பெட்ரோல், டீசல் விலை உயர்ந்தது! அதிகாலையில் ஷாக் கொடுத்த மத்திய அரசு!
சென்னை: சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்திக்கொள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இதன் காரணமாக பெட்ரோல் லிட்டருக்கு ரூ.3.10, டீசல் லிட்டருக்கு ரூ.3.08 என விலை உயர்த்தப்பட்டிருக்கிறது.
விலை உயர்வு காரணமாக சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.103.90க்கும், ஒரு லிட்டர் டீசல் ரூ.95.47க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

பிரதமரின் அறிவுரை
முன்னதாக பிரதமர் நரேந்திர மோடி சிக்கன நடவடிக்கைக்கு மக்களுக்கு அழைப்பு விடுத்திருந்தார். மக்கள் பொது போக்குவரத்து மற்றம் மின்சார வாகனங்களை பயன்படுத்தி பெட்ரோல், டீசல் பயன்பாட்டை குறைக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்திருந்தார்.
மட்டுமல்லாது நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களை வீட்டிலிருந்து வேலை செய்ய அனுமதிப்பதன் மூலம் எரிபொருள் பயன்பாட்டை மிச்சப்படுத்தலாம் என்றும், விவசாயிகள் ரசாயன உரங்களை மிகக் கவனமாகவும், சிக்கனமாகவும் பயன்படுத்த அறிவுறுத்தியிருந்தார். மேலும் தேவையற்ற வெளிநாட்டுப் பயணங்களைத் தவிர்ப்பது மற்றும் தங்கம் வாங்குவதைக் குறைப்பதன் மூலம் நாட்டின் அந்நியச் செலாவணியைப் பாதுகாக்க முடியும் என்றும் பிரதமர் கூறியிருந்தார்.
என்ன பாதிப்புகள் ஏற்படும்?
இந்த பின்னணியில், தற்போது பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட்டிருக்கிறது. இதன் காரணமாக போக்குவரத்து விலை உயரும். இது விலைவாசி உயர்வுக்கு முக்கிய காரணமாக அமையும். ஏற்கனவே ராக்கெட் வேகத்தில் ஏறியிருக்கும் விலைவாசியால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
நிரந்தரமில்லாத வேலை, குறைவான சம்பளம் என நாடு முழுவதும் தொழிலாளர்கள் கடுமையாக பாதித்து வருகின்றனர். இவர்களின் வாழ்வாதாரத்தை பாதுாக்காக்க அரசு எடுத்த முயற்சிகள் எதுவும் பலன் கொடுக்கவில்லை. மறுபுறும் விவசாயிகள் தங்களின் விளை பொருட்களுக்கு போதுமான விலை கிடைக்காததால் பாதிப்படைந்து வருகின்றனர்.
இந்த நேரத்தில் எரிபொருள் விலை உயர்வு என்பது சாமானிய மக்கள் தலையைில் இடி போல இறங்கியுள்ளது. இந்த விலை உயர்வு விலைவாசியை கணிசமாக அதிகரிக்கும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.
சிஎன்ஜி விலையும் உயர்வு
பெட்ரோல், டீசலை தொடர்ந்து சிஎன்ஜி விலையும் அதிகரித்திருக்கிறது. டெல்லியில் சிஎன்ஜி கேஸ் விலை கிலோவுக்கு ரூ.2 உயர்த்தப்பட்டு ரூ.79.09க்கு விற்பனை செய்யப்பட்டுகிறது. எனவே விரைவில் நாடு முழுவதும் சிஎன்ஜி விலை அதிகாரிக்கப்படலாம் என்கிற அச்சம் ஏற்பட்டிருக்கிறது.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங் -
ஒரு மேயர் பதவியையாவது ஜெயிச்சு பாருங்க..நான் என் ஒரு பக்க மீசையை எடுத்துக்குறேன்! ஆர்எஸ் பாரதி சவால்












Click it and Unblock the Notifications