கவனம்! தீபாவளிக்காக பட்டாசு வாங்கி வீட்டுக்கு கொண்டு செல்ல போறீங்களா? இதை முதல்ல படிங்க!
சென்னை: தீபாவளிக்காக நீங்கள் பட்டாசு வாங்கி செல்ல போகிறீர்கள் என்றால் முதலில் இதை படித்து விடுங்கள்!
தீபாவளியை முன்னிட்டு பலரும் சொந்த ஊர்களுக்கு செல்ல தொடங்கி உள்ளனர். சென்னை, கோயம்புத்தூர் உள்ளிட்ட பெருநகரங்களில் வேலை பார்க்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு தீபாவளி மற்றும் விடுமுறையை முன்னிட்டு செல்ல தொடங்கி உள்ளனர்.
சனி , ஞாயிறு விடுமுறையும் தீபாவளியோடு சேர்த்து வருகிறது. இதனால் மக்கள் இந்த முறை அதிக அளவில் வீடுகளுக்கும், சொந்த ஊர்களுக்கும் செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பட்டாசு
இதன் காரணமாக தமிழ்நாட்டில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. தினசரி இயக்கப்படும் 2100 பேருந்துகளுடன் 4218 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. 3 நாட்களில் மொத்தமாக 16,888 பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளன. பொதுவாக தீபாவளி என்றால் மக்கள் பலர் தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்லும் போது புதிய உடை, சுவீட்ஸ் வாங்கி செல்வது வழக்கம். தீபாவளி பலகாரங்களை இவர்கள் வாங்கி செல்வார்கள்.

தீபாவளி
அதேபோல் பலர் பட்டாசுகளையும் வாங்கி வீட்டிற்கு எடுத்து செல்வார்கள். இப்படி பட்டாசுகளை ஊருக்கு எடுத்து செல்லும் போது மிகவும் கவனமாக எடுத்து செல்ல வேண்டும். பொதுவாக பேருந்துகளில் பட்டாசுகளை எடுத்து செல்வது சட்டப்படி குற்றம். பட்டாசுகளை பேருந்துகளில் எடுத்து செல்ல அனுமதி கிடையாது என்றாலும் மக்கள் பல வருடங்களாக பட்டாசுகளை எடுத்து சென்று வருகின்றனர். ஒருவேளை நீங்கள் இப்படி எடுத்து சென்றால் அது சட்டப்படி தவறு.

ரூல்ஸ் என்ன?
அப்படியே மீறி எடுத்து சென்றாலும், அதை மிக கவனமாக தரையில் வைக்காமல், அந்த பையை கையிலேயே வைத்து இருப்பதே சரியானது. பேருந்து சூடு காரணமாக பட்டாசுகள் வெடிக்கும் அபாயம் உள்ளது. உங்களுக்கு சொந்தமாக கார் இருக்கும் பட்சத்தில் பட்டாசுகளை பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியும். இன்னொரு பக்கம் ரயிலில் பட்டாசுகளை கொண்டு செல்ல தடை உள்ளது. பேருந்துகளில் கூட சோதனைகள் செய்யப்படுவது இல்லை.

சோதனை
ஆனால் ரயில்களில் சோதனைகள் அடிக்கடி செய்யப்படும். இதற்கான கண்காணிப்பு பணிகளை போலீசார் செய்து வருகின்றனர். ரயில்வே பாதுகாப்பு படை மற்றும் ரயில்வே போலீஸ் மூலம் சென்னை ரயில்வே நிலையங்களில் இதற்காக சிறப்பு சோதனை செய்யப்பட்டு வருகிறது. பயணிகள் கொண்டு செல்லும் பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. பார்சல் மூலமாகவும் பட்டாசுகளை அனுப்ப தடை விதிக்கப்பட்டு உள்ளது.

சென்னை
சென்னையில் மட்டும் 470 க்கும் அதிகமான ரயில்வே போலீசார் இதற்காக பணியில் களமிறக்கப்பட்டு உள்ளனர். திருச்சியில் 380 ரயில்வே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு உள்ளனர். சென்னை, கோவை, சேலம், சிவகாசி உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவில் சோதனைகள் செய்யப்பட்டு வருகின்றன. பைகளில் பட்டாசு வைத்து கொண்டு செல்லும் நபர்களை பிடித்து அவர்களிடம் இருந்து பட்டாசுகள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இது போன்ற சம்பவங்களை தடுக்க.. வெளியூரில் பட்டாசு வாங்காமல் சொந்த ஊரில் பட்டாசு வாங்குவதே சரியான முறையாக இருக்கும்.












Click it and Unblock the Notifications