சாய் பல்லவியின் "ஜெய்ஸ்ரீராம்".. திடீர்னு வந்த விஜயசாந்தி.. எதிரே திவ்யா.. போலீசுக்கு ஓடின அகில்..?
சாய்பல்லவி மீது போலீசில் புகார் தரப்பட்டுள்ளது பரபரப்பை கூட்டி வருகிறது
சென்னை: நடிகை சாய்பல்லவியின் பேச்சுக்கு எதிர்ப்புகள் கூடி வரும் நிலையில், போலீஸ் வரை புகாரும் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் ஒரு யூடியூப் சேனல் ஒன்றிற்கு சாய் பல்லவி பேட்டி தந்திருந்தார்.. ஒரு படத்தில் நக்சல் தலைவனான ராணா டகுபதியை காதலிக்கும் பெண்ணாக சாய்பல்லவி நடித்துள்ளார்.
எனவே, வன்முறை எழுச்சியை ஊக்குவிக்கும் ஒரு அரசியல் சித்தாந்தத்திற்கு ஆதரவு தெரிவிக்கிறீர்களா? என்று அந்த பேட்டியில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஜெய்ஸ்ரீராம்
அப்போது சாய்பல்லவி, கடந்த மார்ச் மாதம் வெளியான 'காஷ்மீர் பைல்ஸ்' திரைப்படம் குறித்த தன்னுடைய கண்ணோட்டத்தை வெளிப்படுத்தினர்... அந்த காஷ்மீர் பண்டிட்கள் அந்தக் காலக்கட்டத்தில் படுகொலை செய்யப்பட்டதை காட்சிப்படுத்தியிருப்பார்கள்.. அது வன்முறை என்றால், பசுவை அழைத்து செல்லும் இஸ்லாமியர்கள் மீது தாக்குதல் நடத்திவிட்டு 'ஜெய் ஸ்ரீ ராம்' என்று கோஷம் எழுப்பிச் சென்றதும் தவறு தான் என்று குறிப்பிட்டிருந்தார்.. மேலும், இதற்கும் காஷ்மீரில் நடப்பதற்கும் என்ன வித்தியாசம் இருக்க முடியும் என்றும் கேள்வியை எழுப்பியிருந்தார்.

சாய்பல்லவி துணிச்சல்
ஒடுக்கப்படும் மக்களுக்கு துணையாக நாம் இருக்க வேண்டும், காஷ்மீரி இந்து பண்டிட்கள் கொலை செய்யப்படுவதற்கு குரல் கொடுக்கும் மக்கள் இதற்கும் குரல் கொடுக்க வேண்டும் என்றும் சாய்பல்லவி அந்த பேட்டியில் மேலும் கூறியிருந்தது, பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் உண்டுபண்ணியது.. சாய்பல்லவி இந்தக் கருத்துக்கு பரவலான எதிர்ப்பும். ஆதரவும் என சோஷியல் மீடியாவில் கருத்துக்கள் குவிந்தன.. ஒருசிலர், சாய் பல்லவி துணிச்சலாக பேசுகிறார், அவர் சொன்னதில் என்ன தப்பு இருக்கு?" என்று கேட்டு ஆதரவு தந்தனர்.

சாய்பல்லவி
ஆனால், இந்துத்துவா ஆதரவாளர்கள் மற்றும் பாஜகவினரோ, சாய்பல்லவிக்கு கடுமையான எதிர்ப்பை பதிவிட்டனர்.. சாய்பல்லவி பேசியது தவறு.. இரண்டு சம்பவங்களும் வேறு வேறு.. இரண்டையும் ஒப்பிட்டு பேச வேண்டிய அவசியம் இல்லை என்று கண்டித்தனர்.. இந்த எதிர்ப்பு இன்னும் வலுப்பெற்றும் வருகிறது.. சாய்பல்லவி, தங்களின் ஜெய் ஸ்ரீராம் கோஷத்தை அவமதித்துவிட்டார், காஷ்மீர் பற்றின வரலாறும், அரசியலும் தெரியாமல் இப்படியெல்லாம் பேசி வருகிறார் என்று சரமாரியாக திட்டி வருகிறார்கள்..

நடிகை மீது புகார்
இப்படிப்பட்ட சூழலில்தான்தான், சாய்பல்லவி மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹைதராபாத்தில் உள்ள சுல்தான் பஜார் போலீசில், வலதுசாரி அமைப்பைச் சேர்ந்த அகில் என்பவர் புகார் ஒன்றை தந்தார்.. அந்த புகாரில், சாய் பல்லவி காஷ்மீர் பயங்கரவாதிகளை, பசு காவலர்களுக்கு சமம் என்று ஒப்பிட்டு பேசியது தவறு என்று குறிப்பிட்டு, அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளார்.. இந்த புகாரின் மீது இதுவரை போலீசார் எப்ஐஆர் எதுவும் பதிவு செய்யவில்லை என்றாலும் சாய் பல்லவிக்கு தொடர்ந்து எதிர்ப்புகள் வலுத்து வருவது குறிப்பிடத்தக்கது.

விஜயசாந்தி
இதனிடையே, நடிகையும், மாநிலங்களவை உறுப்பினருமான விஜயசாந்தி, சாய்பல்லவிக்கு கடுமையான கண்டனம் தெரிவித்துள்ளார்.. பசுக்கள் கொல்லப்படுவதை கேள்வி எழுப்புவதும், காஷ்மீரில் பண்டிதர்கள் கொல்லப்பட்டதும் ஒன்றல்ல. நீ சற்று சிந்தித்து பார்த்தால் உண்மை புரியம்.. ஒரு தாய் தன் மகனை தவறு செய்ததற்காக அடிப்பதும், ஒரு திருடனை திருடியதற்காக அடிப்பதும் ஒன்றா? இந்த பிரச்சனை குறித்து முழுயைமாக தெரியாவிட்டால் கருத்து சொல்லாமல் தள்ளியிருப்பதே சிறந்தது.. பிரபலமானவர்கள் அமைதியாக இருப்பதே நல்லது" என்று கூறியிருந்தார்.

நடிகை திவ்யா
இதற்கு இன்னொரு நடிகையும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான திவ்யா, "இரக்கத்துடன் நடந்து கொள்ளுங்கள், ஒடுக்கப்பட்டவர்களுக்கு பாதுகாப்பு அளியுங்கள் என எல்லா நல்ல மனிதர்களும் சொல்வதைதான் சாய் பல்லவியும் சொல்கிறார் என்று கூறி, அவருக்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்திருந்தார்.. சாய் பல்லவி பேசிய பேச்சு, சினிமா உலகிற்குள்ளேயே மோதலையும், விவாதங்களையும் கிளப்பி விட்டு வருகிறது.
-
வேட்பாளர் அறிவிப்பு இருக்கட்டும்.. இப்படி ஏன் செஞ்சீங்க? எடப்பாடி பழனிசாமி மீது கொந்தளித்த ரரக்கள்! -
ஷாக்கில் சரவணன்! எடப்பாடிக்காக விழுந்து விழுந்து வேலை பார்ப்பாரே அவரா? பாஜக விஐபிகள் மெகா ஸ்கெட்ச் -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
அண்ணாமலை சட்டமன்றம் செல்ல வேண்டும்.. அதுவே என் விருப்பம்.. வானதி சீனிவாசன் சொன்ன வார்த்தை! -
ஜோதிடர் சொன்ன வார்த்தை? நயினார் நாகேந்திரன் நெல்லை தொகுதியில் போட்டியிடாதது ஏன்? பரபரப்பு தகவல் -
கிணத்துக்கடவு தொகுதியை பாஜகவுக்கு ஒதுக்காததால் தொண்டர் பெட்ரோல் ஊற்றி தீக்குளிக்க முயற்சி.. பரபரப்பு -
கோவையை விடுங்க.. மொத்தமாகவே ஏமாந்த பாஜக! அதிமுக மீது உச்சகட்ட அதிருப்தியில் அண்ணாமலை -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
தேர்தல் நேரத்தில் கிளம்பிய பூதம்.. ரூ.4 கோடி பிடிபட்ட வழக்கில் நயினார் நாகேந்திரனை ED விசாரிக்க மனு! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
அதிமுக வேட்பாளர்கள் யார்? 146 வேட்பாளர்களை எப்போது அறிவிப்பார் எடப்பாடி! உச்சகட்ட டென்ஷனில் ர.ர.கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி?












Click it and Unblock the Notifications