"அண்ணே.. அந்த ரிசார்ட்டுக்கு".. கேட்டதுமே எகிறிய விஜயபாஸ்கர்.. ஏன் என்னாச்சு!
விராலிமலையில் விஜயபாஸ்கர் வெல்வாரா என்ற எதிர்பார்ப்பு பெருகி வருகிறது
சென்னை: விராலிமலையை வெல்ல போவது யார் என்ற எதிர்பார்ப்பு நாளுக்கு நாள் பெருகி வரும் நிலையில், ஏகப்பட்ட டென்ஷனில் இருக்கிறாராம் அமைச்சர் விஜயபாஸ்கர்..!
சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரின் தொகுதி விராலிமலை ஆகும்.. இங்குதான் ஒவ்வொரு முறையும் போட்டியிடுவார்.. இப்போதும் களம் இறங்கி உள்ளார்.. இவருக்கு எதிராக திமுக சார்பில் தென்னலூர் பழனியப்பன் மறுபடியும் போட்டியிடுகிறார்.
இவர்கள் இருவருமே தொகுதியில் பலமானவர்கள்.. இருவருமே செல்வாக்கானவர்கள்.. இதைவிட ஒற்றுமை, இவர்கள் இருவருமே தேர்தல் என்று வந்துவிட்டால் சென்ட்டிமென்ட்டில் கசக்கி பிழிந்து எடுப்பவர்கள். இந்த முறை இவர்களில் வெற்றி யாருக்கு என்று சொல்ல முடியாத அளவுக்கு டஃப் உள்ளது.. காரணம், இவர்களது பிரச்சார பாணியை பார்த்து விராலிமலை மக்கள் அப்படியே விக்கித்து பார்த்தனர்.

பழனியப்பன்
பழனியப்பன், "உங்களுக்கே தெரியும், நான் இந்த 30 வருஷமாக இந்த தொகுதிக்குள் சென்றுவராத வீடே இல்லை.. வாழ்வோ, சாவோ, எனக்கு எல்லாமே நீங்கதான்.. அதனால என்னை வெற்றி பெற வைத்து விடுங்கள்.. விஜயபாஸ்கருக்கு அவங்க அப்பா, அண்ணன், எல்லாரும் இருக்காங்க, எனக்கு நீங்கதானே இருக்கீங்க.. நான் கண்ணீர் சிந்த மாட்டேன், மாறாக ரத்தத்தை சிந்தி உங்களுக்காக உழைப்பேன்" என்று சொல்லி கொண்டே கதறி கதறி அழுது, கட்சி துண்டால் முகத்தை துடைத்து கொண்டார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கரோ, "ஓட்டுக்காக நிறைய பேர் காலை பிடிப்பாங்க... கிளிசரினை கண்ணில் ஊத்தி அழுவாங்க.. ஆக்ஷன் காட்டுவாங்க.. எதையும் நம்பாதீங்க.. ஆனால், நான் 10 வருஷமா இந்த தொகுதி மக்களுக்காக உழைச்சு ஓடா தேஞ்சு, மாடா தேஞ்சு இருக்கேன்.. உங்க கண்ணுல தண்ணீர் வரக்கூடாதுன்னு தான் இந்த விஜயபாஸ்கர் ஓடி ஓடி உழைக்கிறான்.. கொரோனா காலத்தில் என்னுடைய உடல் எடை 7.5 கிலோ குறைந்து போயிடுச்சு.. எனக்கும் சுகர் இருக்கு.. பி.பி. இருக்கு.. மாத்திரை போடறேன்.. ஆனாலும் இயேசு சிலுவையை சுமந்தது போல் மக்களுக்கு உழைத்து கொண்டே இருக்கிறேன்.." என்றார்.

தேர்தல் ரிசல்ட்
இப்படி இருவரும் ஓட்டு கேட்டு வந்ததால்தானோ என்னவோ, யார் வெற்றி பெற போகிறார்கள் என்ற ஆர்வம் ஒட்டுமொத்த தமிழக மக்களிடமும் ஏற்பட்டு வருகிறது.. அதற்கான ரிசல்ட்டை நோக்கியும் காத்திருக்கும்போதுதான், ஒரு செய்தி விஜயபாஸ்கர் குறித்து கசிந்து வருகிறது..

நிர்வாகிகள்
கடந்த 2016-ல் தேர்தல் முடிந்ததும், கட்சியின் நிர்வாகிகள், முக்கிய தொண்டர்கள் சிலரை விஜயபாஸ்கர் டூர் அழைத்து சென்றாராம்.. அப்போது குற்றாலம் அழைத்து சென்று விருந்து வைத்து அவர்களை தட்டி கொடுத்து பாராட்டியதாக சொல்லப்படுகிறது. அதனால், இந்த முறையும், நிர்வாகிகள் சிலர் விஜயபாஸ்கரை சந்தித்து பேசினார்களாம்.

டென்ஷன்
"அண்ணே.. போன முறை மாதிரியே, இந்த முறையும் நம்ம ஆட்களை எங்காச்சும் ரிசார்ட்டுக்கு கூட்டிட்டு போய் விருந்து வெக்கணும், ஏன்னா இந்த முறையும் நீங்கதான் ஜெயிக்க போறீங்க" என்றார்களாம். இதை கேட்டதும் விஜயபாஸ்கர் கொந்தளித்து விட்டாராம்.. நானே, ரிசல்ட் எப்படி வரப்போகுதோன்னு டென்ஷனில் இருக்கேன்.. இது வேறயா" என்று பொரிந்து தள்ளிவிட்டாராம்..! இன்னும் ஒருசில நாட்கள்தானே.. பார்ப்போம் ரிசல்ட் என்னாக போகிறது என்று!












Click it and Unblock the Notifications