கணவனை கொன்று.. பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கிய மனைவி.. இப்படி செய்யலாமா அனுசுயா!
கணவனை கொன்ற மனைவி உட்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்
Recommended Video
சென்னை: அனுசுயா சுட்ட தோசையை.. ஆசை ஆசையாய் சாப்பிட்ட கணவன் சுரேஷ்.. பரலோகமே போய் சேர்ந்துவிட்டார். தோசையில் தூக்க மாத்திரையை கலந்து தந்ததே மனைவி அனுசுயாதான்! கணவனை கொன்று பிணத்துக்கு பக்கத்துலயே விடிய விடிய தூங்கி உள்ளார் இந்த மனைவி!
புழல் பகுதியில் வசித்து வந்தவர் சுரேஷ். 5 வருஷத்துக்கு முன்னாடி விழுப்புரத்தில் நடந்த கல்யாணத்தில் கலந்து கொள்ள போனார்.
அங்கேதான் அனுசுயாவை முதன்முதலில் பார்த்தார். கல்யாண மண்டபத்திலேயே 2 பேருக்கும் லவ் ஆரம்பமானது. வீட்டில் வந்து சொல்லவும், இரு தரப்பு பெரியவர்களும் இவர்களுக்கு கல்யாணம் செய்து வைத்தனர். புழல் பகுதியில் அனுசுயாவுடன் வீடு எடுத்து வாழ ஆரம்பித்தார். இவர்களுக்கு 4 வயதில் லோகேஷ் என்ற மகன் இருக்கிறான்.

கறிக்கடைக்காரர்
ஆனால் சுரேஷூக்கு மனைவி மீது சந்தேகம் வந்துள்ளது. இதற்கு காரணம், சுரேஷ் அதே பகுதியில் உள்ள கறிக்கடையில் வேலை செய்து வருவதுதான். அனுசுயாவோ டிகிரி முடித்தவர். ஒரு மெடிக்கல் ஷாப்பில் வேலை செய்கிறார். நாள் ஆக ஆக அனுசுயா மீது சுரேஷுக்கு சந்தேகம் வந்தது. அனுசுயா யாரிடமாவது போன் பேசினால்கூட அது சுரேஷூக்கு பிடிக்காமல் சண்டை போட்டுள்ளார்.

முரசொலி மாறன்
இதனால் ஆத்திரமும், மனவேதனையும் அனுசுயா கணவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். அதற்காக தன் ஊரை சேர்ந்த தன்னுடைய நண்பன் முரசொலி மாறனிடம் இதை பற்றி ஐடியா கேட்டார். அவரும் தூக்க மாத்திரை கலந்து சாகடிக்க ஐடியா தந்தார்.

தோசை மாவு
அதன்படி, மெடிக்கல் ஷாப்பில் இருந்து அனுசுயா தூக்க மாத்திரை எடுத்து வந்தார். நன்றாக பொடி செய்து வைத்து கொண்டார். அதனை தோசை மாவில் கலந்து.. சுரேஷூக்கு சுடச்சுட தோசை சுட்டு போட்டார். அதனை சாப்பிட்ட சுரேஷ் தூங்க போய்விட்டார். இரவு நேரத்தில் முரசொலி மாறனை வீட்டுக்கு வரவழைத்த அனுசுயா, மயங்கி கிடந்த சுரேஷை கொலை செய்தனர்.

பிணம்
சுரேஷின் கால்களை முரசொலி மாறன் பிடித்து கொள்ள... அனுசுயா தன் துப்பட்டாவால் சுரேஷின் கழுத்தை நெரிக்க.. அங்கேயே துடிதுடிக்க ஒரு மரணம் நடந்து முடிந்தது. இதற்கு பிறகு முரசொலி மாறன் தன் வீட்டுக்கு செல்ல, பிணத்துக்கு பக்கத்திலேயே ஒன்னுமே தெரியாததுபோல தூங்க ஆரம்பித்துவிட்டார் அனுசுயா.

விசாரணை
மறுநாள் காலை, அளவுக்கு அதிகமாக தண்ணி அடித்ததால், கணவர் இறந்துவிட்டார் என்று அனுசுயா ஒப்பாரி வைக்கவும்தான் அக்கம்பக்கத்தினருக்கு தெரியவந்தது. தகவலறிந்து புழல் போலீசார் வந்தனர். அனுசுயா சொன்ன கதையையே போலீசாரிடமும் சொல்லி கதறினார். இருந்தாலும் நம் போலீசாரின் கண்கள் துழாவின.. அப்போதுதான் சுரேஷின் கழுத்தில் கிடந்த லேசான காயம் கண்ணில் பட்டது.

2 பேர் கைது
கொஞ்ச நேரத்திற்கெல்லாம் அனுசுயா போலீசாரின் கிடுக்கிப்பிடி விசாரணைக்குள் வந்துவிட்டார். பிறகென்ன.. வேறு வழியில்லாமல் கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். தினமும் சித்ரவதை.. தினமும் தண்ணி.. தினமும் சந்தேகம்.. அதனால்தான் நண்பர் முரசொலி மாறனை உதவிக்கு வைத்து கொலை செய்ததாக சொன்னார். இதையடுத்து, அனுசுயா, முரசொலி மாறனும் கைதாகி ஜெயிலில் உள்ளனர்!


Click it and Unblock the Notifications
