"அவங்க" போட்டோவை கூட காணாமே.. "சைலண்ட்" மோடுக்கு போன அமமுக.. கூல் தலைவர் எங்கே.. அப்ப சசிகலா?
டிடிவி தினகரன் நேரடி பிரச்சாரத்துக்கு ஏன் செல்லவில்லை என தெரியவில்லை
சென்னை: திமுகவும் அதிமுகவும் போட்டி போட்டுக் கொண்டு பிரச்சாரங்களை கையில் எடுத்து வரும் நிலையில், அமமுக என்ன செய்து கொண்டிருக்கிறது என்ற ஆர்வமும், சந்தேகமும் பரவலாக எழுந்துள்ளது.
ஜெயிலில் இருந்து வந்ததில் இருந்தே சசிகலா, டிடிவியின் செயல்பாடுகளில் அதிருப்தியில் இருப்பதாக தகவல்கள் வந்தன..
அதனால்தான் சட்டமன்றத் தேர்தலிலும் அமமுகவுக்காக சசிகலா ஆதரவு தரவில்லை.. பிரச்சாரத்திற்கும் செல்லவில்லை.., குறைந்தபட்சம் அறிக்கைகூட வெளியிடவில்லை என்றார்கள்.

டிடிவி தினகரன்
வேறுவழியில்லாமல் தேமுதிகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தும் அமமுக மண்ணை கவ்வியது.. ஏற்கனவே, ஊரக உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட்டு கணிசமான இடங்களை பெற்றிருந்தது அமமுக... அதாவது, 2019-ல் நடந்த ஊரக உள்ளாட்சி பெரும்பாலான இடங்களில் போட்டியிட்டது.. ஒன்றிய கவுன்சிலர் பதவிகளை ஏராளமாக தட்டி தூக்கியது.. தூத்துக்குடியில் மட்டும் 13 இடங்களிலும் தஞ்சாவூரில் 8 இடங்களிலும் வெற்றி பெற்றது..

கணக்கு
இந்த தேர்தலின் வெற்றி எப்படியும் 2021 சட்டசபை தேர்தலிலும் எதிரொலிக்கும் என்று கணக்கு போடப்பட்டது.. ஆனால் படுதோல்வி அடைந்துவிட்டது.. 3 சதவீத ஓட்டை கூட தாண்ட முடியாத சூழல் தினகரன் கட்சிக்கு ஏற்பட்டது. அதற்கு பிறகு நடந்த 9 ஊரக உள்ளாட்சி தேர்தலும் ஒரே ஒரு ஒன்றிய கவுன்சிலர் பதவியை கூட அமமுக வெற்றி பெறவில்லை.. இப்படி தொடர் தோல்விக்குள் அமமுக சிக்கி கொண்டு வருவது அக்கட்சி தொண்டர்களை சோர்வடைய வைத்துள்ளது..

வாக்கு வங்கி
சசிகலாவும் ஆதரவு தராத நிலையில், கட்சிக்கான வாக்கு வங்கியும் குறைந்து வரும் நிலையில், நகர்ப்புற தேர்தலை அமமுக எதிர்கொள்ளுமா என்றுகூட சந்தேகம் வந்தது. உண்மையை சொல்லப்போனால், இப்போது நடக்க போகும் தேர்தலை தினகரன் விரும்பவில்லை என்றே தெரிகிறது.. கொரோனா இன்னும் குறையாத நிலையில், இப்போதே தேர்தலை நடத்தியாக வேண்டுமா? பிப்ரவரியில் தொற்று பரவல் குறைய வாய்ப்பு உள்ளதாக டாக்டர்கள் சொல்லி இருக்கிறார்கள்..

சைலண்ட்
பேசாமல் தேர்தலை ஒரு மாதத்துக்கு பிறகு நடத்துகிறோம் என்று சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு சொல்லியிருக்கலாம் என்று டிடிவி தினகரன் செய்தியாளர்கள் கூட்டத்தில் வெளிப்படையாகவே கூறியிருந்தார். எனினும், தேர்தல் உத்தரவு வந்ததையடுத்து, வேறு வழியில்லால், அமமுக தனித்து போட்டிஎன்றார்.. வேட்பாளர்களையும் அறிவித்தார்..

என்ன காரணம்
ஆனால் தினகரன் நேரடி பிரச்சாரத்துக்கு இதுவரை செல்லவில்லை என்றே தெரிகிறது.. ஏன் இந்த தேர்தலில் ஆர்வம் காட்டாமல் இருக்கிறார்? ஒருவேளை சசிகலா மீதான அதிருப்தி நீங்கவில்லையா? அல்லது நகர்ப்புறங்களில் அமமுகவின் செல்வாக்கு, கிராமப்புறங்களைவிட குறைவு என்பதால் ஆர்வம் காட்டப்படவில்லையா? தெரியவில்லை. கடந்த சட்டமன்ற தேர்தலின்போதும் சரி, ஊரக உள்ளாட்சித் தேர்தல்களிலும் சரி, சசிகலாவின் போட்டோக்கள் பெரிய சைஸில் இடம்பெற்று போஸ்டர்கள் ஆங்காங்கே ஒட்டப்பட்டிருந்தன..

சசிகலா போட்டோ
அப்போதெல்லாம் அமமுக குறிப்பிட்ட வாக்கு வங்கியை பெற்றது.. ஆனால் இந்த முறை சசிகலாவின் சின்ன சைஸ் போட்டோகூட எங்கியுமே அமமுக போஸ்டர்களில் இல்லாதது சலசலப்பை கூட்டி உள்ளது.. திமுக கூட்டணியாகவும், அதிமுக தனியாகவும் பிரச்சாரங்களில் பட்டையை கிளப்பி கொண்டிருக்கும் நிலையில், பம்பரமாய் சுற்றி சுழல்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட கூல் கேப்டன் ஏன் சைலண்ட்டாக இருக்கிறார்? ஒருவேளை கடைசி நேரத்தில் அதிரடியை காட்டுவாரா? என்று அக்கட்சி தொண்டர்களின் நம்பிக்கையுடன் உள்ளனராம்.. எனினும், அமமுக வேட்பாளர்கள் வீடு வீடாக சென்று தங்களுக்கான வாக்கு சேகரிப்பில் மும்முரமாக ஈடுபட்டுக் கொண்டுதானிருக்கிறார்கள்..!
-
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
தவெகவின் வெற்றி தொலைக்காட்சி ஆரம்பம்.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு.. நாஞ்சில் சம்பத் வாழ்த்து -
"சாக்கடையில் இருக்க வேண்டியது.." கரப்பான் பூச்சி கட்சி குறித்து பவன் கல்யாண் சொன்ன கருத்து -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம் -
டிடிவி பராக்.! இரட்டை இலை என்னோடது.. அமித் ஷாவிடம் டீல் பேசிய அண்ணன்! எடப்பாடிக்கு எகிறும் பிரஷர்! -
கிளம்பு, கிளம்பு.. போர் முடிஞ்சிப்போச்சு.. டிரம்ப் அறிவித்த 'அந்த' ஒரு விஷயம்.. ஈரான் செம ஹேப்பி! -
“அதிமுக என்ற கட்சியே இருக்காது.. இன்னும் பல MLAக்கள் தவெகவுக்கு வருவார்கள்” - அமைச்சர் செங்கோட்டையன் -
பாரதிராஜா வேண்டுமென்றே இறந்தார்! 6 மாதத்தில் நடந்தது என்ன? சிகிச்சை அளித்த மருத்துவர் வேதனை -
பெரிய தலக்கட்டு..திமுகவுக்கு தாவும் மூவரணி! வேதனையில் எடப்பாடி! சைக்கிள் கேப்பில் புகுந்த அறிவாலயம்!












Click it and Unblock the Notifications