நெற்றியில் அரஜகா திலகம்! கருப்பு கோட் சூட் அணிந்து வரும் விஜய்! பின்னணியில் ஒரு political sign?

Subscribe to Oneindia Tamil

சென்னை: அரசியல் என்றாலே வெள்ளை வேட்டி, சட்டை என்ற நிலையில் அதை மாற்றி விஜய் தினமும் ஒரு கம்பெனியின் சிஇஓ போல் கோட் சூட் அணிந்து வருவதன் பின்னணி என்ன என்பதை மூத்த பத்திரிகையாளர் மணி கூறியிருப்பதை பார்க்கலாம்.

தமிழக அரசியலில் விஜய் என்ற ஒற்றை மனிதரின் வருகை, பல ஆண்டுகளாகத் தேங்கிக் கிடந்த அரசியல் சமன்பாடுகளை அடியோடு மாற்றியமைத்திருக்கிறது.

joseph Vijay coat suit

குறிப்பாக, அவர் சட்டசபைக்கு கோட் சூட் அணிந்து வந்த விதம் வெறும் ஆடை அலங்காரமாக மட்டும் பார்க்கப்படாமல், ஒரு பெரும் அரசியல் குறியீடாகவே பார்க்கப்படுகிறது. இது ஒரு நிறுவனத்தின் சிஇஓ போன்ற தோற்றத்தை அளிப்பதாக மூத்த பத்திரிகையாளர் மணி தனது சமீபத்திய நேர்காணலில் சுட்டிக்காட்டியுள்ளார்.

விஜய்யின் இந்தத் தோற்றம் குறித்துப் பேசிய மணி, ஆடை என்பது ஒருவரின் ஆளுமையின் வெளிப்பாடு என்று குறிப்பிட்டார். முப்பது ஆண்டுகளுக்கு முன்பே சந்திரபாபு நாயுடு ஆந்திராவில் இத்தகைய மாற்றத்தைக் கொண்டு வந்தார். இன்று விஜய் அதைத் தமிழகத்தில் பிரதிபலிக்கிறார்.

கட்சி நிகழ்ச்சிகளுக்குத் தனது வழக்கமான உடையில் வரும் விஜய், அரசு சார்ந்த இடங்களுக்கு கோட் அணிந்து வருவது மக்கள் மத்தியில் ஒரு புதிய வரவேற்பைப் பெற்றுள்ளது. இனி வரும் காலங்களில் தமிழக அரசியல் களம் 'விஜய் வெர்சஸ் உதயநிதி' என்ற திசையை நோக்கி நகரப்போவது உறுதி எனத் தெரிகிறது.

உதயநிதியின் சமீபத்திய உரைகள் மிகவும் தெளிவாகவும், சுருக்கமாகவும், பாராட்டத்தக்க வகையிலும் இருப்பதாக மணி குறிப்பிடுகிறார். விஜய்க்கு ஈடுகொடுக்கும் வகையில் உதயநிதியும் தன்னை ஒரு வலிமையான அரசியல்வாதியாகத் தகவமைத்துக் கொண்டுள்ளார்.

இது ஒரு புதிய தலைமுறை அரசியலின் தொடக்கமாகவே பார்க்கப்படுகிறது.சமூக வலைதளங்களின் தாக்கம் இந்தத் தேர்தலில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது. பூ கட்டும் பெண்மணி முதல் இட்லி விற்கும் பாட்டி வரை அனைவரும் மொபைலில் அரசியல் உரைகளைக் கவனிக்கும் சூழல் உருவாகியுள்ளது.

பழைய பாணியிலான அரசியல் இனி எடுபடாது என்பதையே இது காட்டுகிறது. திமுக ஓரளவுக்கு இந்த மாற்றத்தை உள்வாங்கிக் கொண்டாலும், அதிமுக இன்னும் பழைய பிணக்குகளிலேயே சிக்கித் தவிப்பது அக்கட்சிக்கு ஒரு பெரும் சவாலாகவே இருக்கும்.

வாரிசு அரசியல் குறித்த விமர்சனங்களையும் மணி முன் வைத்தார். இளைஞர்கள் அரசியலுக்கு வர வேண்டும் என்பது அவசியம். ஆனால் அவர்கள் வெறும் வாரிசுகளாக மட்டும் இருக்கக் கூடாது.

50 ஆண்டுகளாக ஒரே நபர் எம்.எல்.ஏ-வாக இருப்பதும், அவரது குடும்பத்தினரே பதவிகளைப் பிடிப்பதும் ஜனநாயகத்திற்கு ஆரோக்கியமானது அல்ல. விஜய்யின் வருகை இத்தகைய தேக்க நிலையை உடைத்து, புதிய ரத்தத்தைப் பாய்ச்சும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மதத்தை அரசியலில் கலக்கும் முயற்சிகளுக்கு மக்கள் மத்தியிலேயே எதிர்ப்பு கிளம்பியுள்ளது ஒரு ஆரோக்கியமான மாற்றம். தேவாலயங்களில் குறிப்பிட்ட கட்சிக்கு ஓட்டுப் போடச் சொன்னபோது, அங்கிருந்த மக்களே அதை எதிர்த்தது ஒரு முக்கியத் திருப்பம்.

பணம் மட்டுமே தேர்தலை வென்று தரும் என்ற பிம்பமும் இந்த முறை உடைக்கப்பட்டுள்ளது. பல ஆயிரம் கோடிகளைச் செலவு செய்தும் தோல்வியைத் தழுவியது, மக்கள் மாற்றத்தை விரும்புகிறார்கள் என்பதையே உணர்த்துகிறது.

தமிழகத்தில் இனி பழைய அரசியல் பாணி எடுபடாது. இரண்டு இளம் தலைவர்கள் நேருக்கு நேர் மோதும் ஒரு புதிய சகாப்தம் தொடங்கியுள்ளது. பள்ளி மாணவர்கள் முதல் இளைஞர்கள் வரை அரசியலில் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சி அளிப்பதாகக் கூறும் மணி, இந்த மாற்றங்கள் தமிழக அரசியலை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.

அது போல் விஜய் நெற்றியில் அரகஜா எனும் திலகத்தை நேர்மறையான எண்ணத்திற்காகவும் கண் திருஷ்டி விலகுவதற்காகவும் வைத்துக் கொண்டு வருகிறார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+