’ஜான்’ ஏறியதால்.. முழம் போடாத டிடிவி! நாட் ரீச்சபிளான விஜய்! டக் அவுட் ஆகும் தமிழக வெற்றிக் கழகம்!
சென்னை: 2026 தேர்தலில் மிகப்பெரிய தாக்கத்தை விஜய் ஏற்படுத்துவார் என மூச்சுக்கு 300 தடவை பேசி வந்த டிடிவி தினகரன் திடீரென பாஜகவுடன் கூட்டணி சேர்ந்திருக்கிறார். விஜயை நேரில் சந்தித்து பேச பலமுறை முயன்றும், அது நடக்காததால் வேறு வழியின்றி பாஜகவுடன் கூட்டணி சேர்ந்து விட்டதாக சொல்கின்றனர். மேலும் ஜனநாயகன் சிக்கல், சிபிஐ விசாரணை என விஜய் கடும் மன உளைச்சலில் இருப்பதால் தவெக பணிகள் முற்றிலும் தொடங்கி போய் இருப்பதாக சொல்கின்றனர் அந்த கட்சியினர்.
திமுக - அதிமுக ஆகிய இரு கட்சிகளுக்கும் மாற்றாக த.வெ.க. தான் எனவும், சட்டசபை தேர்தலில் உண்மையான போட்டி திமுக- தவெக இடையே தான் இருக்கும் எனவும் விஜய் தொடர்ந்து கூறி வந்தார். அந்த வரிசையில், 2025 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் திருச்சி, அரியலூர், பெரம்பலூர், திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் அவர் பிரசாரம் மேற்கொண்டார்.
அதே மாதம் 27 ஆம் தேதி கரூர் வேலுச்சாமிபுரத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் அரசியல் மட்டுமல்லாமல், விஜயின் செயல்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்திற்குப் பிறகு, விஜயின் அரசியல் நடவடிக்கைகளில் கணிசமான தொய்வு ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

விஜய் தவெக
அதன்பின்னர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்தார். அவரது முயற்சியால் ஈரோடு விஜயமங்கலத்தில் கடந்த டிசம்பர் 18 ஆம் தேதி நடைபெற்ற பிரசார கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டார். இதன் பின், மாமல்லபுரத்தில் நடைபெற்ற சில நிகழ்ச்சிகளில் மட்டுமே அவர் முகம் காட்டினார். கட்சி அலுவலகத்துக்கும் இரு முறை மட்டுமே வந்து சென்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த சூழ்நிலையிலும், தவெகவுடன் கூட்டணி அமைக்க அமமுக பொதுச்செயலாளர் தினகரன் ஆர்வம் காட்டி வந்தார்.
டிடிவி தினகரன்
விஜய்க்கு ஆதரவாக வெளிப்படையாக கருத்து தெரிவித்த டிடிவி தினகரன், விஜய் அரசியலுக்கு வந்ததால் அதிமுக மூன்றாம் இடத்திற்கு தள்ளப்படும் எனவும் கணித்திருந்தார். ஆனால், தவெக தரப்பில் விஜய் நேரடியாக தினகரனுடன் கூட்டணி குறித்து பேசியதாக எந்த தகவலும் இல்லை. விஜய்க்குப் பதிலாக கட்சி நிர்வாகிகள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா ஆகியோர் மட்டுமே பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ளனர். இருப்பினும், கூட்டணியில் இணைந்தால் எத்தனை தொகுதிகள் வழங்கப்படும் என்பதில் எந்த உறுதியான உத்தரவாதமும் அளிக்கப்படவில்லை.
சிபிஐ விசாரணை
இதனால், விஜயை நேரில் சந்தித்து பேச டிடிவி தினகரன் பலமுறை முயற்சித்ததாக கூறப்படுகிறது. இதற்கிடையில், கரூர் சம்பவம் தொடர்பான சிபிஐ விசாரணை, 'ஜனநாயகன்' திரைப்பட வெளியீட்டில் ஏற்பட்ட சிக்கல் உள்ளிட்ட பல்வேறு நெருக்கடிகள் விஜயை மன உளைச்சலுக்கு உள்ளாக்கியதாக கூறப்படுகிறது. இத்தகைய சூழலில், விஜயுடன் கூட்டணி அமைப்பது அரசியல் ரீதியாக சரியான முடிவாக இருக்காது என தினகரன் தரப்பு கருதியதாக தெரிகிறது. அதன் அடிப்படையில் தான், அவர் அதிமுக - பாஜக கூட்டணியைத் தேர்வு செய்ததாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
தமிழக அரசியல்
தேர்தல் நெருங்கி வரும் நிலையில், விஜய் தொடர்பு எல்லைக்கு வெளியே இருப்பதால், அவரை நம்பி கூட்டணிக்கு வர முயன்ற பல கட்சித் தலைவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது. கூட்டணி, ஆள் சேர்ப்பு என தமிழக அரசியல் களம் சூடுபிடித்திருக்கும் வேளையில், செயல்பாடுகள் முழுமையாக முடங்கியுள்ளன என்ற குற்றச்சாட்டும் எழுந்துள்ளது.
ஜான் ஆரோக்கியசாமி
இதுகுறித்து தவெக நிர்வாகிகள் சிலர் கூறுகையில், அதிமுகவின் ஓ.பன்னீர்செல்வம் தரப்பை கூட்டணியாக கொண்டு செல்ல முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், அது தோல்வியடைந்த நிலையில் அவர் திமுகவில் இணைந்துவிட்டதாகவும் தெரிவித்தனர். கட்சியின் முழு கட்டுப்பாடும் விஜயின் வியூக வகுப்பாளரான ஜான் ஆரோக்கியசாமி கையில் இருப்பதால், அவரது விருப்பப்படி தான் முடிவுகள் எடுக்கப்படுகின்றன என்றும் அவர்கள் கூறினர்.
கூட்டணி ஆட்சி
மெகா கூட்டணியுடன் தேர்தலை சந்தித்தால் தான் வெற்றி பெற முடியும் என்பது பெரும்பாலான நிர்வாகிகளின் கருத்தாக இருந்தாலும், விஜயை தனித்து போட்டியிட வைப்பதே ஜான் ஆரோக்கியசாமியின் எண்ணமாக இருப்பதாக குற்றம்சாட்டப்படுகிறது. இதன் காரணமாக, கூட்டணி ஆட்சி என்ற கோஷத்தை முதலில் முன்வைத்த தவெகவில் கூட, கூட்டணி பேச்சுவார்த்தைக்கான குழு இதுவரை அமைக்கப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகிறது.
தவெக நிர்வாகிகள்
மேலும், ஜான் ஆரோக்கியசாமி விரும்பும் நபர்களைத் தவிர வேறு யாரையும் கட்சியில் சேர அனுமதிக்கப்படவில்லை என்றும், கூட்டணிக்காக காத்திருந்தவர்கள் தற்போது வேறு கட்சிகளுடன் கூட்டணி சேர்ந்து ஆகி வருவதால், அடுத்து என்ன செய்வது என்ற குழப்பத்தில் தவெக நிர்வாகிகள் உள்ளதாகவும் கூறப்படுகிறது.
-
கேலிக்குள்ளான அமித்ஷாவுக்கு தவெக எழுதியதாக பரவும் கடிதம்.. ராஜ்மோகன் விளக்கம் -
அண்ணாமலை போட்டியிடும் தொகுதி இதுவா? ஈரோட்டில் பாஜக செம ட்விஸ்டு.. மொத்த மொடக்குறிச்சியும் வெயிடிங் -
தவெகவில் விஜய்க்கு அடுத்ததாக அதிக சொத்து உள்ள நபர் இவரா? அதுவும் இத்தனை கோடி! ஆச்சரியத்தில் நெட்டிசன்கள் -
தமிழ்நாட்டையே அதிர வைத்த திருமணம்.. தவெக வேட்பாளரான ஆர்.எஸ்.முருகன்.. விஜய் சீட் கொடுத்த பின்னணி! -
கழுத்தில் இருந்த விசிலை பிடுங்கி வீசிய அதிமுக நிர்வாகி! திருப்பூர் அருகே கூட்டத்தில் பரபரப்பு! -
போகிற இடமெல்லாம்.. அஜித் போட்டோவை தூக்கிட்டு போகும் எடப்பாடி.. விஜய்க்கு கவுண்டரா? ஆனால்...! -
முடியவே முடியாது.. டெல்லியை எதிர்த்து நிற்கும் அண்ணாமலை! பாஜக பட்டியல் தாமதம்! இது தான் காரணம்! -
விஜய் செல்வாக்கு + பதவி.. திருமாவளவன் மாநில அரசியலுக்கு திரும்புவதற்கு பின்னணியில் 2 காரணங்கள்! -
விஜய் பேச்சை கேட்க ஆள் வரல! செல்ஃபி எடுக்க குவிந்த ரசிகர்கள்! இதுதான் பரப்புரையா! -
புதுச்சேரி ரங்கசாமி டபுள் சென்டிமென்ட் சக்ஸஸ்?விஜய்யும் அந்த எலுமிச்சை பழமும்.. அப்ப தான் CM யோகமா? -
விஜய்க்கு அதிகாலையே சிம்ம சொப்பனமாக வந்த ஸ்டாலின்.. திருச்சியில் 'டீ' பிரேக் பாலிடிக்ஸ்.. செம மூவ்! -
பாஜக vs காங்கிரஸ்! நேருக்கு நேர் மோதலில் மோடி க்ளீன் ஸ்வீப்.. பரிதாபமான நிலையில் ராகுல்! புதிய சர்வே












Click it and Unblock the Notifications