விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு.. மாநாட்டு பந்தலில்.. ஆங்காங்கே வைக்கப்பட்ட க்யூ ஆர் கோடு.. ஏன்?
சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு இன்று விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் உள்ள வி சாலையில் பிரம்மாண்டமாக நடைபெற உள்ளது. இதற்காக பிரம்மாண்ட ஏற்பாடுகள் விக்கிரவாண்டியில் செய்யப்பட்டு உள்ளது.
தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் கட்சியை தொடங்கினார். இந்த கட்சி இந்திய தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அவரின் அரசியல் கொள்கை இன்று அறிவிக்கப்படும். ஏற்கனவே பெரியார்.. அண்ணா.. அம்பேத்கார்.. காமராஜர் மூவேந்தர்கள் என்று கலவையாக பல தலைவர்களின் புகைப்படங்கள், கொள்கை மாறுபாடு கொண்டவர்களின் புகைப்படங்களை கட் அவுட் வைத்து பிரம்மாண்டமாக நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழக மாநாடு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

இந்த மாநாடு தொடர்பாக தமிழக வெற்றிக் கழக நிர்வாகி டாக்டர் டிகே பிரபு செய்துள்ள போஸ்டில், நமது தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு தொண்டர்களின் பாதுகாப்பிற்காக ஆம்புலன்ஸ், மருத்துவக் குழு, முதல் உதவி, ஆக்சிஜன் சிலண்டர்கள் என அனைத்தும் தயார் நிலையில் உள்ளது.
மாநாடு நடைபெற உள்ள நிலையில் இன்றே அனைத்தும் சரியாக வேலை செய்கிறதா, வேறு எதுவும் தொண்டர்களின் பாதுகாப்பிற்காக தேவைப்படுகிறதா என்று தலைவர் தளபதி மற்றும் அண்ணன் என். ஆனந்த் அவர்களின் உத்தரவின் பேரில் ஆய்வு செய்தேன்.
வெற்றிக் கொள்கைத் திருவிழாவை தொண்டர்கள் அணி திரள, மாபெரும் அரசியல் சரித்திரத்தை நிகழ்த்திக் காட்டுவோம்.
இன்று நடைபெற உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டை முன்னிட்டு, தலைவர் தளபதி அவர்களின் வழிகாட்டுதலின் படி, பொதுச்செயலாளர் அண்ணன் என். ஆனந்த் Ex MLA அவர்களின் ஆணைப்படி, மருத்துவக்குழு சார்பில் செய்யப்பட்டுள்ள முன்னேற்பாடுகள்👇

- 150 மருத்துவர்கள் மற்றும் 150 செவிலியர்கள் மாநாட்டிற்கு வரும் தொண்டர்களின் பாதுகாப்பிற்கான பணியில் ஈடுபட உள்ளனர்.
- 25 தனியார் ஆம்புலன்ஸ் மாநாடு தொடங்கி முடியும் வரை தயார் நிலையில் இருக்கும்.
- மொத்தம் 18 மெடிக்கல் கேம்ப் மாநாடு நடைபெறும் இடத்தை சுற்றி அமைக்கப்பட்டு உள்ளது.

- அனைத்து ஆம்புலன்சிலும் ஆக்சிஜன் சிலண்டர் இருக்கும். மேலும் உடனடி சிகிச்சைக்கு தேவைப்படும் அனைத்து மருத்துவ உபகரணங்களும் அதில் இருக்கும்.
- இன்று மாலையில் இருந்து மாநாடு முடியும் வரை அனைத்து முன்னேற்பாடுகளும் தயார் நிலையில் இருக்கும்.

- 30 தலைசிறந்த மருத்துவர்கள் கொண்ட குழுவை கொண்டு என்ன மாதிரியான பிரச்சினைகள் வரும் என்பதை பற்றி தீவிரமாக ஆராய்ந்து, அதற்கேற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- ஒவ்வொரு மெடிக்கல் கேம்ப் அருகிலும் ஒரு ஆம்புலன்ஸ் நிற்கும். மொத்தம் 300 முதல் 350 பேர் மாநாட்டின் மருத்துவ குழுவில் இடம் பெற்றுள்ளனர், என்று குறிப்பிட்டு உள்ளார்.

தவெக மாநாட்டில் எத்தனை பேர் பங்கேற்கிறார்கள் என்பதை கண்டறிய விஜய் புது வியூகம் ஒன்றை களமிறக்கி உள்ளார். அதன்படி தமிழக வெற்றிக் கழக மாநாட்டுத் திடலில் ஆங்காங்கே QR CODE வைக்கப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழக தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள், அதனை ஸ்கேன் செய்து, வருகை பதிவு செய்து கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.












Click it and Unblock the Notifications