில் இல்லை. பாஜக கூட்டணி உடனும் அதிமுக தோல்வி அடைந்தது.. அதே சமயம் .. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் பாஜகவுடன் அதிமுக கூட்டணி இன்றி போட்டியிட்டது. அதிலும் அதிமுக தோல்வி அடைந்த நிலையில் 2024 லோக்சபா தேர்தல் அதிமுகவிற்கு மிக தேவையான வெற்றியை கொடுக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
அதிமுக ஒற்றை தலைமைக்கு கீழ் இருக்கும் நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கும் பிரஷரை அதிகரிக்கும் விதமாக அவருக்கு எதிராக கருத்து கணிப்புகள் வந்துள்ளன.
கணிப்புகள் சொல்வது என்ன?: அதன்படி இந்தியா டுடேவின் மூட் ஆப் தி நேஷன் சர்வேவில், தமிழ்நாட்டில் திமுக கூட்டணி 39 இடங்களிலும் வெல்லும். கடந்த முறை 38 இடங்களில் வென்றது. இந்த முறை.. ரவீந்திரநாத் எம்பி வென்ற இடத்தையும் சேர்த்து 39 இடங்களிலும் திமுகவே வெல்லும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
அதேபோல் வாக்கு வங்கி 47 சதவிகிதம் ஆக இருக்கும். பாஜக ஒரு இடத்தில் கூட வெல்லாது. ஆனால் வாக்கு வங்கி 15 சதவிகிதம் ஆக உயரும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதில் அதிமுக வாக்கு வங்கி கூறப்படவில்லை. மாறாக "others" என்று கூறி.. மொத்தமாக மற்ற கட்சிகளின் வாக்கு வங்கி 38 சதவிகிதம் என்று கூறப்பட்டு உள்ளது.
கணிப்பு; இன்னொரு பக்கம் டைம்ஸ் நவ் வெளியிட்ட கணிப்பில் , திமுக கூட்டணி லோக்சபா தேர்தலில் 59.7 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. அதேபோல் பாஜக 20.6 சதவிகிதம் வாக்குகளை பெறும் என்று கணிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் அதிமுக 16 சதவிகித கருத்து கணிப்புகளை பெறும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
தமிழ்நாடு (மொத்த இடங்கள்- 39): லோக்சபா தொகுதி கணிப்புகள் இதோ:
- பாஜக: 1
- திமுகவின் இந்தியா கூட்டணி - 36
- அதிமுக: 2
- மற்றவை: 0
-
பலே ஆளுங்க அண்ணாமலை.. ‘பயோ’வைப் பாருங்களேன்! பிள்ளையையும் கிள்ளி.. தொட்டிலையும் ஆட்டி.. பரபர பாஜக! -
பாஜகவில் இருந்து விலகினார் அண்ணாமலை! நிதினிடம் தமிழக பாஜக மீது அடுக்கடுக்கான புகார் -
அந்த 2 லேடீஸ்..1 மாஜி தலை! பாஜக மண்ணைக் கவ்வ ‘இவர்கள்’ தான் காரணம்! அமித் ஷாவிடம் அடுக்கிய அண்ணாமலை! -
அண்ணாமலை முடிவால் கண்சிவந்த அமித்ஷா.. நயினாரை உடனே டெல்லி அழைத்த பாஜக மேலிடம்.. பாஜகவில் பரபரப்பு -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
ரொம்ப அவசரப்படாதீங்க அண்ணாமலை.. அமித் ஷா போட்ட அன்புக் கட்டளை! இன்னும் தமிழ்நாடு திரும்பாதது ஏன்? -
பாஜக போல் வேண்டாம்.. அண்ணாமலையின் பிளான் என்ன? கிறிஸ்தவர் + இஸ்லாமியர்களையும் அரவணைத்து தனிக்கட்சி -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டைம் பார்த்து அடிக்க ரெடியாகும் பாஜக? தொகுதி மறுவரையறை, ஒரே நாடு ஒரே தேர்தல்! மோடி போடும் கணக்கு












Click it and Unblock the Notifications