சென்னையில் அரசு ஊழியருக்கு நடந்த ட்விஸ்ட்.. புதிய மின் இணைப்பு வாங்க போனவர் செய்த தரமான சம்பவம்
சென்னை: சென்னையை அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்த தினேஷ் என்பவர் தன்னுடைய சொந்த இடத்தில் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக 6 கடைகள் கட்டியிருக்கிறார் இந்த கடைகளுக்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு வேண்டி மணப்பாக்கம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார். இந்நிலையில் அங்கிருந்த வணிக ஆய்வாளர் புதிய மின் இணைப்பு வழங்க ரூ.15 ஆயிரம் லஞ்சம் வாங்கியதாக கையும் களவுமாக கைது செய்யப்பட்டுள்ளார்.
பொதுவாகவே மின் இணைப்பு பெறவேண்டும் என்றால், அதற்கு முறையான வழிகள் உள்ளன. லஞ்சம் கொடுத்து தான் மின்இணைப்பு பெற வேண்டும் என்று கிடையாது.வீடு அல்லது வணிக மின் இணைப்புக்கு விண்ணப்பப் படிவம் 1ல் விண்ணப்பிக்க வேண்டும். படிவத்தில் கேட்கப்பட்ட அனைத்து தகவல்களுடன், மின் இணைப்பு தேவைப்படும் இடத்துக்குறிய சட்டப்படி உரிமை தாரருக்கான ஆவணங்களை தர வேண்டும். உங்கள் பொறுப் பிலுள்ள இடமாக இருந்தால், மின் வழங்கல் கேட்கும் நுகர்வோர் படிவம் 5ன் படி, தடையில்லா சம்மதக் கடிதத்தை இருப்பிட உரிமையாளரிடமிருந்து பெற்று சமர்ப்பிக்க வேண்டும். அல்லது உங்கள் இடம் தான் என்றால், பத்திரம் தேவைப்படும்.

மின் இணைப்பு
அதேபோல் அரசின் அனுமதியுடன் கட்டுமானம், கட்டட மாற்றங்கள் பணிகள் மேற் கொள்ளும்போது உள்ளாட்சி மற்றும் அரசுத்துறைகளின் அனுமதி நகல்கள் மற்றும் வழக்குகள் இருந்தால் சிவில் நீதிமன்ற உத்தரவு நகலை தாக்கல் செய்ய வேண்டியது அவசியம் ஆகும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தை மின் வாரிய பகுதி அலுவலகத்தில், உதவி செயற்பொறியாளரிடம் அளிக்கவேண்டும்.மேலும் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்தி பதிவு செய்ய வேண்டும்.
கட்டணம் எவ்வளவு
அதன்பின்னர் உங்கள் விண்ணப்பம் ஏற்கப்பட்டதும், மின் இணைப்பு கேட்போரின் இடத்தில் தரை தளத்தில் மின் இணைப்பு கொடுக்க வேண்டிய இடம் மற்றும் /மின் மீட்டர் பொருத்தும் இடத்தை முடிவு செய்துகொள்ள, மின் வாரியம் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பும். பின்னர், மின் இணைப்புக்கான கட்டணங்களை செலுத்த அறிவிப்புக் கடிதம் கிடைத்ததும், கட்டணங்களை நீங்கள் முழுமையாக செலுத்த வேண்டும். தற்போது ஒரு முனை பிரிவில் மின் இணைப்புக்கான கட்டணம் ரூ.1,070-ல் இருந்து, ரூ.1,105 ஆகவும், மீட்டர் வைப்பு தொகை ரூ.800-ல் இருந்து ரூ.825 ஆகவும் உயர்ந்துள்ளது. வளர்ச்சி கட்டணம் ரூ.3 ஆயிரத்தில் இருந்து ரூ.3,095 ஆகவும், பதிவு கட்டணம் ரூ.215-ல் இருந்து ரூ.220 ஆகவும், வைப்புத்தொகை ரூ.320-ல் இருந்து ரூ.330 ஆகவும் இப்போது உயர்த்தப்பட்டுள்ளது.
மும்முனை மின்சாரம்
இதேபோல் மும்முனை பிரிவு மற்றும் உயர் அழுத்த பிரிவில் புதிய மின் இணைப்பு பெறுவதற்கான பல்வகை கட்டணங்கள் இப்போது உயர்த்தப்பட்டு உள்ளன. இவற்றில் வளர்ச்சி கட்டணம் மட்டும், தரைக்கு அடியில் மின் வினியோகம் செய்யும் இடம் மற்றும் மின் கம்பம் வாயிலாக மின் வினியோகம் செய்யும் இடம் என தனித்தனியே நிர்ணயிக்கப்பட்டிருக்கிறது.இந்த கட்டணங்களை செலுத்திய பின்னர் மின்இணைப்பு கிடைக்கும். எனவே லஞ்சம் கொடுத்து மின் இணைப்பு பெற வேண்டிய அவசியம் இல்லை..ஆனால் ஒரு சில இடங்களில் மின்வாரிய அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக புகார்கள் உள்ளது. அப்படி லஞ்சம் கேட்டதாக அதிகாரி ஒருவர் கைதாகி உள்ளார்.
வணிக மின் இணைப்பு
சென்னையை அடுத்த மணப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் என்பவர் தன்னுடைய சொந்த இடத்தில் வணிக பயன்பாட்டிற்காக புதிதாக 6 கடைகள் கட்டியுள்ளார். அவர் தனது கடைகளுக்கு வணிக ரீதியிலான மின் இணைப்பு வேண்டி மணப்பாக்கம் மின் உற்பத்தி மற்றும் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் விண்ணப்பித்துள்ளார்.
லஞ்சம்
மணப்பாக்கத்தில் பணியில் இருந்த வணிக ஆய்வாளர் அண்ணாமலை விண்ணப்பத்தினை பரிசீலனை செய்து நடவடிக்கை எடுக்க ஒவ்வொரு மின் இணைப்புக்கும் தலா ரூ.2,500 வீதம் ரூ.15 ஆயிரம் லஞ்சமாக தரவேண்டும் என கேட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத தினேஷ் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத்துறை சென்னை பிரிவில் புகார் கொடுத்திருக்கிறார்.
எப்படி சிக்கினார்
இதையடுத்து செனனை லஞ்ச ஒழிப்பு போலீசார் மாறுவேடத்தில் புகார் கொடுத்த தினேசுடன் மணப்பாக்கம் மின் பகிர்மான கழக அலுவலகத்திற்கு சென்றிருக்கிறார்.. மேலும் தினேசிடம் ரசாயணம் தடவிய ரூ.15 ஆயிரத்தை கொடுத்துள்ளனர். வணிக ஆய்வாளர் அண்ணாமலை அந்த பணத்தை தினேசிடம் இருந்து வாங்கும்போது அங்கு மறைந்த இருந்த லஞ்ச ஒழிப்பு துறை போலீசார் அவரை கையும் களவுமாக மடக்கி பிடித்து கைது செய்தனர். இந்த சம்பவம் மின் பகிர்மான கழக அலுவலகத்தில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.. கைதான அண்ணாமலையிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications