செங்கல்பட்டில் லஞ்சம்.. கணவன் தவெகவிலிருந்து கடந்த மாதம் நீக்கம்.. மனைவிக்கு இந்த மாதம் பொறுப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: கடந்த மாதம் செங்கல்பட்டு மாவட்டம் மாம்பாக்கம் ஊராட்சி தலைவர் வீராசாமி லஞ்சம் வாங்கிய புகாரில் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அவர் ஒப்பந்ததாரரிடம் ரூ.1.3 லட்சம் லஞ்சம் வாங்கும் வீடியோ வெளியான நிலையில்ய, கட்சியில் இருந்து இருந்து நீக்கப்படுவதாக தவெக தலைமை அறிவித்தது. ஆனால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவீராசாமியின் மனைவிக்கு தற்போது தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது.

செங்கல்பட்டு மாவட்டம், திருப்போரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்டது மாம்பாக்கம் ஊராட்சி. இங்கு ஊராட்சி மன்ற தலைவராக தவெகவில் இருந்த வீராசாமி இருந்து வருகிறார். அண்மையில் மாம்பாக்கம் ஊராட்சியில் ஒப்பந்ததாரர் நவீன் என்பவர் சிமெண்ட் சாலை அமைப்பதற்காக 9.80 லட்ச ரூபாய் மதிப்பீட்டில் ஒப்பந்தம் போட்டு சாலை பணிகளையும் முடித்திருக்கிறார்.

Wife of Veerasamy who was arrested for accepting a bribe in Chengalpattu given a post in TVK

சாலை பணிகள் முடிந்தும் பில் பாஸ் செய்யாமல் நிலுவையிலேயே இருந்து வந்துள்ளது. இதையடுத்து ஓப்பந்ததாரர் நவீன், தவெக ஊராட்சி மன்ற தலைவரும், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட இணை செயலாளருமான வீரா (எ) வீராசாமியை நாடி பில்லை விடுவிப்பது தொடர்பாக பேசினாராம். அப்போது, வீராசாமி அவரிடம் 2 லட்ச ரூபாய் லஞ்சம் கேட்டு பின்னர் ஒரு லட்சத்து என்பதாயிரத்துக்கு இறங்கி வந்ததாக கூறப்படுகிறது.

அதையும் நவீன், வீராசாமிக்கு இரண்டு முறை தலா 50,000-மாக ஜிபே மூலம் அனுப்பினார். மீதி முப்பதாயிரத்தை நவீன் நேரில் சென்று வீராசாமி அலுவலகத்தில் கொடுத்த வீடியோ தான் சமூக வலைத்தளங்களில் வெளியாகியது. இந்த வீடியோ வைரலான நிலையில், இதுதான் லஞ்ச ஊழலற்ற தவெக அரசா என்று விஜய் தலைமையிலான தவெக அரசை கடுமையாக விமர்சிக்க தொடங்கினார்கள்.

இதனிடையே ஊராட்சி மன்ற தலைவர் வீராசாமி, கவுன்சிலரும் திமுகவினரும் சேர்ந்து தனக்கெதிராக சதி செய்வதாகவும், தன்னுடைய பணத்தை தான் நவீன் திருப்பிக் கொடுத்ததாகவும் செய்தியாளர்காளிடம் விளக்கம் அளித்தார். ஆனால் தவெக தலைமை அந்த விளக்கத்தை ஏற்கவில்லை...

மாம்பாக்கம் ஊராட்சிமன்ற தலைவர் வீராசாமியை கடந்த மாதம் கட்சியை வீட்டு நீக்கியது தவெக தலைமை. இதுகுறித்து செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட செயலாளர் தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், "கட்சிக்கு களங்கம் விளைவிக்கும் வகையில் நடந்துகொண்டதால் அடிப்படை உறுப்பினர் உட்பட அனைத்து பொறுப்புகளிலிருந்து வீராசாமி நீக்கப்படுகிறார்" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இது ஒருபுறம் எனில், வீராசாமி மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. அவர் சிறையில் அடைக்கப்பட்டார். 15 நாட்களுக்கு பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.

இந்நிலையில், வீராசாமி நீக்கப்பட்ட ஒரு மாதத்தில் அவரது மனைவிக்கு தவெகவில் பொறுப்பு வழங்கப்பட்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. ஹேமாவதிக்கு தவெக மாவட்ட கழக இணை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+