கெஸ்ட் ஹவுஸில் சிக்கிய மனைவி.. கணவரை வேறு பெண்கள் பார்த்தாலே கொந்தளிப்பாராம்! ஆனால் நடந்ததே வேற
சென்னை: தன்னுடைய கணவரை வேறு பெண்கள் யாராவது பார்த்தால், கொந்தளித்து விடுவாராம் இந்த பெண்.. யாராவது என்னுடைய கணவரை தவறான நோக்கத்தில் பார்த்தால் சும்மா விடமாட்டேன் என்றும் வெளிப்படையாகவே பேசி வந்திருக்கிறார். கணவர் மீது அந்த அளவுக்கு உரிமையும், பாசமும் காட்டிய பெண்ணா, இப்படியொரு காரியத்தை செய்து என்று மொத்த பேரும் ஆடிப்போயிருக்கிறார்கள்.. இப்போது திரிவேணிகஞ்சில் இதுதான் பரபரப்பாக பேசப்படுகிறது.
பீகார் மாநிலம் சுபால் மாவட்டம் திரிவேணிகஞ்சை சேர்ந்தவர் ஸ்வப்னா (பெயர் மாற்றப்பட்டுள்ளது).. இவர் ஒரு பியூட்டிஷியன் ஆவார்.. தான் வசிக்கும் பகுதியிலேயே பியூட்டி பார்லர் ஒன்றையும் நடத்தி வருகிறார்.

பியூட்டிஷியன் மனைவி
இவருக்கு திருமணமாகி, கணவர் குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.. ஆனால், தன்னுடைய கணவர் மீது சற்று பொசசிவ்வாக இருப்பாராம் ஸ்வப்னா.. தன்னுடைய கணவரை எந்த பெண்ணும் தவறாக பார்த்துவிடக்கூடாது, அப்படி பார்த்தால் அவர்களை சும்மா விடமாட்டேன் என்று கர்ஜிப்பாராம்.
இந்நிலையில், திரிவேணிகஞ்சில் உள்ள ராணி கெஸ்ட் ஹவுஸில் திருமணமான பெண் ஒருவர், இளைஞர் ஒருவருடன் தங்கியிருப்பதாக அந்தப் பகுதியில் தகவல் வெளியானது.. கெஸ்ட் ஹவுஸில் இருந்த பெண், பியூட்டிஷியன் ஸ்வப்னா என்றும் சொல்லப்பட்டது.. இந்த விஷயம் அவரது குடும்பத்தினருக்கு தெரிய வந்ததும், பெண்ணின் மாமனார் கெஸ்ட் ஹவுஸுக்கு ஓடினார்.. இதனால் அந்தப் பகுதியில் திடீரென பரபரப்பு ஏற்பட்டது.
கெஸ்ட் ஹவுஸ் நபர்
கெஸ்ட் ஹவுஸ் வளாகம் மட்டுமல்லாமல், அருகில் உள்ள முக்கிய சாலை வரைக்கும் கூட்டம் கூடத் துவங்கி விட்டது.. இதனால் என்ன நடக்கிறது என்று தெரியாமல் அப்பகுதி மக்கள் திகைத்தனர்.. இதையடுத்து போலீசாருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து கெஸ்ட் ஹவுஸுக்குள் சென்றனர். அப்போது அந்தப் பெண்ணும் இன்னொரு இளைஞரும் அங்கு இருந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இருவரையும் ஸ்டேஷனுக்கு அழைத்துச் சென்றனர்.
இந்த சம்பவம் சுமார் 3 நாட்களுக்கு முன்பு நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே, பெண்ணிடம் பாண்ட் எழுதி வாங்கிய பிறகு அவரை குடும்பத்தினரிடம் ஒப்படைத்ததாக திரிவேணிகஞ்ச் காவல் நிலைய பொறுப்பாளர் ராக்கேஷ் குமார் தெரிவித்துள்ளார்.
ஒப்படைத்த போலீஸ்
இந்த சம்பவம் தொடர்பான வீடியோவும் சமூக வலைதளங்களில் பரவி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் அந்த வீடியோவின் உண்மைத்தன்மையை தனியாக உறுதி செய்ய முடியவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
ஆனால் அந்தப் பெண்ணுக்கும் அந்த இளைஞருக்கும் என்ன தொடர்பு? எப்படி தொடர்பு ஏற்பட்டது என்பது தெளிவாக தெரியவில்லை. அவர்கள் ஏன் கெஸ்ட் ஹவுஸில் தங்கியிருந்தார்கள் என்பதும் முழுமையாக வெளியாகவில்லை.
இருந்தாலும், கணவர் விஷயத்தில் இவ்வளவு கண்டிப்பும், கெடுபிடியும் காட்டியதாக சொல்லப்படும் பெண்ணே இன்னொரு இளைஞருடன் கெஸ்ட் ஹவுஸில் இருந்ததாக தகவல் வெளியானது எப்படி? என்ற கேள்விதான் இப்போது திரிவேணிகஞ்சில் பரபரப்பாக பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications
