ஒருமையில் பேசி.. அடிக்க பாய்ந்து.. அன்வர் ராஜாவை தூக்குனாங்களே! மீண்டும் அதிமுகவிற்கு வந்தது எப்படி?
சென்னை: அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைகிறார்.
கட்சி விதிகளை மீறியதாகவும், கட்சியின் மாண்பிற்கு களங்கம் ஏற்படுத்தியதாகவும், கழகத்தின் கொள்கை- குறிக்கோள்களுக்கும், கோட்பாடுகளுக்கும் முரணான வகையில் செயல்பட்டதாகவும் கூறி அன்வர் ராஜா கட்சியில் இருந்து கடந்த 2021 டிசம்பர் மாதம் நீக்கப்பட்டார்.

அப்போது அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் கூட்டாக அறிக்கை வெளியிட்டு இந்த நடவடிக்கையை எடுத்தனர். அப்போது அன்வர் ராஜா நீக்கப்பட்டது ஏன்? எப்படி? மீண்டும் அதிமுக வந்தது ஏன்? என்று பார்க்கலாம்!
அதிமுக எதிர்ப்பு: அதிமுகவில் ஜெயலலிதா மறைவிற்கு பின் சசிகலா ஆதரவாளராக இருந்த அன்வர் ராஜா, ஓ பன்னீர்செல்வத்தின் தர்மயுத்தத்தை தீவிரமாக எதிர்த்து வந்தார். அதன்பின் அதிமுகவில் ஓபிஎஸ் - இபிஎஸ் ஒன்றான பின் கட்சியில் ஒற்றை தலைமை வேண்டும் என்று கூறி வந்தார். அதோடு பாஜகவுடன் கூட்டணி வைத்ததையும் விமர்சனம் வைத்து வந்தார். அன்வர் ராஜாவை பொறுத்தவரை அதிமுகவின் தோல்விக்கு பாஜக கூட்டணியும், எடப்பாடி பழனிசாமியின் நடவடிக்கைகளும்தான் காரணம் என்றார். கொஞ்சம் கொஞ்சமாக எடப்பாடியை அன்வர் ராஜா தாக்க தொடங்கினார்.
எடப்பாடி பழனிசாமி: இதை அன்வர் ராஜா வெளிப்படையாகவே பல இடங்களில் பேசி இருக்கிறார். , எடப்பாடி பழனிசாமியின் தலைமைப்பண்பு சரியில்லை. அவரின் கூட்டணி முடிவுகளில் தவறு செய்துவிட்டார். வன்னியர் இட ஒதுக்கீட்டில் சறுக்கிவிட்டார். பாஜகவிற்கு அதிமுக கட்டுப்பட்டு நடக்கிறது. சசிகலாவை மீண்டும் கட்சிக்குள் சேர்க்க வேண்டும். சசிகலாதான் கட்சியை வழி நடத்த வேண்டும் என்று அன்வர் ராஜா பல இடங்களில் வெளிப்படையாகவே பேசி இருக்கிறார்.
மோதல்: இதுதான் எடப்பாடி பழனிசாமி தரப்பிற்கு அன்வர் ராஜா மீது கோபம் ஏற்பட காரணம் என்கிறார்கள் தொடக்கத்தில் எடப்பாடி பழனிசாமிக்கு அன்வர் ராஜா நெருக்கமாவே இருந்தார். ஆனால் அதன்பின் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளர்கள் ஆதிக்கம் கட்சியில் அதிகம் ஆனதால் அன்வர் ராஜா அதிருப்திக்கு உள்ளாகி இருக்கிறார். இந்த நிலையில்தான், 2021 நவம்பர் சமயத்தில்.. அமமுக நிர்வாகி ஒருவரிடம் எடப்பாடி பழனிசாமி குறித்து அன்வர் ராஜா ஒருமையில் பேசியதாக கூறப்படுகிறது.
ஆடியோ கால்: எடப்பாடி பழனிச்சாமி மட்டும் தேர்தலில் வென்று இருந்தால் தன்னை எம்ஜிஆர் என்று கூறி இருப்பார். அவர் வலுவான தலைவராக இல்லை. சசிகலா மீண்டும் வர வேண்டும். சசிகலா காலில் விழுந்தவர்கள் அவரை ஏன் ஏற்க தயங்குகிறார்கள் என்று அன்வர் ராஜா பேசியதாக கூறப்படும் ஒரு போன் கால் ஆடியோ ஒன்றுதான் சர்ச்சையானது. இந்த ஆடியோ காலை அதே வருடம் டிசம்பர் மாதம் நடந்த அதிமுக மாவட்ட செயலாளர்கள் மீட்டிங்கில் நிர்வாகிகள் சிலர் பொதுவில் ஒலிபரப்பி உள்ளனர்.
மாஜி அமைச்சர் ஒருவர்.. கோபத்திற்கு பெயர் போனவர்.. அந்த ஆடியோவை அப்படியே பொதுவில் ஒளிபரப்பி அன்வர் ராஜாவை கேள்வி எழுப்பி உள்ளார். இது குறித்து அந்த மீட்டிங்கில் ஆலோசனை செய்துள்ளனர். இதற்கு அன்வர் ராஜா மன்னிப்பு கேட்க வேண்டும் என்று எடப்பாடி ஆதரவாளர்கள் கூறியதாக தெரிகிறது.
சண்டை: இதையடுத்து அன்வர் ராஜா.. தான் ஒருமையில் பேசிய சில கருத்துக்களுக்கு கூட்டத்திலேயே மன்னிப்பும் கேட்டு இருக்கிறார் என்கிறார்கள். ஆனால் அதே சமயம் அந்த கூட்டத்திலேயே சசிகலா குறித்து அன்வர் ராஜா பேசியதாகவும் கூறப்படுகிறது. சசிகலாவை கட்சிக்குள் கொண்டு வர வேண்டும் என்று அன்வர் ராஜா பேசி இருக்கிறாராம். இதையடுத்து அவர் மீது கோபம் அடைந்த முன்னாள் அமைச்சர் சிவி சண்முகம் அவரை அடிக்க பாய்ந்ததாகவும் ஊடகங்களில் செய்திகள் வெளியாகின.

ஒப்புக்கொண்டார்: அன்வர் ராஜா கூறிய சில கருத்துக்களை ஏற்காமல் சிவி சண்முகம் இப்படி கோபம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதில் சிவி சண்முகம் அன்வர் ராஜாவையும் அதிமுகவின் மற்ற தென் மண்டல தலைவர்களையும் விமர்சித்து பேசியதாக கூறப்படுகிறது. சிவி சண்முகத்தின் இந்த கருத்துக்கு முன்னாள் அமைச்சர் சி. விஜயபாஸ்கர், செங்கோட்டையன் உள்ளிட்டோர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனராம். இது பெரிய மோதலில் முடிந்துள்ளது. இதுதான் நடந்த பிரச்சனை. அப்போது தமிழ்நாடு அரசியலையே உலுக்கிய சம்பவம் அது.
டிவி விவாதம்: அப்போதே அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமி குறித்து ஆடியோ காலில் பேசியது உண்மை என்றும், சசிகலாவை அதிமுகவிற்குள் கொண்டு வர வேண்டும் என்றும் கூறி அன்வர் ராஜா பல்வேறு தொலைக்காட்சி விவாதங்களில் வெளிப்படையாக அன்வர் ராஜா பேசி இருந்தார். இதையடுத்தே 2021 டிசம்பரில் அன்வர் ராஜா கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
மீண்டும் இணைந்தார்: அப்போது மோசமாக அவமானப்படுத்தப்பட்டு அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்பி அன்வர் ராஜா மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார். எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் மீண்டும் அதிமுகவில் இணைந்துள்ளார் முன்னாள் எம்.பி அன்வர் ராஜா. அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் மன்னிப்பு கடிதம் கொடுத்து சேரலாம் என்ற அறிவிப்பை அடுத்து அதிமுகவில் இணைகிறார்.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது












Click it and Unblock the Notifications