தார் ரோட்டில் தகித்த அஸ்வின்.. நேற்று நடந்த ஷாக் சம்பவம்! அத்தனை பேர் இருக்க இவர் மட்டும் எப்படிங்க?
சென்னை: நேற்று ராஜஸ்தானுக்கும் பஞ்சாப் அணிக்கும் இடையில் நடந்த மேட்சில் நடந்த சம்பவம் ஒன்று தேசிய அளவில் கவனிக்கப்பட்டு உள்ளது.
ஐபிஎல் 2023 தொடர் விறுவிறுப்பாக நடந்து கொண்டு இருக்கிறது. இந்த தொடரின் ஒரு பகுதியாக நேற்று ராஜஸ்தான் பஞ்சாப் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடந்தது. பொதுவாகவே ராஜஸ்தான் - பஞ்சாப் மேட்ச் என்பது சிஎஸ்கே - மும்பை மேட்ச் போல விறுவிறுப்பாக செல்லும்.
அதிலும் கடந்த 2 சீசன்களில் இந்த இரண்டு அணிகள் மோதும் போட்டிகள் எல்லாம் கடைசி வரை விறுவிறுப்பாக சென்று இருக்கிறது. சில போட்டிகள் கடைசி இரண்டு ஓவரில் கூட மாறி இருக்கிறது.

அந்த வகையில் நேற்றைய மேட்சும் தொடக்கத்தில் இருந்து கடைசி வரை விறுவிறுப்பாக சென்றது. நேற்று மேட்ச் நடந்த மைதானம் கவுகாத்தியில் இருக்கும் பாரஸ்பரா மைதானம் ஆகும். இது முழுக்க முழுக்க பேட்டிங் செய்வதற்கு சாதகமான மைதானம். மிகவும் பிளாட்டாக இருக்கும் மைதானம் ஆகும். பாகிஸ்தானில் கடந்த சில வருடங்களாக இப்படி பிளாட் மைதானங்கள்தான் உருவாக்கப்பட்டு வருகின்றன.
அப்படி ஒரு மைதானம்தான் கவுகாத்தியில் இருக்கும் இந்த பிட்சும். சரியாக சொல்ல வேண்டும் என்றால் இந்த மைதானம் தார் ரோடு போலத்தான் இருக்கும். தார் ரோட்டில் பந்து நன்றாக வந்தாலும், இங்கே பேட்டிங் செய்வது மிக எளிதாக இருக்கும். அப்படி ஒரு பிட்ச்தான் இது. இந்த பிட்சில் பொதுவாக 200க்கு குறைவாக அடித்தாலே அதை எளிதாக அடித்துவிடலாம். 200க்கு குறைவான ரன்களை இங்கே டிபன்ட் செய்வது என்பது இயலாத காரியம்.
பஞ்சாப் பேட்டிங்
நேற்று இங்கே முதலில் பேட்டிங் செய்த பஞ்சாப் அணி 197-4 ரன்கள் எடுத்தது. பஞ்சாப் அணியின் தொடக்க வீரர் பிரப்சிம்ரான் 34 பந்தில் 60 ரன்கள் எடுத்தார். இவர் 7 பவுண்டரி, 3 சிக்ஸ் என்று அசத்தினார். அதன்பின் தவான் இன்னொரு பக்கம் 56 பந்தில் 86 ரன்களை எடுத்தார். இவரும் 9 பவுண்டரி, 3 சிக்ஸ் அடித்தார். இதன் பின் இறங்கிய ராஜஸ்தான் அணி கடைசிவரை போராடி 192-7 ரன்கள் மட்டுமே எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. ராஜஸ்தான் அணியில் சஞ்சு சாம்சன் மட்டுமே 25 பந்தில் 42 ரன்கள் எடுத்தார். 5 பவுண்டரி, 1 சிக்ஸ் அவர் அடித்தார்.

கடைசியில் இறங்கிய இம்பாக்ட் வீரர் துருவ் ஜாரில் 15 பந்தில் 32 ரன்கள் எடுத்தார். 3 பவுண்டரி, 2 சிக்ஸ் என்று அடித்தார். நேற்று போட்டி நடந்த இந்த பிட்ச் ஒரு ஹை வே தார் ரோடு போன்ற பிட்ச்.
அஸ்வின்
இதில் எல்லா பவுலர்களும் 7 ரன்களுக்கு மேல் கொடுத்தனர். ஆனால் ராஜஸ்தான் பவுலர் அஸ்வின் மட்டுமே 6 எக்கனாமி வைத்து இருந்தார். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற ஒரு பிட்சில் பவுலிங் செய்து 1 விக்கெட் எடுத்தது மட்டுமின்றி அவர் ரன் செல்வதையும் கட்டுப்படுத்தினார். அதோடு முதல் ஓவரில் 11 ரன்கள் கொடுத்துவிட்டு மற்ற 3 ஓவர்களில் மொத்தமாக ரன் செல்வதை கட்டுப்படுத்தி ஆட்டத்தை மாற்றினார்.
ராஜஸ்தான் பேட்ஸ்மேன்கள் மட்டும் நேற்று கொஞ்சம் நன்றாக ஆடி இருந்தால் அந்த அணி எளிதாக வென்று இருக்கும். நேற்று அஸ்வின் போல இரண்டு அணியிலும் யாரும் இவ்வளவு சிறப்பாக பவுலிங் செய்யவே இல்லை. .4-0-25-1 என்பது பார்க்க சாதாரணமாக தெரிந்தாலும்.. இது போன்ற தார் சாலை பிட்சில் இப்படி பவுலிங் போடுவது என்பது அசாத்தியமான காரியம்.
அதோடு அஸ்வின் பவுலிங் செய்யும் போதே பிட்சில் பனி காரணமாக பந்து ஈரமாக தொடங்கிவிட்டது. ஆனாலும் அதை எல்லாம் மீறி இவர் 25 ரன்கள் மட்டுமே கொடுத்தது அஸ்வினின் திறமை மற்றும் வியூகத்தை மட்டுமே காட்டுகிறது.
-
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி! -
பவரை காட்டுவோம்! மொத்த உலக நாடுகளையும் பீதியில் ஆழ்த்திய டிரம்ப் சொன்ன வார்த்தை! பெருசா நடக்க போகுது -
சர்ருன்னு ஏறிய பாஜக சீட் கணக்கு.. கடந்த தேர்தல்களில் பாஜக போட்டியிட்ட தொகுதிகள் எத்தனை?












Click it and Unblock the Notifications