நொறுங்கிய பிளான்.. அவசரப்பட்டு அரசியலுக்கு வந்துட்டாரோ.. விஜய்க்கு பெரிய சிக்கல்! நொறுங்கிடுச்சே

Subscribe to Oneindia Tamil

சென்னை: நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் கட்சிக்கு மிகப்பெரிய அளவில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதிமுக - பாஜக கூட்டணி காரணமாக விஜய்க்கு மிகப்பெரிய அளவில் அரசியல் நெருக்கடி சிக்கல்கள் ஏற்பட்டு உள்ளது.

தமிழ்நாட்டில் அதிமுக - பாஜக கூட்டணி உறுதி செய்யப்பட்டு உள்ளது. எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று உள்துறை அமைச்சர் அமித் ஷா பேட்டி அளித்துள்ளார். சென்னையில் எடப்பாடி பழனிச்சாமி - அமித் ஷா - அண்ணாமலை கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அமித் ஷா அளித்த பேட்டியில், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தேர்தலை சந்திப்போம். 2026 சட்டமன்ற தேர்தலை பிரதமர் மோடி தலைமையிலும், தமிழ்நாட்டில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலும் சந்திப்போம். எடப்பாடி பழனிசாமி தலைமையில்தான் இந்த கூட்டணி அமைகிறது என்று அமித் ஷா கூறி உள்ளார்.

திமுகவிற்கு சாதகம்

இந்த கூட்டணி காரணமாக நாம் தமிழர், விஜயின் தமிழக வெற்றிக் கழகம் இந்த கூட்டணிக்கு வராமல் போகலாம். ஏனென்றால்.. நாம் தமிழர் - பாஜக எதிர் எதிரெதிர் கொள்கைகள் கொண்ட கட்சி. விஜய் வேறு தலைமையிலான.. அதாவது எடப்பாடி தலைமையிலான கூட்டணிக்கு வர மாட்டார். இதனால் 4 முனை போட்டி.. அதாவது திமுக - காங்கிரஸ் கூட்டணி, அதிமுக - பாஜக கூட்டணி , தமிழக வெற்றிக் கழகம், நாம் தமிழர் என்று 4 முனை போட்டி நிலவும். இந்த 4 முனை போட்டி பொதுவாக ஆளும் கட்சிகளுக்கே சாதகம். அதாவது 4 முனை போட்டியால்.. எதிர்க்கட்சிகளின் வாக்குகள் 3 முனையாக பிரியும். அதாவது திமுகவிற்கு எதிராக செல்ல வேண்டிய வாக்குகள் 3 பக்கங்களில் பிரியும். இதனால் எதிர்க்கட்சிகளுக்கு மெஜாரிட்டி கிடைப்பது கஷ்டம். ஜெயலலிதா 2016ல் எதிர்க்கட்சிகளின் வாக்குகளை பிரித்த மக்கள் நல கூட்டணி காரணமாக இப்படித்தான் வென்றார்.

Why will TVK Vijay be affected more by the AIADMK-BJP alliance

சொதப்பிய தமிழக வெற்றிக்கழகம்

இதன் மூலம் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் மொத்தமாக தனித்துவிடப்பட்டு உள்ளது. தமிழக வெற்றிக் கழகம் - அதிமுக இடையே நடந்த ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிந்ததாக கூறப்படுகிறது. விஜய் அரசியலுக்கு புதிது என்பதால் அதிமுக கூட்டணி வந்த போதே அதை ஏற்காமல் மிஸ் செய்துள்ளார். அதிமுகவிற்கு தமிழக வெற்றிக் கழகத்தின் கோரிக்கைகள் ஏற்றதாக இல்லை.. அதிமுகவிற்கு தகுந்ததாக இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கூட்டணி பேச்சுவார்த்தை ஆரம்ப கட்டத்திலேயே முறிந்துவிட்டதாக கூறப்படுகிறது. அதன்படி அதிமுக வட்டாரத்தில் கூறுகையில், தமிழக வெற்றிக்கழகம் அதிமுகவிற்கு வேலைக்கு ஆகாது. தமிழக வெற்றிக் கழக கோரிக்கைகளை அதிமுக ஏற்க முடியாது. தமிழக வெற்றிக் கழகம் சில கோரிக்கைகளை வைக்கிறது.. அதெல்லாம் அதிமுகவிற்கு தகுந்ததாக இருக்காது. 117 இடங்களை தமிழக வெற்றிக் கழகம் கேட்கிறது. பாதிக்கு பாதி இடங்கள் கேட்கிறார்கள். இரண்டரை வருடங்கள் நாங்கள் ஆட்சி.. அதன்பின் இரண்டரை வருடங்கள் நீங்கள் ஆட்சி என்று அதிமுகவிடம் தமிழக வெற்றிக் கழகம் பேசி உள்ளது என்று கூறியுள்ளதாக தெரிவிக்கின்றனர்.

இந்த நிலையில்தான் தமிழக வெற்றிக் கழகம் குறித்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி சர்வே எடுத்ததாக கூறப்படுகிறது. விஜய் தரப்பு எடப்பாடி தரப்பிடம் பேசுகையில், எங்களுக்கு பெரிய பலம் உள்ளது. முக்கியமாக 15 சதவிகிதத்திற்கும் மேல் வாக்கு வங்கி உள்ளதாக எங்கள் சர்வே சொல்கிறது. அதனால் 117 இடங்கள் எங்களுக்கு தேவை, என்று விஜய் தரப்பி பேசி இருக்கிறதாம். இதை எடப்பாடி ஏற்றுக்கொள்ளவில்லை என்பதால் கூட்டணி சேரவில்லை.

தனித்து விடப்படும் விஜய்

இதனால் விஜய் தனித்து விடப்படும் நிலை ஏற்படலாம். அதிமுக - பாஜக கூட்டணி சேர்ந்துள்ளதால் அந்த வாக்குகள் அப்படியே அவர்களுக்கு போகும். பாமக, தேமுதிகவும் இவர்கள் பக்கமே போக வாய்ப்புகள் உள்ளன. திமுக கூட்டணி வாக்குகள் ஒரு பக்கம் அப்படியே இருக்கும். சீமான் தனது பங்கிற்கு 8% வாக்குகளை எடுத்துக்கொள்வார். இளைஞர்கள் சிலரின் வாக்குகளை தவிர விஜய்க்கு பெரிய அளவில் வாக்குகள் போகாத நிலை ஏற்படலாம்.

அதிமுக - பாஜக கூட்டணி உருவானால் அவர்களின் கூட்டணி பலமாகும். இது அதிக வாக்குகளை எடுக்க விரும்பும் விஜய்க்கு பெரிய சிக்கலாக மாறும் வாய்ப்புகள் உள்ளன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+