தங்கைக்கு வரதட்சணையும் கொடுக்கனும், குடும்ப சொத்திலும் பங்கும் தரனுமா? அண்ணன்களின் குமுறல்!
சென்னை: சகோதரிக்கு குடும்ப சொத்தை பிரித்து கொடுத்த பிறகு சீர், சீதனம் எதற்கு.. ஒன்று சொத்து கொடுக்கலாம், அல்லது சீர் கொடுக்கலாம், இரண்டுமேன்னா எப்படி என்ற கேள்வியுடன் வாட்ஸ்அப் குரூப்களில் ஒரு மெசேஜ் தீயாக பரவி வருகிறது.
இதோ பாருங்கள். படித்துவிட்டு உங்கள் கருத்து என்ன என்பதை சொல்லுங்கள்..

இதோ மெசேஜ்: தகப்பனின் சொத்தில் பெண்களுக்குப் பங்கு கொடுக்கத் தேவை இல்லை என்று சொன்ன நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை...
ஒரு வீட்டில் பிறந்த அண்ணன்- தம்பிகள் தந்தையின் சொத்தில் பாகம் பிரித்துக் கொள்வார்கள்... அதன் பிறகு அவர்கள் பங்காளிகள் மட்டுமே இவர் வீட்டு விசேஷத்திற்கு அவரும் அவர் வீட்டு விசேஷத்திற்கு இவரும் போய் கலந்துக் கொள்வதோடு சரி மற்றபடி கொடுக்கல் வாங்கல்கள் எதுவாக இருந்தாலும் அது கணக்கில் வைக்கப்படும் பின்பு வசூலிக்கப்படும் சமயங்களில் வட்டியுடன்... ஆனால் பெண்களுக்குப் பாகம் எதுவும் கொடுப்பது இல்லை.
மாறாக கல்யாணத்திற்கு சீர் செய்வார்கள் நகை- நட்டு -பாத்திரம்- பண்டம்- வாகனம்- ரொக்கம் என இந்த பட்டியல்களும் நீளும்... பாகம் பிரித்தால் கிடைக்கும் சொத்தின் மதிப்பை விட இந்த சீர் செனத்தியின் மதிப்பு அதிகமாக தான் இருக்கும்... அதோடு விடுவது இல்லை... சீமந்தம், பிள்ளைப்பேறு, பெயர் சூட்டுதல் தொடங்கி அந்தப் பெண்ணின் பிள்ளைகள் வளர்ந்து திருமணம் ஆகும் வரையில் தாய்மாமன் சீர் என்ற பெயரில் குடலை அறுத்தாவது கொடுத்தே ஆக வேண்டும்... அந்த உடன் பிறந்த சகோதரியின் மரணம் வரை உடன் பிறந்தவன் கூடவே வர வேண்டும்... எல்லாவற்றையும் கணக்குப் போட்டு பார்த்தால் பாகம் பிரித்திருந்தால் போயிருக்க கூடிய சொத்தின் அளவை விட பன்மடங்குப் போயிருக்கும்... இதை எந்த ஆணும் கணக்குப் பண்ணி பார்த்து இல்லை...
நான் எனக்கு கிடைத்த சொத்தின் அளவை விட கூடுதலாக உனக்குக் கொடுத்து விட்டேன்.. இனிமேல் செய்ய முடியாது " என்று சொல்வதில்லை... இவன் கடனை வாங்கியோ.. தமக்கு கிடைத்தச் சொத்தை விற்றோ கூட தங்கையின்-அக்காளின் நலனிற்காக அவர்களது தேவையைப் பூர்த்தி செய்வான்.
நியாயமாக வரதட்சணைக்கு எதிராக போராட வேண்டியவன் ஆண் தான். தந்தையின் சொத்தைப் பாகம் பிரிக்கையில் சகோதரிக்கும் ஒரு பாகத்தைக் கொடுத்து விட்டு அதோடு நல்லது கெட்டதுக்கு நாம கலந்துக்குவோம். கொடுக்கல் வாங்கல் எதுவும் வேண்டாம்... அப்படியே இருந்தாலும் அதைக் கணக்கில் வைத்து திரும்ப வாங்கிக் கொள்வோம்.. என்று நினைத்தால் அதன் பிறகு அவன் சம்பாதிக்கும் அனைத்துமே அவனுக்கே சொந்தம். ஆனால் எந்த ஆணும் அப்படி சிந்திப்பது இல்லை.
வேறு வீட்டில் வாழப் போகும் பெண்ணுக்கு கடைசிவரைப் பாதுகாப்பும், ஆதரவும் இருக்க வேண்டும் என்பதற்காகவே நம் முன்னோர்கள் ஏற்படுத்திய வழி தான் சீர் செனத்தி எல்லாம். அப்படி பாகமாய் சொத்தைப் பிரித்து கொடுத்து விட்டு விட்டால் அந்தப் பெண் ஆதரவற்றுப் போவாள்... இவனும் எனக்குத் தெரியாது என்று ஒதுங்கி விடுவான்... அதற்கு வழிக் கொடுக்காமல் அந்த உறவைப் பிணைத்து வைக்கவே பெண்களுக்கு சொத்துக்களைப் பாகமாய் பிரித்துக் கொடுக்காமல் முதலீடாய் சகோதரனிடமே விட்டு விட்டு கடைசி வரை கொஞ்சம் கொஞ்சமாய் வசூலிக்கும் வாய்ப்பைப் பெண்களுக்கு ஏற்படுத்திக் கொடுத்தார்கள்.
பெண்களுக்குச் சொத்துரிமை உண்டு என்று போராடக் கிளம்புகிறார்கள்.. உனக்கு மட்டும் சொத்துல உரிமை இல்லையானு உசுப்பி விடுற நபர்களோ, போராளிகளோ கடைசி வரை கூட வர மாட்டாங்க. உங்களுக்கு ஒண்ணுன்னா சகோதரன் தான் துடிப்பான். ஏன்னா அவன் தான் சக உதிரன்!
இப்படி ஒரு மெசேஜ்தான் வைரலாக சுற்றுகிறது.
91 ஆண்டுகளுக்கு முன்னர் பெண்களுக்கு சொத்து உரிமை வழங்க வேண்டும் என்கிற கலகக் குரலை இந்த மண்ணில் பெரியார் எழுப்பினார். அதையே 1989ல் தமிழக முதல்வராக கருணாநிதி சட்டமாக்கி பெரியாருக்கு காணிக்கையாக்கினார். ஆனால் இன்றும் இப்படி ஒரு மெசேஜ் சுற்றுகிறது ஆச்சரியமாக உள்ளது. அது சரி.. சகோதரன், சக உதிரன். ஆனால் சகோதரனின் மனைவி வேறு உதிரம்தானே. அவர் கணவரின் சகோதரிகளுக்கு உரிய சீர் அல்லது நிதி உதவி செய்வதில் முட்டுக்கட்டையாக மாறினால், அல்லது உண்மையிலேயே சகோதரரின் வீட்டு நிதி நிலை சரியில்லை என்றால், சகோதரிகளின் கதி என்ன? என்பதை இந்த மெசேஜை எழுதியவர் யோசிக்கவில்லையா, அல்லது சீரும் செய்து, சொத்தில் பங்கும் கொடுத்ததால் நொந்து போன ஏதோ ஒரு சகோதரன் அல்லது சகோதரரின் மனைவி இதை எழுதினாரா என்பதுதான் தெரியவில்லை.
-
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன?












Click it and Unblock the Notifications