போன்ல யாரு.. சந்தியா மீது சந்தேகம்.. நைஸாக பேச்சு கொடுத்த கணவர்.. இறுதியில் நடந்த பயங்கரம்..!
சந்தேக புத்தியால் மனைவியை கத்தியால் குத்தி விட்டார் கணவன்
சென்னை: காதல் மனைவியை கத்தியால் குத்திய சந்தேக கணவனை போலீசார் கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தை சேர்ந்தவர் சவுந்தர்.. 27 வயதாகிறது.. செக்யூரிட்டியாக வேலை செய்து வந்தார். இவரது மனைவி பெயர் சந்தியா.. 23 வயதாகிறது.
கடந்த 3 வருடங்களுக்கு முன்பு சந்தியாவை அதிதீவிரமாக காதலித்து கல்யாணம் செய்து கொண்டார்.. ஆரம்பத்தில் சந்தோஷமாக சென்று கொண்டிருந்த இவர்களின் திருமண வாழ்க்கையில் திடீரென சந்தேக பேய் நுழைந்துவிட்டது.

காதல் மனைவி
இதனால், மனைவியிடம் இதுதொடர்பாக தகராறுகளை செய்து கொண்டே இருந்தார் சவுந்தர்.. ஒருகட்டத்தில் இவர்களுக்குள் ஏற்பட்ட பிரச்சனை அதிகமாகிவிடவும், கணவனை விட்டு பிரிந்தார் சந்தியா.. கடந்த ஒரு வருடமாகவே இருவருமே பிரிந்து வாழ்கின்றனர்... சந்தியாவின் தாய் வீடு, சென்னை ராமாபுரத்தில் உள்ளது.. அதனால், அம்மா வீட்டிலேயே தங்கி, பாடியில் உள்ள தனியார் கம்பெனியில் வேலை செய்து வருகிறார் சந்தியா.

மனைவி
இந்நிலையில், வேலைமுடித்துவிட்டு சம்பவத்தன்று இரவு சந்தியா, செல்போனில் பேசியபடியே வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சந்தியாவை வழிமறித்த சவுந்தர் "யாருடன் போனில் பேசுகிறாய்" என்று கேட்டு சந்தியாவின் செல்போனை பறிக்க முயன்றார்... தொடர்ந்து சந்தியாவிடம் பேச்சு கொடுத்தபடி, நடந்து வந்தார்.. அப்போது சந்தியாவை தன்னுடன் வருமாறு அழைத்ததாக கூறப்படுகிறது. இதற்கு சந்தியா மறுப்பு தெரிவித்ததாக தெரிகிறது.

கத்திகுத்து
இது இருவருக்கும் இடையில் கடும் வாக்குவாதத்தை ஏற்படுத்தியது.. இதனால் ஆத்திரமடைந்த சவுந்தர் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து சந்தியாவின் வயிறு மற்றும் கழுத்து பகுதிகளில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். வலியால் சந்தியா அலறி கீழே விழவும், அந்த சத்தத்தை கேட்டு அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்து உயிருக்கு போராடி கொண்டிருந்த சந்தியாவை மீட்டு சென்னை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்...

தலைமறைவு
இப்போது சந்தியாவுக்கு தீவிர சிகிச்சை தரப்பட்டு வருகிறது.. எனினும் அவரது நிலைமை சீரியஸாக உள்ளதாக கூறப்படுகிறது.. இதனிடையே இந்த சம்பவம் தொடர்பாக சந்தியா தரப்பில் புகார் அளிக்கப்படவும், ராயலா நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தலைமறைவாக இருந்த சவுந்தரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர். இந்த சம்பவம் பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.












Click it and Unblock the Notifications