கிரவுண்ட் ஜீரோ ரிப்போர்ட்.. தரைதட்டிய களப்பணி.. கிரவுண்டில் திணறும் தவெக.. விஜய்க்கு சிம்ம சொப்பனம்
சென்னை: தமிழக வெற்றிக் கழகம் தேர்தல் பணிகளை களத்தில் செய்ய முடியாமல் கடுமையாக திணறி வருகிறது. களப்பணிகளில் கடுமையாக பின்தங்கி உள்ளது.
தேர்தல் திருவிழாவிற்கு இன்னும் மூன்றே வாரங்களே உள்ளது. ஏப்ரல் 23ம் தேதி தேர்தல் நடக்க உள்ள நிலையில், கோட்டை நோக்கிய பயணத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் (TVK) ரதம் எங்கே நிற்கிறது? ஒரு மினி ஸ்கேன்!

திமுக - அதிமுக: 'பழம் தின்று கொட்டை போட்ட' கில்லாடிகள்!
ஆளுங்கட்சியான திமுக-வும், எதிர்க்கட்சியான அதிமுக-வும் களத்தில் கபடி ஆடிக்கொண்டிருக்கின்றன. அவர்களின் பலமே அந்தந்த ஊர்களில் உள்ள 'நிழல் மனிதர்கள்' தான். ஒரு வார்டில் எத்தனை தெருக்கள், எந்தெந்த வீட்டில் யார் யாருக்கு 'விசுவாசம்', யாருக்கு 'வாக்கு' மாறும் என விரல் நுனியில் வைத்துள்ளனர் திமுக-வின் பி.எல்.ஏ-க்களும் (BLA), அதிமுக-வின் கிளைச் செயலாளர்களும்.
காலையில் 'டீ' கடையில் ஆரம்பித்து, மாலையில் 'திண்ணை' வரை அவர்கள் செய்யும் மைக்ரோ-மேனேஜ்மென்ட், ஒரு கார்ப்பரேட் கம்பெனிக்கே சவால் விடும் ரகம். பூத் கமிட்டிகள் அமைப்பதில் தொடங்கி, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பது வரை அந்தந்த ஏரியா 'லோக்கல் தாதாக்கள்' வேலையை கனகச்சிதமாக முடித்துவிட்டு அடுத்த கட்டத்திற்கு நகர்ந்துவிட்டனர்.
டிவி-கே: 'ஸ்டார்' அந்தஸ்தும்... 'ஸ்டார்ட்' ஆகாத களமும்!
ஆனால், தவெக-வின் நிலைதான் கொஞ்சம் தடுமாற்றமாக இருக்கிறது. விஜய் போட்டியிடும் பெரம்பூர், திருச்சி கிழக்கு மற்றும் புஸ்ஸி ஆனந்த், ஆதிவ் அர்ஜுனா போன்ற 5-6 வி.ஐ.பி தொகுதிகளைத் தவிர மற்ற இடங்களில் கட்சி இன்னும் 'அப்லோடிங்' மோடிலேயே இருக்கிறது.
தரவுகள் இல்லை (Data Deficit):
பழைய கட்சிகளிடம் இருக்கும் 'வாக்காளர் தரவு' (Voter Database) தவெக-விடம் மிஸ்ஸிங். எந்த வீட்டில் புது வாக்காளர்கள் இருக்கிறார்கள், யாரைத் தட்டினால் ஓட்டு விழும் என்கிற அடிப்படைத் தகவல் கூடப் பல வேட்பாளர்களுக்குத் தெரியவில்லை.
மேலிட உத்தரவு... கீழ்தட்டு குழப்பம்:
சென்னையிலிருந்து வரும் உத்தரவுகளைச் செயல்படுத்த மாவட்ட அளவில் வலுவான 'செகண்ட் லைன்' தலைவர்கள் இல்லை. மன்றப் பொறுப்பாளர்களாக இருந்தவர்கள் இப்போது கட்சிப் பதவியில் இருந்தாலும், அவர்களுக்குத் தேர்தல் கால 'களப்பணி' (Ground Work) என்பது புதிய அனுபவமாக இருக்கிறது.
மேடைப் பேச்சும்... வீதிப் பிரச்சாரமும்:
மாநாடுகளில் காட்டிய கூட்டத்தை, ஒவ்வொரு பூத்திலும் ஒருங்கிணைக்க ஆட்கள் பற்றாக்குறை நிலவுகிறது. "தளபதி வந்தா கூட்டத்தைக் கூட்டலாம், ஆனா ஓட்டைப் போட வைக்க பூத் ஸ்லிப் கொடுக்க ஆள் வேண்டாமா?" எனத் தவெக வேட்பாளர்களே புலம்பும் நிலை சில தொகுதிகளில்!
கடைசி நேர மேஜிக் நடக்குமா?
மூன்று வாரங்கள் என்பது அரசியலில் ஒரு யுகம். ஆனாலும், வெறும் சமூக வலைதள லைக்குகளும், கட்-அவுட்களும் மட்டுமே வெற்றியைத் தந்துவிடாது என்பதைத் தவெக உணர வேண்டிய தருணம் இது.
திமுக, அதிமுக என்ற இரு பெரும் திராவிட மலைகளைச் சரித்து, கோட்டையில் கொடி ஏற்ற வேண்டுமானால், தளபதியின் படை 'டிஜிட்டல்' உலகிலிருந்து 'திண்ணை' உலகிற்கு வந்தாக வேண்டும். இல்லையென்றால், 2026 களம் தவெக-விற்கு ஒரு 'காஸ்ட்லி' பாடமாக மட்டுமே அமையும்!
-
ஓட்டுக்கு ரூ.2000..? செய்தியாளர்களை தள்ளிவிட்ட தவெக நிர்வாகி.. காரில் எஸ்கேப் ஆன எம்.எல்.ஏ! -
வந்தே மாதரம் பாடல் விவகாரம்.. மத்திய அரசின் உத்தரவுக்கு எதிராக வழக்கு தொடர ஐகோர்ட் அனுமதி! -
தமிழ்நாடு விஷம் குடித்து இருக்கிறது.. மக்கள் புரிந்து கொள்வார்கள்! தேர்தல் முடிவு பற்றி சுகி சிவம் பரபர பேச்சு -
இரட்டை இலையைக் கடிக்கும் தவெக..நடையை கட்டும் நிர்வாகிகள்! அடுத்த காங்கிரஸா அதிமுக? 1977 ரிட்டர்ன்ஸ்? -
“திமுக கூட்டணியில்தான் தொடர்கிறோம்.. தவெக அரசுக்கு வெளியில் இருந்து ஆதரவு”.. CPI வீரபாண்டியன் உறுதி! -
செந்தில் பாலாஜி மீண்டும் கைதா? ஆளுநரிடம் ‘கிரீன் சிக்னல்’ கேட்டு ஃபைல்களை அனுப்பிய தமிழக அரசு! -
மீண்டும் டெல்லி செல்லும் முதல்வர் விஜய்.. அமித்ஷா, காங்கிரஸ் மூத்த தலைவர்களையும் சந்திக்கிறாரா? -
நேற்று பெய்த மழையில் இன்று முளைத்த விஷக்காளான் நீங்க! விஜய் குறித்து திமுக ஐடி விங்க் விமர்சனம் -
குர்பானி கட்டுப்பாடு.. "நீதிமன்றத்தில் ஒரு பேச்சு, அமைச்சர் ஒரு பேச்சு ஏன்!" எஸ்டிபிஐ கடும் தாக்கு -
அண்ணன் தம்பிகள்தானே! இடைத்தேர்தலில்.. அதிமுக-திமுக கூட்டணி! வாயை விட்ட சுப வீரபாண்டியன்! -
"விஜய் கோட் போடுவது பிரச்சனை இல்லை... எல்லாத்தையும் கோட்டை விடுவது தான் பிரச்சனை!" உதயநிதி தாக்கு -
எதிர்க்கட்சிகள் தீர்ந்து போன சக்தி சரி.. அப்போ நீங்க? விஜய்யை லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய வேல்முருகன்












Click it and Unblock the Notifications