சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

இணையத்தை உலுக்கிய ஒரு போட்டோ.. இது என்ன பார்க்கவே இப்படி இருக்கு? என்னென்னு கண்டுபிடிங்க பார்க்கலாம்

Google Oneindia Tamil News

சென்னை: இணையத்தில் டிரெண்டாகி வரும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் இணையம் முழுக்க நிறைய நிரம்பி இருக்கின்றன. ஆப்டிக்கல் இல்யூஷன் என்றால் ஒன்றுமல்ல.. ஒரே போட்டோவில் பல உருவங்கள் மறைந்து இருந்தால் அதை ஆப்டிக்கல் இல்யூஷன் என்பார்கள்.

உதாரணமாக சின்ன வயதில் நாம் மம்மி டாடி பாக்கு சாப்பிட்டு இருப்போம்.

அதை ஒரு பக்கம் பார்த்தால் பெண் போல உருவம் இருக்கும். இன்னொரு பக்கம் பார்த்தால் ஆண் போன்ற உருவம் இருக்கும். இதுவும் கூட ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படம்தான்!

ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ் ஆணா? பெண்ணா? இந்த போட்டோவில் உங்களுக்கு என்ன தெரிகிறது சொல்லுங்க! பின்னணியில் இருக்கும் சர்ப்ரைஸ்

மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்! மனிதனா? பறவையா? இந்த போட்டோவில் என்ன தெரியுது? உங்கள் காதல் வாழ்க்கை பற்றி ஈஸியா சொல்லிடலாம்!

போட்டோ டிரெண்ட்

போட்டோ டிரெண்ட்

செயற்கையாக வடிவமைக்கப்படும் ஆப்டிக்கல் இல்யூஷன் படங்கள் மட்டுமின்றி இயற்கையாக இருக்கும் சில இடங்கள் கூட மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தும். அப்படி ஒரு படம்தான் நெட்டிசன்கள் இடையே வைரலாக பரவி வருகிறது. அலேசிக் என்ற ரெட்டிட் பயன்பாட்டாளர் இந்த புகைப்படத்தை பகிர்ந்து உள்ளார். இதில் தண்ணீரில் வித்தியாசமான உருவம் ஒன்று இருப்பது போன்ற தோற்றம் உள்ளது. ஒரு பெண்ணின் கால் அருகிலேயே உள்ளது.

 ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆப்டிக்கல் இல்யூஷன்

ஆனால் அந்த பெண்ணின் காலை விட இது பல மடங்கு பெரிதாக உள்ளது. பார்க்கவே ராட்சச தோற்றத்துடன் இந்த உருவம் உள்ளது. என்னங்க இது என்று நெட்டிசன்கள் பலரையும் இந்த புகைப்படம் குழப்பி உள்ளது. பார்க்க கொஞ்சம் டார்க் பிங்க் நிறத்தில் அது காணப்படுகிறது. பலரும் இது என்ன என்று கேட்ட நிலையில், அந்த நபர் இதை பற்றி விலகி உள்ளார். இது ராட்சச ஜெல்லி மீன் என்று கூறியுள்ளார். இது இறந்த நிலையில் காணப்படுகிறது. தென் கொரியாவில் பீச் ஒன்றில் இதன் புகைப்படத்தை எடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

தென்கொரியா

தென்கொரியா

தென்கொரியாவில் உள்ள இஞ்சியான் என்ற கடல் கரையில் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்கு முன் இவ்வளவு பெரிய சைசில் ஜெல்லி மீனை பார்த்ததே இல்லை என்று நெட்டிசன்கள் பலர் இதற்கு கீழே கமெண்ட் செய்துள்ளனர். இது 2 மீட்டர் வரை அகலம் கொண்டதாக காணப்படுகிறது. இறந்த நிலையில் கடலில் மிதந்து வந்த போது அதை புகைப்படம் எடுத்துள்ளனர்.

என்ன நடக்கும்?

என்ன நடக்கும்?

இது என்ன வகையான ஜெல்லி மீன் என்று நெட்டிசன்கள் பலரும் கேள்வி எழுப்பி உள்ளனர். அதற்கு சிலர்.. இது Nomura's Jellyfish ஆக இருக்கலாம் என்று பதில் அளித்துள்ளனர். Nomura's Jellyfish என்பது மிகவும் பெரிய வகை ஜெல்லி மீன்கள் ஆகும். ஜெல்லி மீன்கள் வகைகளின் சிங்கம் இதுதான் என்று அழைக்கப்படும். அதோடு இது மிகவும் ஆபத்தானது. விஷத்தன்மை கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

English summary
Why this optical illusion pic confuses netizens? What is it? இணையத்தில் டிரெண்டாகி வரும் புகைப்படம் ஒன்று நெட்டிசன்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X