உயிரை கொடுத்து ஆடினாரே.. முக்கியமான வீரரை நீக்கியது பிசிசிஐ.. கிரிக்கெட் கெரியருக்கே முடிவுரையா?
சென்னை: நியூசிலாந்துக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணியின் முக்கிய வீரர் ஒருவருக்கு பிசிசிஐ வாய்ப்பு கொடுக்காமல் புறக்கணித்துள்ளது.
Recommended Video
நியூசிலாந்து அணிக்கு எதிராக இந்த மாதம் 25ம் தேதியில் இருந்து இரண்டு டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி ஆட உள்ளது. இதற்கான இந்திய அணி இன்று அறிவிக்கப்பட்டது.
நவம்பர் 17ம் தேதி நடக்க உள்ள டி 20 தொடருக்கான ரோஹித் சர்மா தலைமையிலான இளம் இந்திய டி 20 அணி ஏற்கனவே அறிவிக்கப்பட்டுவிட்டது. இந்த நிலையில் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் முதல் போட்டியில் ரஹானே தலைமையில் இந்திய அணி ஆட உள்ளது.

கோலி
நியூசிலாந்து அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் கேப்டனாக கோலி மீண்டும் அணிக்குள் திரும்புவார். ரோஹித் சர்மா, பும்ரா, பண்ட், ஷமி ஆகியோருக்கு இரண்டு டெஸ்டில் இருந்தும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்திய அணிக்குள் விர்த்திமான் சாகா, கே. எஸ் பரத் ஆகிய இரண்டு பேர் விக்கெட் கீப்பர்களாக சேர்க்கப்பட்டுள்ளனர்.

ரஹானே
ரஹானே, ராகுல், மயங்க் அகர்வால், புஜாரா, கில், ஷ்ரேயாஸ் ஐயர், சாகா, கே. எஸ் பரத், அஸ்வின், ஜடேஜா, சிராஜ், அக்சர் பட்டேல், ஜெயந்த் யாதவ், உமேஷ் யாதவ், இஷாந்த் சர்மா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் அணிக்குள் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்திய அணியில் பல இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அதிகம் எதிர்பார்க்கப்பட்ட விஹாரி அணியில் இடம்பெறவில்லை.

விஹாரி
இந்திய அணியின் முக்கியமான டெஸ்ட் வீரர்களில் ஒருவரான ஹனுமா விஹாரி அணியில் இடம்பெறவில்லை. இவரை பிசிசிஐ நீக்கி உள்ளது. கடைசியாக ஆஸ்திரேலியாவில் எஸ்டிஜி டெஸ்டில் கஷ்டமான போட்டியை டிரா செய்ய இவர்தான் காரணமாக இருந்தார். அஸ்வினுடன் இவர் பார்ட்னர்ஷிப் வைத்து ஆடினார்.

போராட்டம்
161 பந்தில் 23 ரன்கள் எடுத்து ஆட்டத்தை டிரா செய்தார். இதுதான் இந்திய அணி ஆஸ்திரேலியா தொடரை 2-1 என்ற கணக்கில் வெல்ல காரணமாக இருந்தது. அந்த போட்டியில் முதுகில் விஹாரிக்கு காயம் இருந்தது. அந்த காயத்தோடு விஹாரி உயிரைக் கொடுத்து ஆடினார். மிக பெரிய அளவில் காயத்தால் கஷ்டப்பட்டும் கூட இந்திய அணிக்காகக் கடைசி வரை நின்று ஆடி ஆட்டத்தை டிரா செய்தார்.

நீக்கம்
இதுவரை 11 போட்டிகளில் இவர் 624 ரன்கள் எடுத்துள்ளார். ஆனால் இப்படிப்பட்ட வீரரை மொத்தமாக பிசிசிஐ ஒதுக்கி உள்ளது. இவர் கவுண்டி போட்டிகளிலும் சரியாக ஆடவில்லை. இதன் காரணமாக அணியில் இருந்து நீக்கப்பட்டு இருக்கலாம் என்கிறார்கள். ஹனுமா விஹாரிக்கு இப்போது வயது 28 ஆகிறது.

விஹாரி நீக்கம் ஏன்?
இந்திய அணி கில், ஷ்ரேயாஸ் போன்ற இளம் வீரர்களுக்கு வாய்ப்பு கொடுக்க முயற்சிப்பதால் இவருக்கு இனி வாய்ப்பு கிடைப்பது கஷ்டம். மொத்தமாக இந்திய அணியில் இவர் இடம்பெறாமல் போகவும் வாய்ப்புகள் உள்ளன. இவரின் டெஸ்ட் கெரியர் முடிவதற்கான அறிகுறிகள் தெரிய தொடங்கி உள்ளன.












Click it and Unblock the Notifications