செந்தில் பாலாஜி போனப்ப பம்முனாரு.. தமிழ்ச்செல்வன் மீது மட்டும் பாயுறாரே.. என்னாச்சு டிடிவிக்கு?
Recommended Video
சென்னை: அமமுகவிலிருந்து திமுகவுக்கு செந்தில் பாலாஜி புறப்பட்ட போது எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய டிடிவி தினகரன் தங்கதமிழ்ச் செல்வன் மீது பாய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலுக்கு பிறகு அரசியல் களம் சூடுபிடித்துள்ளது என்றால் அது தற்போது டிடிவி தினகரனுக்கும் தங்கதமிழ்ச் செல்வனுக்கும் இடையே மோதல் போக்கு ஏற்பட்டதால்தான்.
தங்கதமிழ்ச் செல்வன் நேற்று பேசிய விவகாரம் கட்சியினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அந்தளவுக்கு தினகரனை தங்கதமிழ்ச் செல்வன் கடுமையாக விமர்சனத்தை முன் வைத்துள்ளார்.

ஊடகங்கள்
இந்த நிலையில் தேனி மாவட்ட நிர்வாகிகளுடன் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொண்ட டிடிவி தினகரன் அவரை கடுமையாக விமர்சனம் செய்து பேசினார். அவர் கூறுகையில் தங்கதமிழ்ச் செல்வன் ஒன்றும் எங்கள் பலம் இல்லை. ஊடகங்கள்தான் அவரை பெரிய ஆள் ஆக்குகின்றன.

வாடிக்கை
தங்கதமிழ்ச் செல்வன் முன்பு எப்படியிருந்தார் என்பது அவருக்கு நன்றாக தெரியும். எப்போதும் வேறுபட்டு செயல்படுவது தங்கதமிழ்ச் செல்வனுக்கு வாடிக்கை. என்னிடம் கூறாமல் பேட்டி கொடுப்பார், பின்னர் தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்வார் என சரமாரியாக விளாசினார் தினகரன்.

திமுகவுக்கு சென்ற செந்தில் பாலாஜி
இதே தினகரன், செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற போது எங்கிருந்தாலும் வாழ்க என கூறிய நிலையில் தற்போது தங்கதமிழ்ச் செல்வனுக்கு மட்டும் பாய்வது ஏன் என்ற கேள்வி எழுந்துள்ளது. செந்தில் பாலாஜி திமுகவுக்கு சென்ற போது அவர் எந்தவிதமான விமர்சனங்களையும் முன்வைக்கவில்லை. டிடிவி தினகரனை அதிருப்திக்குள்ளாகும் செயல்களில் அவர் ஈடுபடவே இல்லை.

துரோகி
அதே வேளையில் தினகரன் எதிரியை கூட மன்னிப்பார, ஆனால் துரோகிகளை மன்னிக்க மாட்டார் என்பார்கள். அதற்கேற்ப செந்தில் பாலாஜியோ எதிர்க்கட்சியான திமுகவில் இணைந்தார். ஆனால் தங்கதமிழ்ச் செல்வனோ தனக்கு துரோகம் ஏற்படுத்தியதாக கூறப்படும் ஈபிஎஸ்- ஓபிஎஸ் தலைமையிலான அதிமுகவில் இணைய போவதாக தகவல்கள் வந்தன. இதுதான் தினகரனின் பாரபட்சத்துக்கு காரணம் என சொல்லப்படுகிறது.
-
முதலமைச்சர் விஜய்யை சந்திக்க வாய்ப்பில்லை! மேயர் பிரியா கறார்! காரணம் இதுதான்! -
"வாயை மூடி பேசவும்" மாவட்டச் செயலாளர்கள் கண்ட்ரோலில் திமுக குழு.. விரக்தியில் அடிமட்ட தொண்டர்கள்! -
திமுகவின் TAPS தேவாமிர்தம்.. இப்போ OPS வேணுமா? கரைவேட்டி கட்டாத கட்சிக்காரர்கள்.. TNGEA விளாசல்! -
சிவக்குமார் விஜய்யை பாராட்டி பேச பேச சத்யராஜ் கொடுத்த ரியாக்ஷன் பாருங்க.. அமைதியாக கவனிக்கும் திமுக -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்!












Click it and Unblock the Notifications