சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

ஸ்டாலினுக்கு பிறகு விஜய்யா.. அப்ப உதயநிதி?.. அது ஏன் அப்படி ஒரு "வார்த்தை".. கொதிக்கும் திமுகவினர்

விஜய் பிறந்தநாளுக்கு ஒட்டிய போஸ்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

Google Oneindia Tamil News

சென்னை: முதல்வர் ஸ்டாலினே, நடிகர் விஜய்யை அழைத்து தமிழ்நாட்டின் பொறுப்பை ஒப்படைப்பதுபோல ஒரு போஸ்டர் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது..!

வருடா வருடம் விஜய்க்கு பிறந்த நாள் வரும்போதெல்லாம், ஏதாவது ஒரு பரபரப்பு ஏற்படும்.. விஜய்யின் ரசிகர்களே இப்படி செய்வார்கள்..

போஸ்டரை ஒட்டி, அதில் ஏதாவது கவர்ச்சிகரமான வாசகங்களை சேர்த்து, ஊரெல்லாம் ஒட்டி வருவார்கள். இந்த போஸ்டர்களும் சோஷியல் மீடியாவில் விவாதமாக கிளம்பும்.

ஸ்டெர்லைட்... மரபணு மாற்று விதைகள் வேண்டாம் - மு.க ஸ்டாலினுக்கு விஜய் சேதுபதி, வெற்றிமாறன் கடிதம் ஸ்டெர்லைட்... மரபணு மாற்று விதைகள் வேண்டாம் - மு.க ஸ்டாலினுக்கு விஜய் சேதுபதி, வெற்றிமாறன் கடிதம்

விஜய்

விஜய்

இப்போதும் ஒரு போஸ்டரை ஒட்டி வைத்துள்ளனர் விஜய் மக்கள் இயக்கத்தினர்.. இதில், முதல்வர் ஸ்டாலின், தங்க செங்கோலை விஜய்யிடம் ஒப்படைப்பதுபோல உள்ளது.. பின்னணியில் செங்கோட்டை இருக்கிறது.. "ஏழை, எளிய மக்களுக்கான நல்லாட்சியை வழங்கிட தம்பி வா! தலைமை ஏற்க வா!" என்ற வாசகமும் ஸ்டாலின் சொல்வது போல அச்சிடப்பட்டுள்ளது.

பாஜக

பாஜக

இதுதான் அந்த சர்ச்சைக்கு காரணம்.. விஜய் அரசியலுக்கு வருவதாக ஏற்கனவே பலமுறை பேச்சு எழுந்து எழுந்து அடங்கி உள்ளது.. பாஜகவின் ரெயிடுகள், கெடுபிடிகள் போன்றவற்றில் விஜய் கடந்த காலங்களில் சிக்கினாலும், ஒருவேளை திமுகவில் இணைந்து அதிமுகவுக்கு எதிராக பிரச்சாரம் செய்வார் என்று கடந்த முறை தேர்தலில் எதிர்பார்க்கப்பட்டது.. இதற்கு காரணம், திமுகவுடன் ஆரம்பத்தில் இருந்தே விஜய் நல்லிணக்கத்தை பேணி வருகிறார்..

 ஜெயலலிதா

ஜெயலலிதா

ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது, தன் பட விவகாரங்களில் சிக்கல் வந்தபோதும், திமுகவுடன் இதுவரை எந்த சிக்கலும் விஜய்க்கு ஏற்பட்டதில்லை.. தன்னுடைய அப்பா எஸ்ஏ சந்திரசேகர், சொந்தமாக கட்சி ஆரம்பித்தும் விஜய் அதில் இணையவில்லை.. தனக்கும் அந்த கட்சிக்கும் சம்பந்தமே இல்லை என்று சொன்னபோதுகூட, ஒருவேளை திமுகவில் விஜய் இணைய போகிறாரோ என்ற சந்தேகத்தையும் ரசிகர்கள் கிளப்பி இருந்தனர். இப்படி தொடர்ந்து திமுகவுடனேயே விஜய் தொடர்புபடுத்தி பார்க்கப்பட்டு வருகிறார்.

 வருங்கால முதல்வரே

வருங்கால முதல்வரே

வழக்கமாக பிறந்த நாள் என்றால், "வருங்கால முதல்வரே.. எங்களின் எதிர்கால நாயகனே".. இப்படித்தான் போஸ்டர்களை ஒட்டி தங்கள் விருப்பத்தை தெரிவிப்பார்கள்.. ஆனால், இந்த முறை முதல்வர் ஸ்டாலினே, விஜய்யை அழைப்பதுபோல உள்ளது.. திமுகவில் விஜய் இணைய வேண்டும் என்பதே ரசிகர்களின் விருப்பமாகவும் யூகிக்க முடிகிறது..

 அழைப்பு?

அழைப்பு?

இது ஒருபக்கம் அவர்களின் மகிழ்ச்சி, எதிர்ப்பார்ப்பை வெளிப்படுத்துவதாக இருந்தாலும், இன்னொரு பக்கம், ஸ்டாலினுக்கு பிறகு வேறு யாருமே தலைவர்கள் திமுகவில் இல்லையா? விஜய் மட்டும்தானா? அதனால்தான் தம்பி வா என்று ஸ்டாலின் அழைக்கிறாரோ? என்ற சந்தேகத்தையும் கிளப்பி உள்ளது.

 உதயநிதி ஸ்டாலின்

உதயநிதி ஸ்டாலின்

அங்கே தன் தொகுதியில் உதயநிதி ஸ்டாலின், குடிசைகள், தெருக்கள் என ஒரு இடம் விடாமல் விழுந்து விழுந்து ஆய்வு செய்து கொண்டிருக்கும்போது, மூத்த மற்றும் சீனியர் அமைச்சர்கள் அதிரடிகளில் கலக்கி கொண்டிருக்கும்போது, ஸ்டாலினுக்கு பிறகு விஜய் என்ற ரீதியில் இந்த போஸ்டர்கள் வலம் வருவது, திமுகவினருக்கே தர்மசங்கடத்தை ஏற்படுத்தி வருகிறது..!

English summary
Will Actor Vijay joining DMK soon, Viral Posters on socials now
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X