"லேப் ரேட்".. விஜயை வைத்து பாஜக செய்யும் ஆசிட் டெஸ்ட்.. பின்னணியில் இவ்வளவு விஷயமா? அடடா!

Subscribe to Oneindia Tamil

சென்னை: இந்தியா முழுக்க வெறுப்பு அரசியலை செய்யும் சங்பரிவார் அமைப்புகளை ஏன் வெளிப்படையாக விஜய் எதிர்க்கவில்லை. வெளிப்படையாக இவர்களை எதிர்த்து விஜய் பேசுவாரா? என்று விஜயின் வருகை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் விமர்சனம் செய்துள்ளார்.

நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்கி உள்ளார். அவரின் தமிழக வெற்றி கழகம் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த கட்சிக்கான சின்னம் இன்னும் அறிவிக்கப்படவில்லை.

 Will Actor Vijay Tamizhaga Vetri Kazhagam talk against BJP and RSS? asks Rajagambeeran

விஜயின் வருகை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் விமர்சனம் செய்துள்ளார். அதில், தமிழ் சினிமாவில் இருந்து அரசியலுக்கு நடிகர்கள் வருவது இது முதல்முறை இல்லை. எம்ஜிஆர் ஏற்கனவே வந்திருக்கிறார். ஆனால் எம்ஜிஆர் சினிமா மட்டுமின்றி அதற்கு முன்பே.. கலைஞர், அண்ணாவுடன் பழகி இருக்கிறார். அரசியலோ பற்றி அனைத்தையும் நிர்வாக ரீதியாக கற்றுக்கொண்டார். அப்படி கற்றுக்கொண்டுதான் எம்ஜிஆர் வந்தார்.

பேட்டி: எம்ஜிஆருக்கு அப்போது இரண்டாம் கட்ட தலைவர்களாக பலர் நின்றனர். திமுகவில் இருந்து வெளியேறிய பலர் எம்ஜிஆருக்கு வழிகாட்டினர். அப்படி பல தளபதிகள் இருந்ததால் எம்ஜிஆர் வென்றார். அந்த பயிற்சி இல்லாமல் நேரடியாக அரசியலில் குதித்தால் அது பிரச்சனை ஆகும். 50 வயதில் ஒருவர் திடீரென சினிமாவிற்கு வந்து ஹீரோ ஆக முடியுமா? அப்படிதான் அரசியலும்.

அவரின் அறியாமையை பார்த்து வியக்கிறேன். அரசியலை இனி எப்படி விஜய் கற்றுக்கொள்ள முடியும். இனி எப்படி அவர் மக்களுடன் சேர்ந்து செயல்பட முடியும். நடிகருக்காக கூட்டம் வருகிறது என்பதற்காக அவர் வெல்ல முடியுமா? அவர் 10 சதவிகிதம் வாக்குகளை கூட பெற முடியும். ஆனால் அதை வைத்து அவர் என்ன செய்ய முடியும்.

விமர்சனம்: மதவாத, சாதிவாத அரசியலை தூக்கி எதிர்ப்பேன் என்று விஜய் அறிக்கையில் கூறுகிறார். இந்த அரசியலை செய்வது யார்? இந்தியா முழுக்க வெறுப்பு அரசியலை செய்யும் சங்பரிவார் அமைப்புகளை ஏன் வெளிப்படையாக விஜய் எதிர்க்கவில்லை. வெளிப்படையாக இவர்களை எதிர்த்து விஜய் பேசுவாரா? திராவிட இயக்கங்களின் கோட்பாட்டை மீண்டும் பேசுவேன் என்பது போல இவர் அறிக்கை வெளியிட்டுள்ளார். ஊழல் அரசியலை ஒழிப்பேன் என்று கூறுகிறார்.

இந்தியாவிற்கு பேராபத்து ஊழல.. மத பிரிவினைவாதமா? கார்பரேட் செய்யும் ஊழலை பற்றி இவர் பேசுவாரா? தனியார்கள் செய்யும் ஊழலை பற்றி இவர் பேசுவாரா? தமிழ்நாட்டில் ரஜினியை இறக்கி அரசியல் செய்ய பாஜக முயன்றது. ஆனால் அது எடுபடவில்லை.

அட்டாக்: இதனால் விஜயை களமிறக்கி அரசியல் செய்ய பாஜக பார்க்கிறது. அவரின் வீட்டிற்கு ரெய்டு வந்த பின் விஜய் சைலன்ட் ஆகிவிட்டார். முக்கியமாக பீஸ்ட் போன்ற படங்களில் இஸ்லாமிய வெறுப்பு பிரச்சாரம் செய்தவர். வருமான வரி சோதனைக்கு பின் அவர் பாதை மாறினார்.

அதேபோல் பாஜகவும் விஜய்யை விமர்சனம் செய்யவில்லை. எச் ராஜா கூட விஜயை பற்றி விமர்சனம் செய்யவில்லை. பல கோடி சம்பாதிக்கும் விஜய் அரசியலுக்கு வர என்ன காரணம்? அவர் என்ன தியாகியா? அவரின் வருகைக்கு பின் வேறு திட்டங்கள் உள்ளன, என்று விஜயின் வருகை குறித்து அரசியல் விமர்சகர் ராஜகம்பீரன் விமர்சனம் செய்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+