நிஜ வாழ்க்கையிலும் “வானத்தைப்போல” விஜயகாந்த்.. தாமதமாக 37 வயதில் திருமணம் செய்துகொண்டதன் பின்னணி!
சென்னை: விஜயகாந்த்துக்கு மிக தாமதமாகத்தான் திருமணம் நடைபெற்றது. விஜயகாந்த் தனது 37வது வயதில் தான் பிரேமலதாவை கரம்பிடித்தார். அதற்குப் பின்னணியிலும் ஒரு 'வானத்தைப்போல' கதை உள்ளது.
திரையுலகில் பெரும் சாதனைகளை நிகழ்த்திய விஜயகாந்த், திருமணத்தை மட்டும் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தார். 1989-ல் ஈரோட்டில் இலவச மருத்துவமனை, சென்னை சாலிகிராமத்தில் இலவச மருத்துவமனைகளைக் கட்டினார். தனக்கு நெருக்கமானவர்கள், ரசிகர்கள் மட்டுமின்றி, முன்பின் தெரியாத ஏராளமானோருக்கும் உதவிகளைச் செய்துள்ளார் விஜயகாந்த்.

விஜயகாந்தின் தந்தை அழகர்சாமிக்கு, ஆண்டாள், ருக்மணி என இரு தாரங்கள். அவர்களில் ஆண்டாள் அம்மாளின் மகன் தான் விஜயகாந்த். விஜயகாந்த்துடன் பிறந்தவர்கள் விஜயலட்சுமி, நாகராஜன், திருமலாதேவி ஆகியோர். ருக்மணி அம்மாளுக்கு பிறந்தவர்கள், செல்வராஜ், பால்ராஜ், சித்ராதேவி, ராம்ராஜ், மீனாகுமாரி, சாந்தி, பிருத்விராஜ் என 7 பேர்.
சினிமாவில் சாதித்து பணம் சம்பாதித்த பிறகு, தனது மாற்றாந்தாய் பிள்ளைகளுக்கும் விஜயகாந்த் முன் நின்று பல உதவிகளையும் செய்துள்ளார். தனது அனைத்து சகோதர, சகோதரிகளின் திருமணத்தையும் நல்ல முறையில் நடத்தி வைத்தார். தனது இளைய சகோதரர்கள் திருமணத்தையும் நடத்தி வைத்தார் விஜயகாந்த்.

'வானத்தைப் போல' படத்தின் கதையைப் போலவே, எல்லாத் தம்பிகளுக்கும், தங்கைகளுக்கும் திருமணம் செய்து கடமையை முடித்தபோது விஜயகாந்துக்கு 37 வயதாகிவிட்டது. அதற்குப் பிறகுதான் தனது அக்காவின் வற்புறுத்தலின் பேரில் பிரேமலதாவைக் கைபிடித்தார். வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பி.ஏ பட்டதாரியான பிரேமலதா, விஜயகாந்த்தின் ரசிகை. அவரை கரம்பிடித்தார் விஜயகாந்த்.
1990ஆம் ஆண்டு ஜனவரி 31 ஆம் தேதி பிரேமலதாவை மணந்தார் விஜயகாந்த். அப்போது அவருக்கு வயது 37 முடிந்திருந்தது. விஜயகாந்த் - பிரேமலதாவுக்கு திருமணமாகி 33 ஆண்டுகள் முடிந்துள்ளது. திமுக தலைவர் கருணாநிதியை விஜயகாந்துக்கு மிகவும் பிடிக்கும். விடுதலைப்புலிகள் தலைவர் பிரபாகரனையும் விஜயகாந்துக்கு பிடிக்கும்.

விஜயகாந்த்தின் திருமணத்தை அப்போதைய தமிழக முதல்வர் கருணாநிதி நடத்தி வைத்தார். விஜயகாந்திற்கு திருமணம் செய்து வைத்து வாழ்த்தி பேசிய திமுக தலைவர் கருணாநிதி, "தம்பி விஜயகாந்த் எளிமை, இனிமை ஆகிய இயல்புகளுடன் தன்னடக்கத்துடன் விளங்குகிறார். கலையுலகின் உச்சிக்குச் சென்றாலும், ஆணவம், செருக்கு, அகம்பாவம் தன்னை அணுகாதபடி பார்த்துக் கொண்டிருக்கிறார்." எனப் பாராட்டினார்.
கருணாநிதி தவிர விஜயகாந்தின் மனம் கவர்ந்த தலைவரான மூப்பனார், இசைஞானி இளையராஜா, சத்யராஜ், பிரபு, எஸ்.எஸ்.சந்திரசேகர், பாண்டியன், தியாகு, தாணு, இராம.நாராயணன், பாரதிராஜா, மணிவண்ணன், எஸ்.பி.முத்துராமன், சங்கர்கணேஷ் என திரையுலக முக்கிய பிரபலங்கள் அனைவரும் இந்த திருமணத்தில் பங்கேற்றனர். பல்லாயிரக்கணக்கான ரசிகர்களும் அவரது திருமணத்தில் கலந்துகொண்டனர்.
திரையுலகில் எம்ஜிஆர் ரசிகனாகவும், அரசியலில் கருணாநிதியின் தொண்டராகவும் இருந்த விஜயகாந்த் இரண்டையும் கலந்து எம்ஜிஆர் பாணியில் தனது ரசிகர் மன்றங்களை நற்பணி செயல்களை செய்யும் வகையில் மாற்றினார். அதையே, பின்னாளில் தனது அரசியலுக்கான அஸ்திவாரமாகவும் ஆக்கிக்கொண்டார். பிரபாகரன் மீதுள்ள பற்றால் தனது மூத்த மகனுக்கு விஜய பிரபாகரன் என பெயர் வைத்தார். இரண்டாவது மகனுக்கு சண்முக பாண்டியன் என பெயரிட்டார்.
-
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்? -
916 KDM நகை வாங்குவோர் கவனத்திற்கு.. ஒரு சவரன் தங்கம் எடுக்கும்போதே நஷ்டமா? பலர் செய்யும் பெரிய தவறு -
அழகே அழகு அப்டேட்: திமிரா பேசிய சுரேஷுக்கு சரியான பதிலடி கொடுத்த அழகுமதி.. ஒன்று சேர்ந்த குடும்பம் -
ஜெயலலிதா ஸ்டைலை பின்பற்றும் விஜய்! ‘டபுள் தொகுதி’ ஃபார்முலாவை கையில் எடுத்தது ஏன்? இதுவரை யார் யார்? -
திமுக தேர்தல் அறிக்கை LIVE: மகளிர் உரிமை தொகை, புதுமைப்பெண், தமிழ்ப்புதல்வன் தொகை உயர்வு! -
மத்தி, சென்னையை கிளீன் ஸ்வீப் செய்யும் திமுக! தெற்கு, வடக்கில் ட்விஸ்ட்! அப்போ அரியணை? வெளியான சர்வே












Click it and Unblock the Notifications