வர்த்தக போரை தீவிரப்படுத்திய டிரம்ப்.. இனி தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும்.. இப்பவே வாங்கி போடுங்க!
சென்னை: சென்னையில் ஆபரண தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.63,520க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வரும் நாட்களில் தங்கத்தின் விலை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க அதிபர் டிரம்ப் எடுத்த முடிவுகள் காரணமாக தங்கத்தின் விலை மேலும் மேலும் உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சென்னை - ரீடைல் சந்தையில் இன்று 22 கேரட் தங்கத்தின் விலை (1 கிராம்) ₹ 7,940 ஆகவும், இதேபோல் 24 கேரட் தங்கம் விலை ₹ 8,662 (1 கிராம்) ஆகவும் உள்ளது.

உலகம் முழுக்க வர்த்தக போரை தொடங்கி உள்ளார் டிரம்ப். எதிரி நாடுகளை விட நட்பு நாடுகள் மீதுதான் டிரம்ப் வர்த்தக போரை ஏவி விட்டுள்ளார். வர்த்தக பற்றாக்குறை அடிப்படையில் இந்த வரி விதிப்பை டிரம்ப் மேற்கொண்டுள்ளார். மெக்சிகோ மற்றும் கனடா மீது 25 சதவீத வரிகளையும், சீனா மீது 10 சதவீத வரிகளையும் விதித்தார்.
சீனா, மெக்சிகோ மற்றும் கனடா ஆகியவை அமெரிக்க வர்த்தகப் பற்றாக்குறையில் முதல் 3 இடங்களை வகிக்கின்றன, சீனா அதிகப்பட்சமாக 30.2 சதவிகிதம், மெக்ஸிகோ 19 சதவிகிதம் மற்றும் கனடா 14 சதவிகிதம் வரி பற்றாக்குறையில் பங்கு வகிக்கின்றன. அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்காவிற்கான அனைத்து எஃகு இறக்குமதிக்கும் 25% வரி விதிப்பதாக அறிவித்துள்ளார். அமெரிக்காவில் அதிக அளவில் இந்திய எஃகு பயன்படுத்தப்படும் நிலையில், டிரம்ப்பின் இந்த முடிவு இந்தியாவின் எஃகு ஏற்றுமதியை பாதிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
வர்த்தக போர்
இந்த வர்த்தக போர் காரணமாக தங்கத்தின் விலை தாறுமாறாக உயரும் நிலை உள்ளது. இதற்கு பின் காரணங்கள் உள்ளன.
1. வர்த்தக போர் காரணமாக.. உலகம் முழுக்க பணத்தின் மதிப்பு ஏற்ற இறக்கமாக இருக்கும்.
2. இதனால் பலரும் தங்கத்தில் முதலீடு செய்வார்கள். தங்கம் பக்கமே தனி நபர்கள், அமைப்புகள், ஏன் நாடுகள் கூட செல்லும்.
3. பொதுவாக வர்த்தக போர் சமயத்தில்.. உலகம் முழுக்க பங்குச்சந்தை சரமாரியாக சரியும். இந்தியாவிலும் அதேதான் நடக்கிறது.
4. ஆனால் தங்கம்தான் ரியல் பணம் என்பதால்.. அதன் மதிப்பு உயர்ந்து கொண்டே இருக்கும். அதன் மதிப்பு வலுவாக இருக்கும்.
5. இதனால் அடுத்த சில வருடங்களுக்கு தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து கொண்டேதான் இருக்கும்.
6. அமெரிக்கா வங்கிகள் வட்டி மதிப்பை குறைந்துள்ளன. இதனால் டாலர் மதிப்பு மேலும் குறையும். இதனால் தங்கத்தின் விலை உயரும். வரும் நாட்களில் தங்கத்தின் விலை உச்சத்தை அடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கி தற்போது வட்டி விகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் குறைத்து உள்ளது. இந்த முடிவு டாலரை பலவீனப்படுத்தி உள்ளது. இதனால் தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை எட்ட தொடங்கி உள்ளது. இனியும் தங்கத்தின் விலை அதிகரிக்கும்.
7. இந்தியாவிலும் தொடர்ந்து பணத்தின் மதிப்பு குறைகிறது. இதனால் பாதுகாப்பான ரியல் பணம் தங்கம்தான். இதனால் மக்கள் தங்கத்தில்தான் முதலீடு செய்வார்கள். பணத்தின் மதிப்பு சரிவதால்.. பாதுகாப்பாக இருக்க ரியல் பணமான தங்கத்தில் முதலீடு செய்வார்கள். இப்படி முதலீடு செய்வதால் தங்கத்தின் மதிப்பு உயரும். தங்கத்தின் தேவை அதிகரிக்கும். தங்கத்தின் விலை நாளுக்கு நாள் உயரும்.












Click it and Unblock the Notifications