Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

அடுத்த 4-5 வருடத்தில் எல்லாமே மாறப்போகுது.. வீடு வாங்க போறீங்களா? சென்னையில் இந்த 4 ஏரியா பெஸ்ட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னையில் அடுத்த 4-5 வருடங்களில் பின்வரும் பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்க உள்ளன. மெட்ரோ தொடங்கி ஏர்போர்ட் வரை பல முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளன. இந்த பகுதிகளில் வரும் வருடங்களில் நிலத்தின் மதிப்பு பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

பூந்தமல்லி முன்னேற்றம்

52.94-கிமீ பூந்தமல்லி-பரந்தூர் மெட்ரோ நீட்டிப்புக்கான டிபிஆரை CMRL சமர்ப்பித்து உள்ளது. 52.94 கிமீ தூரத்திற்கு இந்த சாலை அமைக்கப்பட உள்ளது. சென்னையின் மேற்கு புறநகர்ப் பகுதிகளை பரந்தூர் விமான நிலையத்துடன் இணைக்கும் வகையில் இந்த மெட்ரோ அமைக்கப்பட உள்ளது. இந்த மெட்ரோ நெரிசலைக் குறைக்கும் மற்றும் பயண நேரத்தைக் குறைக்கும். இது குத்தம்பாக்கம் பேருந்து நிலையத்துடன் இணைக்கப்படும் வகையில் திறக்கப்பட உள்ளது.

பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரையிலான மெட்ரோ ரயில் இணைப்புக்கான திட்டப்பணிகள் நடந்து வருகின்றன., 43.63 கி.மீ.தொலைவுக்கு விரிவான திட்ட அறிக்கையை தயாரிப்பதற்கு, நான்கு நிறுவனங்கள் ஏலம் சமர்ப்பித்துள்ளன. ஒரு வருடத்தில் திட்டம் தயாராகிவிடும் என அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். டிபிஆரில் மெட்ரோவின் சரியான நீளம், நிலையங்களின் எண்ணிக்கை, நடைபாதையின் வகை (நிலத்தடி/உயர்த்தப்பட்ட/அட்-கிரேடு), ரயிலின் வகை மற்றும் மொத்த செலவு போன்ற விவரங்கள் இருக்கும்.

அதன்பின் இதற்கான அனுமதி பெறப்பட்டு பணிகள் தொடங்கும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன. பூந்தமல்லியில் இருந்து பரந்தூர் வரை மக்களின் துரித போக்குவரத்திற்கான மெட்ரோ பயண சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கப்பட்டு உள்ளது. இதை தமிழ்நாடு அரசின் சிறப்பு முயற்சிகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் ரமேஷ் சந்த் மீனாவிடம் சென்னை மெட்ரோ நிர்வாகம் சமர்ப்பித்து உள்ளது.

Why you should invest in these 4 places in real estate As this will grow in next 4-5 years

பரந்தூர் விமான நிலையம்

சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் முக்கியமான சர்வதேச விமான நிலையம் ஆகும். இங்கு தினமும் பல லட்சம் பயணிகள் வந்து செல்கிறார்கள். அவ்வப்போது இங்கே கண்ணாடி உடைந்து விழும் சம்பவம் நடக்கும். ஆனாலும் சென்னை விமான நிலையம் பாதுகாப்பான விமான நிலையங்களில் ஒன்றாகும்.

2017-18ம் ஆண்டில் மட்டும் சென்னை விமான நிலையத்தின் மூலம் சென்னை விமான நிலையத்தை 20.26 மில்லியன் பயணிகள் பயன்படுத்தியுள்ளனர். அமெரிக்கா, சீனா, ஜப்பான் என்று உலகம் முழுக்க பல நாடுகளுக்கு இங்கிருந்து விமானம் செல்கிறது. சென்னை மீனம்பாக்கம் விமான நிலையம் மிகவும் சிறப்பாக இயங்கி வருகிறது. ஆனால் இன்னும் 10 வருடங்களில் தற்போது சென்னை விமான நிலையம் இருக்கும் பகுதி அதிக நெரிசல் மிகுந்த பகுதியாக மாறும். இதனால் மக்கள் அதிக அவதிக்கு உள்ளாகும் நிலை ஏற்படும். அதேபோல் தற்போது மீனம்பாக்கம் விமான நிலையத்திற்கு அதிக அளவில் விமானங்கள் வந்து செல்கிறது. இதனால் விமான போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டுள்ளது.

இதை சமாளிக்கும் வகையில் சென்னைக்கு கொஞ்சம் வெளியே விமான நிலையம் அமைக்க நிலம் தேடி வந்தனர். அதன்படி காஞ்சிபுரம் - அரக்கோணம் அருகே இருக்கும் பரந்தூர், மாண்டூர் ஆகிய இடங்கள் ஆலோசிக்கப்பட்டது. கடைசியில் தற்போது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர் தேர்வு செய்யப்பட்டுள்ளது. மீனம்பாக்கத்தில் இருந்து இந்த பரந்தூர் 70 கிமீ தொலையில் இருக்கிறது. மொத்தம் இந்த விமான நிலையம் 3800 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட உள்ளதாக முதலில் திட்டமிடப்பட்டது. தமிழக அரசு சார்பாக இந்த நிலம் வழங்கப்படுகிறது.

அவுட்டர் ரிங் ரோடு

தமிழ்நாடு சாலை மேம்பாட்டுக் கழகம் (TNRDC) சென்னை சிங்கப்பெருமாள் கோயிலில் இருந்து பூஞ்சேரி (மாமல்லபுரம் அருகே) வரையிலான சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு பிரிவு 5க்கு நிலம் கையகப்படுத்துதல், மறுவாழ்வு மற்றும் மீள்குடியேற்றம் ஆகிய பணிகளை செய்ய ஆலோசகர்களை நியமிப்பதற்கான டெண்டர்களை வெளியிட்டு உள்ளது.

எண்ணூர் துறைமுகம் மாமல்லபுரத்தில் இருந்து 133 கிமீ நீளமுள்ள சென்னை பெரிஃபெரல் ரிங் ரோட்டின் பெரும்பகுதி 2025 ஆம் ஆண்டு இறுதிக்குள் முடிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது. இதற்காக முக்கியமான சில இடங்களில் நிலம் கையகப்படுத்தும் பணிகள் நடந்து வந்த நிலையில் அந்த பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டி உள்ளன.

தமிழ்நாடு மாநில நெடுஞ்சாலை துறையால் 132.87 கிமீ தூரத்திற்கு இந்த சாலை கட்டப்பட உள்ளது. சென்னை பெரிஃபெரல் ரிங் ரோடு (CPRR) என்பது, எண்ணூர் துறைமுகம் - மகாபலிபுரத்தை இணைக்கும் வகையில் தமிழ்நாட்டில் 10 வழி அணுகல் கட்டுப்பாட்டு விரைவுச் சாலையாகும். காட்டுப்பள்ளி வரை இந்த சாலை அமைக்கப்படுகிறது.

5 பிரிவுகளைக் கொண்ட இந்த புதிய கிரீன்ஃபீல்ட் எக்ஸ்பிரஸ்வே சென்னையின் 4வது ரிங் ரோடாக இருக்கும். சிங்கபெருமாள்கோயில், ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர், தாமரைப்பாக்கம், பெரியபாளையம், புதுவொயல், காட்டுப்பள்ளி ஆகிய நகரங்களை இணைக்கும் வகையில் ரூ.12,301 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படும்.

இந்த விரைவுச்சாலை கட்டுமானத்திற்கு 2025 ஆம் ஆண்டு காலக்கெடு நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது. NHAI இன் கட்டுப்பாட்டின் கீழ் கட்டுமானத்தில் உள்ள பெங்களூரு சென்னை விரைவுச்சாலை மற்றும் சித்தூர் - தச்சூர் விரைவுச்சாலை திட்டங்களுடன் இது இணைக்கப்படும். அதன் விரிவான திட்ட அறிக்கை (DPR) ஏற்கனவே தயாரிக்கப்பட்டுவிட்டது.

ஈசிஆர் சாலை

சென்னையிலுள்ள ECR இல் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையிலான உயர்மட்ட வழித்தடத்தை அமைப்பதற்கான இறுதி டிபிஆர் தயாராகி வருகிறது.

பட்ஜெட் கூட்டத்தொடரில் சென்னையிலுள்ள ECR இல் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரையிலான உயர்மட்ட வழித்தடம் தொடர்பான திட்டம் அறிவிக்கப்பட்டது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூரில் இருந்து உத்தண்டி வரை நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை மாநில நெடுஞ்சாலைத்துறை ஆய்வு மேற்கொண்டு வருகிறது. கிழக்கு கடற்கரை சாலையில் திருவான்மியூர் மற்றும் உத்தண்டி இடையேயான 14.6 கி.மீ., தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல் அதிகமாக உள்ளது.

இங்கே இரண்டு அடுக்கு பாலம் அமைக்கப்பட உள்ளது. முதல் பாலம் ஒரு வழி பாதையாக இருக்கும். அதற்கு மேலே உள்ள பாலம் எதிர் திசையில் ஒரு வழி பாதையாக செயல்படும். இங்கே நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டு, நான்கு வழிச்சாலை அமைக்கும் சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்வதற்கான பணிகள் இந்த ஆண்டில் மேற்கொள்ளப்படும்.

சென்னையில் அடுத்த 4-5 வருடங்களில் மேற்கினடா பகுதிகளில் மிகப்பெரிய அளவில் மாற்றங்கள் நடக்க உள்ளன. மெட்ரோ தொடங்கி ஏர்போர்ட் வரை பல முக்கியமான மாற்றங்கள் நடக்க உள்ளன. இந்த பகுதிகளில் வரும் வருடங்களில் நிலத்தின் மதிப்பு பெரிய அளவில் உயரும் வாய்ப்புகள் உள்ளன.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+