பதவியேற்பு விழாவில் மேடையில் கூட ஏறாத உதயநிதி.. துணை முதல்வராக பதவியேற்கவில்லையே ஏன் தெரியுமா
சென்னை: தமிழ்நாட்டின் துணை முதல்வராக உதயநிதி நேற்றைய தினம் அறிவிக்கப்பட்டார். அதேபோல 4 பேர் புதிதாகவும் அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். இதையடுத்து இன்று பதவியேற்பு விழா நடந்தது. இருப்பினும், இதில் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடை ஏறிப் பதவியேற்கவில்லை. இதற்கான காரணத்தை நாம் பார்க்கலாம்.
தமிழ்நாடு அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படும் என்று நீண்ட காலமாகவே சொல்லப்பட்டு வந்தது. அவ்வப்போது இது தொடர்பான தகவல்களும் வெளியாகும். குறிப்பாக உதயநிதிக்கு துணை முதல்வர் பதவியும் தரப்படும் என்று கூறப்பட்டது.

சமீபத்தில் இது குறித்து முதல்வர் ஸ்டாலினிடம் கூட கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு மாற்றம் இருக்கும்.. ஏமாற்றம் இருக்காது என்று மட்டும் முதல்வர் ஸ்டாலின் பதிலளித்தார்.
இந்தச் சூழலில் தான நேற்றைய தினம் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது. அதில் செஞ்சி மஸ்தான் உள்ளிட்ட, மனோ தங்கராஜ் உள்ளிட்ட 3 பேரின் அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது. அதேநேரம் செந்தில் பாலாஜி, நாசர் உள்ளிட்ட 4 பேர் புதிதாக அமைச்சரவையில் சேர்க்கப்பட்டனர். மேலும், சிலரது துறைகளும் மாற்றப்பட்டு இருந்தது.
அதேபோல திமுக தொண்டர்கள் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட உதயநிதி துணை முதல்வராக நியமிக்கும் அறிவிப்பும் அதில் இருந்தது. இது திமுகவினருக்கு உற்சாகத்தை ஏற்படுத்தியது. அதன்படி இன்று மாலை 3.30 மணியளவில் பதவியேற்பு விழா நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்தது.
உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உடன் நடக்கும் முதல் பதவியேற்பு விழா. இதில் திமுக கூட்டணிக் கட்சித் தலைவர்கள் பலரும் கூட நேரடியாகக் கலந்து கொண்டனர். ஆளுநர் மாளிகையில் நடந்த இந்த விழாவில் கோவி செழியன், செந்தில் பாலாஜி உள்ளிட்டோர் அமைச்சராகப் பதவியேற்றனர். அதேநேரம் துணை முதல்வராக அறிவிக்கப்பட்ட உதயநிதி மேடையில் கூட ஏறவில்லை. இதற்கு என்ன காரணம் என்ற சந்தேகம் பலருக்கும் வரலாம். இதற்கான பதிலை நாம் பார்க்கலாம்.
உதயநிதி துணை முதல்வராக அறிவிக்கப்பட்டது என்பதை நாம் ஒரு பதவி உயர்வாகப் பார்த்தாலும் நமது நாட்டின் விதி சரி மரபுபடியும் சரி துணை முதல்வர் என்பது ஒரு பொறுப்பு தானே தவிர அரசியலமைப்பு வழங்கும் பதவி இல்லை. ஏற்கனவே அமைச்சராக உள்ள நபர் துணை முதல்வராக நியமிக்கப்படும் போது தனியாகப் பதவியேற்க மாட்டார்கள். இதன் காரணமாகவே புதிதாகப் பதவியேற்ற அமைச்சர்களுக்கு மட்டும் பதவியேற்பு விழா நடைபெற்றது.
-
சனாதனம் இருக்கக்கூடாதுனா பெற்றோரை துரத்திவிட வேண்டும்.. முடியுமா? உதயநிதியை தாக்குகிறாரா அர்ஜுன்? -
உதயநிதி முதல்வர்! எடப்பாடி துணை முதல்வர்! எப்படியிருக்கு பாருங்க! அணுகுண்டை போட்ட ஆதவ் அர்ஜுனா -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு












Click it and Unblock the Notifications