"சங்கராச்சாரியா"ன்னு நினைப்பா.. இளையராஜாவை போட்டு தாக்கிய ஈவிகேஎஸ்.. திமிறி எழுந்த "சாதி"..கைதாவாரா
ஈவிகேஎஸ் இளங்கோவன் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது
சென்னை: 'இசையமைப்பாளர் இளையராஜா பற்றி, ஜாதி வெறியுடன் பேசிய, தமிழக காங்., முன்னாள் தலைவர் இளங்கோவைனை கைது செய்ய வேண்டும்' என, போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
அம்பேத்கருடன் பிரதமர் மோடியை ஒப்பிட்டு இளையராஜா பேசியிருந்த நிலையில் கண்டனங்களும், எதிர்ப்புகளும் வெடித்தன. இளையராஜா தன்னுடைய பேச்சுக்கு மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் சொல்லி வருகிறார்கள்..
அதேபோல, இளையராஜாவுக்கு ஒருசிலர் ஆதரவும் தெரிவித்து வருகின்றனர். அது அவரது சொந்த கருத்து என்றும் பதிவிட்டு வருகிறார்கள்

இளங்கோவன்
இப்படிப்பட்ட சூழலில், முன்னாள் காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவரும், கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் இளையராஜாவை சரமாரி விமர்சித்திருந்தார்.. ஈரோட்டில் நடந்த கூட்டத்தில் அவர் பேசும்போது, "பணம் வந்துவிட்டால் நீ உயர்சாதி ஆகிவிட முடியாது. தமிழ்நாட்டில் சில அகராதிகள் இருக்கிறாங்க.. கேட்டால் உண்மையிலேயே நான் இசை மன்னன் என்று சொல்லி கொள்கிறார்கள், இசை மன்னன் யார் என்று எல்லோருக்கும் தெரியும். தபேலா எடுத்து அடிக்கிறவர்கள் எல்லாம் இசைஞானி ஆகிவிட முடியாது.

80 வயசாகுது
வறுமையில் சாப்பாட்டுக்கே வழி இல்லாத போது கம்யூனிச சித்தாந்தத்தை ஏற்றுக்கொள்வதும், பணமும் புகழும் வந்தபிறகு தன்னை உயர் சாதி என நினைத்துக் கொள்வதும் என்ன நியாயம். நான் யாரை சொல்றேன்னு உங்களுக்கே தெரியும்.. இளையராஜா வா? வயது 80க்கு மேல் ஆகப்போகிறது கேட்டால் இளையராஜாவாம்.. ஆரம்பத்தில், தொழிலாளர்களின் நலன் குறித்து பாடிய நீ, பணமும் புகழும் வந்தவுடன் மேலும் பணக்காரன் ஆக வேண்டுமென்ற ஆசையில் நீ திடீரென பக்திமான் ஆகிவிட்டாய்... பக்திமான் ஆகலாம் அதனால் தவறு என்று சொல்ல மாட்டேன். அது உங்கள் விருப்பம். உங்கள் விருப்பத்தில் நான் எப்படி தலையிட முடியும்?

அம்பேத்கர்
அது போல எங்கள் விருப்பத்திற்கு நீ மரியாதை கொடு. அதைவிடுத்து அம்பேத்கர் போன்றவர்களுடன் மோடியை ஒப்பிடுவது என்ன நியாயம்? உனக்கு ஒப்பிடவேண்டும் என்று ஆசையிருந்தால், ஹிட்லரோடு மோடியை ஒப்பிடு. முசோலினியோடு மோடியை ஒப்பிடு.. இந்த நாட்டில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவரை ஏன் இப்படி அசிங்கம் செய்கிறீர்கள்?
Recommended Video

சங்கராச்சாரியார்
ஆனால், இந்த நாட்டில் உள்ள தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்காக உழைத்தவர்களை நீங்கள் அசிங்கம் செய்யவேண்டும் என்று நினைத்தால், அதில் என்ன நியாயம் இருக்கிறது? இளையராஜாவிற்கு ஒருமுறை அடிபட்டால் போதாது என்று நினைக்கின்றேன்.பெரியார் திரைப்படத்திற்கு இசையமைக்க மாட்டேன் என்று சொன்னவர்தான் இந்த இளையராஜா, அவர் மனதிற்குள் சங்கராச்சாரியார் என்று நினைப்பு. சங்கராச்சாரியாரையே ஜெயிலுக்குள் தள்ளிய காலம், இந்தக் காலம்" என்று பேசியிருந்தார்.

சீனியர் தலைவர்
இந்த பேச்சுதான் சர்ச்சையை கிளப்பியது.. சாதியை குறிப்பிட்டு பேசியதால், கண்டனங்களும் குவிந்தன.. இவர் மீது பிசிஆர் சட்டம் பாயுமா? என்ற கேள்வியும் எழுந்தது.. ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, யாராக இருந்தாலும் வெளிப்படையாக பேசி பல முறை சர்ச்சையில் சிக்கியவர்.. ஒருமுறை மறைந்த ஜெயலலிதா பற்றியும், பிரதமர் மோடி குறித்தும் மிகவும் அருவருக்கதக்க வார்த்தைகளால் பேசியதை இந்த தமிழகமே கேட்டது.. சில சமயம் முகம் சுளிக்கும் அளவுக்கும் இவரது விமர்சனங்கள் எல்லை மீறிவிடுவதும் உண்டு.

இளையராஜா
சொல்ல வரும் கருத்தும், பேச்சும், நிலைப்பாடும், சரியே என்றாலும், தடித்த வார்த்தைகள் காரணமாக பல சமயங்களில் இளங்கோவன் சிக்கி கொண்டுள்ளார்..எதிர்ப்பு கருத்துக்கள் இருந்தாலும், அரசியல் நாகரீகம் மிகவும் அவசியம் அல்லவா? மேடையில் கி.வீரமணி போன்றோர் இருக்கும்போதே இளங்கோவன் இப்படி பேசியிருக்கிறாரே? என்ற வருத்தங்களும் எழுந்தன.. இதைத்தான் டைரக்டர் ரஞ்சித் ட்வீட் போட்டு கண்டித்திருந்தார்.

ஈவிகேஎஸ் பேச்சு
"பணமும் புகழும் வந்த உடன் தங்களை உயர்ந்த ஜாதி என நினைத்துக் கொள்கிறார்களே' என ஈவிகேஎஸ் இளங்கோவன் விமர்சிப்பதும் அதற்கு கி. வீரமணி கைதட்டுவதும் இதுதான் இளையராஜாவை விமர்சிக்கின்ற முறையா..? இந்த சாதிய மனநிலை அதுவும் பெரியார் மேடையில் நிகழ்ந்தது பெரிதும் கண்டிக்கத்தக்கது" என்று பா.ரஞ்சித் விமர்சித்திருந்தார்.

அம்பேத்கர்
இந்நிலையில் எதிர்பார்த்ததுபோலவே, இளங்கோவன் மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது.. சென்னை அடையாறை சேர்ந்தவர் மூர்த்தி.. இவர், போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்,.. அந்த புகாரில், "இசையமைப்பாளர் இளையராஜா, பிரதமர் மோடி குறித்த புத்தகம் ஒன்றுக்கு முன்னுரிமை எழுதி இருந்தார். அதில், மோடியை அம்பேத்கருடன் ஒப்பிட்டு கருத்து தெரிவித்துள்ளார்.

தபேலா
இதை விமர்சனம் செய்வது போல, தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவர் இளங்கோவன், ஈரோடு மாவட்டத்தில், பொதுமேடையில் பேசியுள்ளார்... 'தபேலா எடுத்து அடிக்கிறவன் எல்லாம் இசையமைப்பாளர் ஆகிவிட முடியாது. உணவுக்கு வழியில்லாமல் வறுமை கோட்டிற்கு கீழ் இருந்த நேரத்தில், கம்யூனிச சிந்தனைகளை ஏற்றுக் கொண்டவர்கள், பணமும், புகழும் வந்தவுடன், நாங்கள் உயர்ந்த ஜாதி என்கின்றரே... இது என்ன நியாயம்? வயது 80 ஆகிறது.. ராஜாவாம், இளையராஜாவாம்...' என்று பேசியுள்ளார்.

புகார்
இந்த, வீடியோவை சமூகவலைதளத்தில் பார்த்து, அச்சமும், நடுக்கமும் அடைந்தேன்... இளையராஜாவை, இளங்கோவன் ஜாதிய வன்மத்துடன் பேசியுள்ளார். இரு பிரிவினரிடையே மோதலை ஏற்படுத்தி, கலவரத்தை துாண்டக்கூடியது. இவரை, எஸ்.சி., - எஸ்.சி., வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். இவ்வாறு புகாரில் கூறப்பட்டுள்ளது.. இது தொடர்பாக காவல்துறை என்ன நடவடிக்கை எடுக்க போகிறது என்று தெரியவில்லை.. பார்ப்போம்.
-
ஆப்ஜித் தீப்கே கைதானால்.. கரப்பான் பூச்சி ஜனதா போராட்டத்திற்கு ஆதரவளித்த சோனம் வாங்சுக் வார்னிங் -
திருப்பரங்குன்றத்தில் தீபம்.. முதல்வர் விஜய் ஒப்புதல் கொடுப்பார்னு நம்புறோம்.. இந்து முன்னணி! -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
மம்தாவிற்காக எம்பி பதவியை ராஜினாமா செய்யும் யூசுப் பதான்? பேச்சுவார்த்தையில் சவுரவ் கங்குலி? பின்னணி -
எல்லாமே முக்கிய தலைகள் ஆச்சே.. விஜய் முன்னிலையில்.. மொத்தமாக தவெகவில் இணையும் அதிமுக தலைவர்கள்! -
கோவை விளாங்குறிச்சி - தண்ணீர் பந்தல் சந்திப்பு மொத்தமாக மாறுகிறது.. மக்களின் ஏக்கம் நிறைவேறுது -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
வைகை அணையை இப்படி ஒரு கோலத்தில் தேனி பார்த்தது இல்லை.. மீன்களே வாழ முடியாத நிலை -
திருவண்ணாமலை செய்யாறு வீடுகளில் மின்சார மீட்டர்கள் பழுதுக்கு அணில் காரணம்.. மின்சார வாரியம் பதில் -
Ration Card: முடிவுக்கு வருகிறதா தாயுமானவர் திட்டம்..? ஜூலை முதல் ரேஷன் பொருட்கள் வீடு வீடாக வராது!












Click it and Unblock the Notifications