"பாலியல்".. உறவை தவிர்த்த கணவன்.. சென்னை கோர்ட்டுக்கு ஓடிய மனைவி..ஜட்ஜ் தந்த அதிரடி தீர்ப்பை பாருங்க
சென்னை: பாலியல் உறவு குறித்த வழக்கு ஒன்று சென்னை சைதாப்பேடடை நீதிமன்றத்துக்கு வந்துள்ளது.. இந்த வழக்கை தொடுத்திருப்பது, பாதிக்கப்பட்ட மனைவி ஆவார்.. வழக்கை விசாரித்த நீதிபதி அதிரடியாக உத்தரவு பிறப்பித்துள்ளார்.. இது பலரது கவனத்தை பெற்று வருகிறது.
4 மாதங்களுக்கு முன்பு வழக்கின் தீர்ப்பு ஒன்று வெளியாகி பரபரப்பை தந்திருந்தது.. அதாவது, டெல்லியில் ஒரு தம்பதியிடையே பாலியல் உறவு தொடர்பாக பிரச்சனை ஏற்பட்டதால், கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்துள்ளது.. கல்யாணமானது முதலே, பாலுறவை மனைவி தவிர்த்துவந்தாராம்.. இதுதான் வழக்கின் சாராம்சம்.

விசாரணை: அதனால், கடந்த 2014ம் ஆண்டு, அந்த கணவர் கோர்ட்டுக்கு போய்விட்டார். தனக்கு விவாகரத்து வேண்டும் என்று கேட்டு வழக்கும் தாக்கல் செய்தார்.. இது தொடர்பான விசாரணை நடந்தபோது, மனைவியின் தரப்பில் சில விளக்கங்கள் தரப்பட்டது.
"பாலுறவு என்றாலே அச்சத்துக்கு ஆளாகும் ஜீனோபோபியா" என்ற நோய் இருப்பதாக வாதாடப்பட்டது.. அத்துடன் கணவருக்கு விவாகரத்து தர முடியாது என்றும் பதில் தரப்பட்டது.
தம்பதியினர்: ஆனால், வழக்கை விசாரித்த டெல்லி குடும்பநல நீதிமன்றத்தின் நீதிபதி விபின் குமார் ராய், மனைவி தரப்பின் வாதத்தை ஏற்கவில்லை. "சுயமாக தன்னுடைய கணவனை முடிவெடுத்த பெண், திருமணத்துக்கு முன்பாக 11 மாதங்கள் பழகி தெளிந்த பிறகும், திருமணமான பிறகு வேண்டுமென்றே பாலுறவை தவிர்த்திருக்கிறார்.. இளம் தம்பதியர் மத்தியில் குடும்ப வாழ்க்கையில் பாலுறவு தவிர்க்க முடியாதது.. பாலுறவு என்பது இல்லற வாழ்க்கையின் அடித்தளங்களில் ஒன்று.
கணவன் - மனைவி இருவரில் ஒருவர் மற்றவருக்கு அதனை மறுப்பது மனரீதியிலான கொடுமை செய்வதற்கு இணையானது. மகிழ்வான மற்றும் நிறைவான குடும்ப வாழ்க்கைக்கு அவசியமான பாலுறவை வேண்டுமென்றே தவிர்ப்பது குடும்ப அமைதியை குலைக்கும்" என்று கூறி, இருதரப்பு வாதங்களின் முடிவில், கணவர் தரப்பில் கோரிய விவாகரத்தினை வழங்கி தீர்ப்பு தந்திருந்தார் நீதிபதி.
பாலுறவு: கணவன் - மனைவி இருவரில் ஒருவர், வேண்டுமென்றே பாலுறவைத் தவிர்ப்பது, மனரீதியிலான கொடுமைப்படுத்துவதில் சேரும் என்று வழங்கப்பட்டுள்ள இந்த தீர்ப்பு, பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது.
இப்போது நம்முடைய சென்னையிலும் ஒரு வழக்கில் தீர்ப்பு தரப்பட்டுள்ளது.. இந்த தம்பதிக்கு கடந்த 2016-ல் திருமணம் நடந்துள்ளது.. அப்போது பெங்களூரில், ஒரு வாடகை வீட்டில் வசித்து வந்துள்ளனர்.. கணவருக்கு அளவுக்கு அதிகமான மதுப்பழக்கம் இருந்ததால், நாள்பட்ட நீரிழிவு, கல்லீரல் பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறார்.. இதனால், தம்பதிகளுக்கான உறவில் மேலும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
மெடிக்கல் செக்கப்: இதனால் சந்தேகம் அடைந்து, மருத்துவ சிகிச்சைக்கு வருமாறு மனைவி அழைத்ததாக தெரிகிறது. கணவர் முதலில் மருத்துவ சிகிச்சைக்கு ஒப்புக்கொண்டாலும், பிறகு மறுத்துள்ளார்.. அத்துடன், சென்னையிலுள்ள தன்னுடைய பெற்றோர் வீட்டிற்கும் சென்றுவிட்டாராம்.. அப்போது முதல் மனைவிக்கு டார்ச்சர்கள் ஆரம்பமாகிவிட்டதாம்.
கணவருடைய அம்மா, தன்னுடைய அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, மருமகளை அச்சுறுத்தியதுடன், மகனின் ஆண்மை குறைபாடுகளையும் மறுத்தார்களாம்
துன்புறுத்தல்: இதையடுதது, கணவர் தன்னுடைய பாலியல் தேவையை பூர்த்தி செய்யாமல் இருப்பதாகவும், இது குறித்து கேட்டாலே, தன்னை துன்புறுத்துவதாகவும் குற்றச்சாட்டு கூறி நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்..
திருமணமான ஆரம்ப ஆண்டுகளில் தன்னுடைய மனைவி, இந்த பிரச்சினையை எழுப்பவில்லை, இப்போதுதான் இப்படி நீதிமன்றம் கொண்டு வந்துள்ளதாகவும் கணவர் வாதம் செய்தாலும், அதனையும் மனைவி மறுத்தார்.
பாலியல் தேவை: இறுதியில், இரு தரப்பிலும் விசாரித்த நீதிபதி, "திருமண வாழ்க்கையில் பாலியல் உறவு முக்கிய பங்கு வகிக்கிறது.. ஒரு துணை தனது துணையின் பாலியல் தேவையை பூர்த்தி செய்யும் பொறுப்புடையவர்.. துணைவியின் இந்த அடிப்படைத் தேவையை பூர்த்தி செய்யாதது, இல்லற வாழ்வில் மிகப்பெரிய கொடுமை.. எனவே, கணவர் அந்த பெண்ணுக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்" என்று அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த தீர்ப்பும் பலரது கவனத்தை பெற்று வருகிறது.
-
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்?












Click it and Unblock the Notifications